Daily Dose - Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Daily Dose - Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜனவரி, 2025

மனந்திரும்புதலற்ற ஞானஸ்நானம்!

 *மனந்திரும்புதலற்ற ஞானஸ்நானம்!*

இரட்சிக்கப்படுகிறவர்களை சபையில் சேர்க்கும் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள்.

யூதேயா மற்றும் எருசலேம் நகரத்தார், தங்கள் *பாவங்களை அறிக்கையிட்டு* யோவானிடம் சென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். மத். 3:5-6; மாற்கு 1:5

எல்லா நீதியையும் *நிறைவேற்ற* சுமார் 30வது வயதில் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்தார். மத். 3:15, லூக். 3:23

*விசுவாசித்து, தனது பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி*, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாவமன்னிப்பிற்கென பவுல் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். அப். 22:14-16 

*விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம்* பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்று மாற்கு மூலம் பரிசுத்த ஆவியானவர் எழுதி வைத்துள்ளார். மாற்கு 16:16

சத்தியத்திற்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் எடுப்பவர்கள், *பாவத்திற்கு மரித்ததால்* கிறிஸ்துவினுடைய மரணத்திற்கும் அடக்கத்திற்கும் உட்படுகின்றனர் என்று பவுல் மூலமாய் பரிசுத்த ஆவியானர் எழுதினார். ரோ. 6:1-4

தனது *தவறை உணர்ந்த* சிறைச்சாலை அதிகாரி இரவு என்று கூட பாராமல் உடனடியாய் மனம் மாறினார், கட்டளைக்கு கீழ்படிந்தார், அப்பொழுது தானே ஞானஸ்நானமும் பெற்றுக்கொண்டார். அப். 16:33

ஜலத்தினால் மாத்திரமல்ல, ஆவியினாலும் பிறக்கவேண்டியது அவசியம் என்று இயேசு கிறிஸ்து தெளிவுப்படுத்தினார். யோ. 3:5

சுவிசேஷ வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள், *தங்கள் செயல்பாட்டை உணர்ந்து, மனந்திரும்பி, மனஸ்தாபப்பட்டு* உடனடியாய் கட்டளைக்குக் கீழ்படிந்து தங்களது பாவங்கள் மன்னிக்கப்படும்படி ஞானஸ்நானம் பெற்றனர். அப். 2:36-41

ஏதோ எல்லாரும் எடுக்கிறார்களே, நாமும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, *மனந்திரும்பாமலே ஞானஸ்நானம்* பெற வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை விஷப்பாம்புகள் என்று யோவான் கண்டித்தார். மத். 3:7-8

முண்டியடித்து ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டதால், அன்று வரை “ஐயோ அம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களது புதிய மாற்றமாக, உட்கார்ந்தாலும் எழுந்தாலும், “ஆண்டவரே, கர்த்தாவே” என்று வாயால் சதா உச்சரிக்கத் துவங்கி தமக்கு தாமே கிறிஸ்தவன் என்று மெச்சிக்கொண்டாலும், கிறிஸ்தவர் என்று ஊரே அங்கீகரித்தாலும்... *முறையான மனந்திரும்புதல்* இல்லையெனில் அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வீட்டு வாசலைக்கூட கடக்க முடியாது என வசனம் அவர்களை அங்கீகரிக்கவே மறுக்கிறது. மத். 7:21 

இப்படி எந்த வகையிலும் உட்பட வாய்ப்பில்லாத பிஞ்சு குழந்தைக்கு ஞானஸ்நானம் என்ற பெயரில் வேதம் அறியாதவர்கள் கொடுக்கும் பொழுது - வசனத்தை எடுத்துச்சொல்லி தவறு என்று போதிக்க இப்பொழுது பலர் அறிந்துள்ளனர். 

சொல்வதில் அல்ல செயலிலும் மாற்றம் வேண்டும் என்பதை மறந்துபோகக்கூடாது !! யாக். 1:22; ஓசியா 8:2-3; ரோ. 2:13; லூக்கா 6:46; 13:25;  தீத்து 1:16; யாக். 2:20-26

எப்படியாயினும் தங்களுக்குப் படி அளக்கும் எஜமானர்களைக் குஷிப்படுத்திவிடவேண்டும் என்ற முனைப்பிலோ என்னவோ தெரியவில்லை... “இவருக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறோம் - ஜெபித்துக்கொள்ளுங்கள்” என்று தாங்கள் ஞானஸ்நானம் கொடுத்தவர்களுடன் நின்று எடுத்துக்கொண்ட சிலரது புகைப்படங்களில்; அவர்களது *மதத்தைக் குறிக்கும் குறியீடு நெற்றியில் அப்படியே இருந்த பொழுதும்* அவர்களுக்கு ஞானஸ்நானத்தை கொடுத்தவர்களை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது.

கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக அசையாமல் நிற்கவேண்டும் என்ற வைராக்கியம் எங்கே போனது? 

*சுய ஆதாயத்திற்காய் நாம் ஓடுவதை எப்போது நிறுத்துவது?* 

உண்மையை ஆராய மனமில்லாமல் சிலர் சொல்லும் கருத்துக்களில் தங்களது நிலையையே மாற்றிக்கொண்டு ஊரோடு ஒத்துப்போகிற மனப்பான்மை இருந்தால் - *சத்தியத்திற்கு எப்படி போராடுவது?* 

வேற்று ஜனம் உள்ளே வந்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச்சொன்னாலும் தங்கள் கதவை அடைத்துக்கொண்டு அவர்களை சமாதானப்படுத்த அப்படியே சொல்லிவிடுவரோ என்ற எண்ணமும் உள்ளது? 1சாமு. 15:24(c)

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை கடைபிடிக்கிறோம் என்று வாயால் சொல்வது போதாது... செயலிலும் உண்மை இருக்கவேண்டும். 

*நமது செயலுக்கான அங்கீகாரத்தை சுவாசமுள்ள மனிதர்களிடத்திலிருந்து அல்ல தேவனிடத்திலிருந்து வரட்டும்*. அப். 5:29; 4:19. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*

*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

வெள்ளி, 29 நவம்பர், 2024

கிறிஸ்துவின் சபை என்ற சபை?

 கிறிஸ்துவின் சபை என்ற சபை?

- by Eddy Joel Silsbee

 
2024ம் வருடம் விசித்திரத்திற்கு பஞ்சமின்றி துவங்கியிருக்கிறது. 
 
(1)
வருடத்தின் ஆரம்பத்தில் மற்றவர்களின் கால்களை கழுவி ஒருவர் தனது தாழ்மையை வெளிப்படுத்தினார். நல்ல வேளையாக வாரத்தின் முதல் நாளில் அதை அவர் செய்யவில்லை!! கிறிஸ்து மரிக்க போகிறார் என்று தெரிந்ததும், அடுத்து யார் பரலோகத்தில் பெரியவனாக இருக்கவேண்டும் என்ற விவாதமே அந்த சூழல். தன் அம்மாவையும் சிபாரிசுக்கு அழைத்தனர். மத். 20:18-28.
இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின் கிறிஸ்தவத்தில்; தங்களது தாழ்மையை வெளிப்படுத்த அப்போஸ்தலர்கள் ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவவேயில்லை. நாமும் செய்ய வேண்டும் என்று கிறிஸ்து விரும்பியிருந்தால் அப்போஸ்தலர்கள் வலியுறுத்தியிருப்பார்கள். கிறிஸ்துவே கால்களை கழுவியப் பின்னரும் யூதாஸ் மனம் மாறவில்லை !! கிறிஸ்தவம் என்பது செயலில் அல்ல இருதயத்திலும் இருக்கவேண்டும். அவசியமின்றி காட்சிப்படுத்தப்பட்ட இந்த உதாரணம் வளர்ந்து வருபவரினிடையே தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. 
 
(2)
இன்னொரு சிறுபான்மைக் கூட்டம், சொற்ப லாபத்திற்காக அரசுவிடம் சென்று உலக சட்டத்தின் பார்வையில் கிறிஸ்துவின் சபையை சிறுபான்மையாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. 
 
ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் சரீரத்தில் *ஒரு சிறு பங்கு /உறுப்பு மாத்திரமே*.
தங்களது ட்ரஸ்ட்டை சிறுபான்மை கூட்டமாக அங்கீகரியுங்கள் என்று முயற்சிக்காமல்;
உன்னதமான *கிறிஸ்துவின் சபையை* சிறுபான்மையாக அறிவியுங்கள் என்று அரசாங்கத்திடம் மனு கொடுக்க யார் அதிகாரம் கொடுத்தது?
கிறிஸ்துவே கிறிஸ்துவின் சபைக்கு தலை.
அதைக்குறித்து தீர்மானம் எடுக்க அவருக்கும் அப்போஸ்தலருக்கும் தான் அந்த அதிகாரம் உள்ளது. 
 
ஊழியர்களாகிய நீங்களும் நானும் சபைக்கு தேவையான ஊழியத்தை செய்யும் வேலைக்காரர்கள் மாத்திரமே !! 
 
அதை மறந்து இப்படிப்பட்ட தவறான செய்கையில் ஈடுபடுவது அபத்தம்.
இந்த கூட்டு முயற்சியை
- வளரும் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுப்பதிலும்,
- சட்டத்தின் பார்வையில் எப்படி சபையை நடத்தவேண்டும் என்றும்,
- எப்படி நடத்தக்கூடாது என்றும்,
- வேதாகம ரீதியில் உட்கட்டமைப்பு எப்படி பலப்படுத்தவேண்டும் என்றும்,
- தீர்க்கமான சட்டக்குழுவை அமைத்து, மதக்கலவரங்களில் அகப்படும் பிராந்திய சபைகளுக்கு தேவையான சட்ட போராட்டங்களில் சட்டத்துடன் போராடுவதற்கும்,
- பிராந்திய சபைகளுக்கு சட்ட பாதுகாப்பு / ஆலோசனை கொடுப்பதிலும்;
- ஊழியர்களை தேசத்தின் சட்டத்திட்டங்களில் பயிற்றுவிப்பதற்கும்;
போன்ற அநேக காரியங்களில் கவனம் செலுத்தலாம். 
 
இந்த ஐக்கியம் பூரணமாய் பெலப்படும்பொழுது அரசாங்கமே வந்து தங்களது கோரிக்கையை வைக்கும் சூழல் உருவாகும்.
 
அதைவிட்டு, இப்படி அரசாங்கத்திடம் *கிறிஸ்துவின் சபை* என்ற மேலான தேவனுடைய இராஜ்யத்தையே அடகு வைக்க முற்படக்கூடாது. அப்படிப்பட்ட எந்த அதிகாரமும் எவருக்கும் கிடையாது. 
 
சபைகளில் மூப்பர்கள் என்ற பதமே இக்காலத்தில் காண்பது அரிதாகிவிட்டது.
வயதாகிவிட்டதென்றும், மூப்பர்கள் என்ற பதவி அவசியம் என்றும் சிலரை மேலே உட்காரவைத்துவிட்டு ஊழியர்களே அவர்களுக்கு தலைவராக செயல்படுவதால் இந்த அவலம்.
 
அதிகாரிகளாகவும் எஜமானர்களாகவும் ஊழியர்கள் ஓங்கி நிற்பது வேதாகம முறைப்படி தவறு அல்லவா? 
 
ஜெபிப்பதிலும் போதிப்பதிலும் தங்களது கவனத்தை விட்டு நிர்வாகத்தில் ஊழியர்கள் இறங்கக்கூடாது. 
 
இவர்களது இந்த தவறான முயற்சியில் *ஒருவேளை அரசாங்கம் கிறிஸ்துவின் சபையை சிறுபான்மை என்ற பட்டியலில் கொண்டுவந்தால்*:
அரசாங்கத்தின் பார்வையில் ஒவ்வொரு பிராந்திய சபையின் சுயாட்சியும் கேள்விக்குறியாகும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
அரசாங்கம் உங்களது கதவை தட்டி சர்டிபிகேட் கேட்கும்.
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் கிறிஸ்துவின் சபை என்ற பெயரை பயன்படுத்துவதாயிருந்தால் அவர்கள் தங்களது வரையறையை உங்களுக்கென்று வகுப்பார்கள். 
 
பிற்காலத்தில் விக்கிரகத்தை பற்றும் வேறு அரசாங்கம் வராமல் போய்விடுமோ?
இந்த அரசாங்கம் ஏறெடுக்கும் எந்த முயற்சியும் வருங்காலத்தில் வரும் எந்த அரசாங்கத்திற்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.
 
நாம் எப்படி சபையை நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை அந்நியனும் புறமதத்தினரும் சட்டத்திட்டத்தை நமக்கு சொல்லிக்கொடுப்பார்கள். 
 
சொற்ப லாபத்திற்கும் கட்டிட செலவிற்கும் அவர்களிடம் கையேந்தி சிலர் லாபம் அடைந்தாலும் மற்ற அனைத்து கிறிஸ்துவின் சபை பெயர் பலகைகளும் அரசாங்க சட்டத்திற்கு உட்படவேண்டிவரும். 
 
நமக்கென்ன? என்று இந்த குழுவில் இடம்பெறாத மற்ற பிராந்திய சபையின் ஊழியரும் மூப்பரும் அமைதியாய் நில்லாமல் அனுபவத்தில் மூத்திருக்கும் ஒவ்வொரு ஊழியரும் இதை கவனத்தில் கொண்டு தங்கள் கையை உயர்த்துங்கள். 
 
இந்த கூட்டு முயற்சியை வைத்து அரசாங்கத்தில் ஆதாயம் பெறுவதை விட்டு;
விசுவாச வைராக்கியத்திற்கு பயன்படுத்துங்கள். 
 
எத்தனையோ வகையில் வருங்கால சந்ததியை கிறிஸ்துவிற்கென்று கட்டியெழுப்ப இதை முன்னெடுங்கள். 
 
ஒருவேளை இந்த காலம் கடந்து போனாலும் இன்னுமொரு எஸ்தரும் மொர்தெகாயும் இல்லாமற் போவார்களோ? 
 
இணைந்து சீர் செய்யப்படவேண்டிய கட்டாயக் காலத்தில் இருக்கிறோம்.
*குறிப்பு* : என்ன நடந்தாலும், கிறிஸ்துவின் சபை எப்போதும் தனித்துவமாய் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கும். அது ஒரு போதும் கறைப்படுவதில்லை. ஆகவே அதை எவரும் *மீட்டு எடுக்கவேண்டிய அவசியமில்லை*. அது எப்போதும் சீராய், கிரமமாய், தேவனுடைய வார்த்தையின்படி இயங்கிக்கொண்டே தான் இருக்கும். 
 
எந்த புரிதலில் நாம் இருக்கிறோம் என்பதே காரியம்.
கிறிஸ்துவின் சபையில் இருக்கிறோமா அல்லது கிறிஸ்துவின் சபை என்ற சபையில் இருக்கிறோமா?
 
செயலில் இறங்கவேண்டிய நேரம் இது. மௌனமாய் இராதேயுங்கள். 
 
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
யோவான் 6:67... கிறிஸ்துவினுள் இருந்த அந்த வைராக்கியத்திற்குள் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் !
 
இதன் 68ம் வசனம் இன்றைய நாட்களில் நமக்குறிய கேள்வி!
 
எடி ஜோயல் சில்ஸ்பி
ஊழியர், கிறிஸ்துவின் சபை
கணியாகுளம்.
Print Friendly and PDF

ஞாயிறு, 5 மே, 2024

மனதுருகும் தேவன்


 

*மனதுருகும் தேவன்*

by : Eddy Joel Silsbee

 

இரக்கமும் மனவுருக்கமும் நிறைந்த நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

 

நாம் அவருடைய பிள்ளைகள். அவர் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை. உபா. 31:6

 

நம்முடைய தேவன் எப்போதும் நம்முடனே இருக்கிறவர். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களாயிருக்கிறோம். சங். 95:7

 

நமக்கு ஏற்படும் எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நம்மை விடுவிக்கும்படிக்கு அவர் நம்மீது மனதுருகுபவர். சங். 86:15

 

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணுவதில்லை. தமது முகத்தை அவர் நமக்கு மறைப்பதுமில்லை. அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது நம்மை விசாரிப்பவர் அவர். சங். 22:24

 

அவரது மனதுருக்கத்தை நாம் பெறவேண்டுமெனில் நாம் மனந்திரும்புவது அவசியம்.

 

தவறுகளைக் அடையளப்படுத்தி,

அதைக் களைந்து விட்டு

மனந்திரும்பி அவரை ஆராதித்த ஜனங்களின் மீது அவர் மனதுருகினார் என்கிறது வேதம். நியா. 10:16

 

தவறுகளிலிருந்து முதலாவது நாம் நம்மை விலக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஏசா. 55:7, 1யோ. 5:18, யாக். 4:8

 

சுய மனந்திரும்புதலின்றி தேவனை தேடி எந்த பிரயோஜனமும் இல்லை !! நேர விரயமே…

 

அவர் நம்மீது மனதுருகி நம்மை காக்க அவர் நமக்காய் காத்துக்கொண்டிருக்கிறார். 1சாமு. 30:18

 

சுயசோதனை முதலாவது வரட்டும். ஆசீர்வாதம் தானாக பின்தொடரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/xYI2i9pzsR8

 

வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

 

Print Friendly and PDF

சனி, 10 ஜூன், 2023

சுய முயற்சியினால் அல்ல

 


*சுய முயற்சியினால் அல்ல*

by : Eddy Joel Silsbee

 

கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துகள்.

 

யாருக்காக வேலை செய்பவர்களாய் இருந்தாலும்,

சம்பளமோ வருமானமோ எவர் மூலமாக நமக்கு வந்துச் சேர்ந்தாலும்,  அனைத்து கணக்குகளும் நம்முடைய தேவனிடத்தில் இருந்தே வருகிறது.

 

ஆண்டவரே,

இந்த வேலை வேண்டும் என்று,

நம் கணக்கை அவரிடத்திலேயே துவக்கத்தில் வேண்டி விரும்பி பெற்றோம்.

 

நாம் “*உழைப்பது தேவனுக்காக*” என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

 

வேலையை கொடுத்தது அவர்.

 

நாம் செய்யும் வேலைக்கேற்ற பலனை நமக்கு நிச்சயம் தருவார்.  

 

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோ. 3:23-24

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +918144776229 (India)

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

 

வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Vuii7khls2g

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF