*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
ஒரு குற்றமும் இல்லாமல் இருந்த போதும், சிலுவையை சுமக்க செய்த போது, பொறுமையாக இருந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்..
ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே –
மற்றவர்களுக்கு எதிராக *நாம்* செய்த தவறுக்காக *அவர்களிடத்தில்* ஒப்புரவாக வேண்டுமாம்.. (மத். 5:24)
ஒருவேளை,
அவர்கள் *நமக்கு எதிராய் தவறு செய்திருந்தால்*...?
அப்போதும் –
ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர்
– *நாம் தான்* போய் சரி செய்ய முயற்சிக்க வேண்டுமாம் !! (மத். 18:15-17)
நம் ஜெபம் பரலோக தேவனிடத்தில் கேட்கப்பட வேண்டுமெனில், இந்த வரைமுறை நம் ஞாபகத்தில் இருக்கவேண்டியவை !!
எவருடைய ஜெபம் கேட்கப்படவேண்டுமோ, அவரே முதலில் தன்னை ஒப்புரவாக்கிக்கொள்ள வேண்டும் !
மனிதனோடு முரண்டு பிடித்துக்கொண்டு, இருதயத்தில் கசப்பை சுமந்துக்கொண்டிருந்தால்,
*பரிசுத்த* ஆவியானவர் அந்த இருளான இருதயத்தில் வாசமாயிருப்பதற்கு இடமில்லையே !!
கோபமும், சண்டையும், எரிச்சலும், முகம் சுளிப்பதும், விரோதம் பாராட்டுவதும் - கிறிஸ்தவமே அல்ல. கலா.5:20
தாழ்ந்துபோவதும்,
விட்டுக்கொடுப்பதும்,
பொறுத்துக்கொள்வதும்,
அமைதலாயிருப்பதுமே - கிறிஸ்தவர்களின் தலையாய பண்பு. கலா. 5:22-23
ஒருவர் காணும் போது,
நம்மையல்ல, சிலுவை பரியந்தமும் தம்மை தாழ்த்தின இயேசு கிறிஸ்துவையே மற்றவர்கள் காணவேண்டும். கலா. 3:27, பிலி. 2:8
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக