*#1243 – கி.பி. 33-ஆம் ஆண்டில் திருச்சபை/இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை வரலாற்று வரிசைப்படி காண முடியுமா?*
*பதில்* : கதையோ கற்பனையாகவோ அல்ல, வேதாகம நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவை என்பதால், வரலாற்று ரீதியாக துல்லியமாக கணக்கிட முடியும்.
கிறிஸ்துவின் பிறப்பு, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவை வெறும் மதக் கதைகள் அல்ல; அவை வரலாற்று உண்மைகள்.
சுமார் கி.பி 33ம் ஆண்டில் அதாவது நியாயப்பிரமாணத்தின்படி யூதர்களின் பண்டிகையான பஸ்கா பண்டிகைக்கு பின் வந்த 50-வது நாளான பெந்தெகோஸ்தே நாளில் உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து தமது இராஜ்யத்தை / புதிய ஏற்பாட்டுச் சபை வெளிப்படையாக ஆரம்பமான / ஸ்தாபித்த நிகழ்வை அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் காணமுடிகிறது.
தானியேல் துவங்கி அப்போஸ்தலர் 2ம் அதிகாரம் அதாவது கி.பி 33ம் ஆண்டு வரையிலான காலவரிசையை கீழே பட்டியலிடுகிறேன்:
1- தானியேல் புத்தகம் — நேபுகாத்நேசரின் யூதா மீதான படையெடுப்பின் போது தானியேல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டார் (கி.மு. சுமார் 605) — தானியேல் 1:1–6; 2 இராஜாக்கள் 24:1–2.
2- பாபிலோனிய சிறையிருப்பின் போது தானியேல் பாபிலோனிய அரசவையில் பணியாற்றினார் (கி.மு. 605–539) — தானியேல் 1–6.
3- பாபிலோனால் எருசலேமும் தேவாலயமும் அழிக்கப்பட்டது (கி.மு. 586) — 2 இராஜாக்கள் 25:1–10; எரேமியா 39:1–10.
4- நாடுகடத்தப்பட்ட காலத்தில் எசேக்கியேல், எரேமியா, மற்றும் தானியேல் ஆகியோரின் ஊழியங்கள் (கி.மு. சுமார் 626–530; இடையிடையே நிகழ்ந்த ஊழியங்கள்) — எரேமியா 1:1–3; எசேக்கியேல் 1:1–3; தானியேல் 1:1–6.
5- பெல்ஷாத்சார் ஆட்சியும் பாபிலோனின் வீழ்ச்சியும் (கி.மு. சுமார் 553–539) — தானியேல் 5.
6- யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி, பாரசீக ஆட்சியின் கீழ் ஆலயத்தை மீண்டும் கட்டத் தொடங்கினர் (கி.மு. 538–536) — எஸ்ரா 1:1–5; எஸ்ரா 3:8–13.
7- ஆலயத்தை மீண்டும் கட்ட முதலாம் தரியுவின் இரண்டாவது ஆணை; ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது (கி.மு. 520–516) — எஸ்ரா 6:1–15; ஆகாய் 1:1–15.
8- எஸ்ரா இரண்டாவது குழுவை எருசலேமுக்குத் திரும்ப அழைத்துச் செல்கிறார் (கி.மு. சுமார் 458) — எஸ்ரா 7:1–10.
9- முதலாம் அர்தசஷ்டா, எருசலேமின் மதில்களை மீண்டும் கட்ட நெகேமியாவை நியமிக்கிறார் (கி.மு. 445) — நெகேமியா 2:1–8.
10- எருசலேமின் நகர மதில் கட்டி முடிக்கப்பட்டது (கி.மு. சுமார் 444) — நெகேமியா 6:15–16.
11- மகா அலெக்சாண்டர் எருசலேமுக்கு வருகை தந்த பிறகு (கி.மு. 332) யூதர்கள் கிரேக்க/மக்கதோனியா ஆட்சியின் கீழ் வந்தனர் — இது தானியேல் 8:5–8, 21 உடன் தீர்க்கதரிசன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.
12- யூதேயா தாலமிகளாலும் (Ptolemies) (கி.மு. 323–198), பின்னர் செலூக்கிய சிரியர்களாலும் (Seleucid Syrians) (கி.மு. 198–167) ஆளப்பட்டது — தானியேல் 11:5–20.
13- நான்காம் அந்தியோகஸ் எப்பிபானஸின் (Antiochus IV Epiphanes) கீழ் துன்புறுத்தல் (கி.மு. 175–164) — தானியேல் 8:9–14; 11:21–35.
14- யூதாஸ் மக்கபேயு தலைமையிலான மக்கபேயர் கிளர்ச்சி / Maccabean Revolt led by Judas Maccabeus (கி.மு. 167–160) — தானியேல் 11:32–35-க்கான பின்னணி.
15- பொம்பேயு (Pompey) நகரைக் கைப்பற்றிய பிறகு ரோம் எருசலேமைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது (கி.மு. 63) — தானியேல் 2:40; 7:7 உடன் தீர்க்கதரிசன ரீதியாகத் தொடர்புடையது.
16- ஏரோது மகா ராஜா ஆட்சி செய்து ஆலயத்தைப் புனரமைத்தார் (கி.மு. 37–4) — மத்தேயு 2:1–18; யோவான் 2:20.
17- யோவான் ஸ்நானனின் பிறப்பு (சுமார் கி.மு. 5–4) — லூக்கா 1:5–25; 57–80.
18- இயேசு கிறிஸ்துவின் பிறப்பு (சுமார் கி.மு. 4–3) — மத்தேயு 1:18–25; லூக்கா 2:1–20.
19- கிறிஸ்துவின் ஊழியமும் சிலுவை மரணமும் (கி.பி. 30–33) - மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19.
20- இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அப்போஸ்தல ஊழியம் தொடங்குகிறது (கி.பி. 30–33) — மத்தேயு 28:18–20; அப்போஸ்தலர் 1:1–11.
21- ஸ்தேவான் கல்லெறியப்பட்டதும், அப்போஸ்தலனாகிய பவுல் மனந்திரும்பியதும் (கி.பி. 34–36) — அப்போஸ்தலர் 7:54–60; அப்போஸ்தலர் 9:1–19.
22- அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 2: பெந்தேகோஸ்தே, பரிசுத்த ஆவியின் வருகை, மற்றும் திருச்சபையின் தொடக்கம் (கி.பி. 33) — அப்போஸ்தலர் 2:1–47.
பி.கு: கிறிஸ்து பிறப்பு எவ்வாறு கிமு 4-3 என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விளக்கத்தையும் கீழே பதிவிடுகிறேன்:
“கி.மு / கி.பி” (BC / AD) ஆண்டுக்கணக்கானது, இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்த கணக்கை அமைத்தவர் Dionysius Exiguus என்பவர். அவர் ஆண்டுகளை கணக்கிடும்போது சிறிய தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
அதனால் தான் பல அறிஞர்கள் இயேசுவின் பிறப்பை கி.மு. 6–4 காலப்பகுதியில் வைத்துக் கணக்கிடுகிறார்கள்.
இதற்கான முக்கிய காரணங்கள்:
பெரிய ஏரோது எனப்படும், Herod the Great வாழ்ந்த காலத்தில்தான் இயேசு பிறந்தார் என்று மத்தேயு 2-ம் அதிகாரம் கூறுகிறது. வரலாற்று ஆதாரங்களின்படி ஏரோது ராஜா கி.மு. 4-ல் இறந்தார்.
இயேசு பிறந்த பிறகு தான் ஏரோது பெத்லகேமில் குழந்தைகளை கொல்ல உத்தரவிட்டார். ஆகையால் இயேசுவின் பிறப்பு ஏரோது இறப்பதற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும்.
வேதாகம ஆதாரங்கள்:
மத்தேயு 2:1 - “ஏரோது ராஜாவின் நாட்களில் இயேசு பிறந்தார்.”
லூக்கா 1 – யோவான் ஸ்நானன் மற்றும் இயேசுவின் பிறப்புகளை இணைக்கிறது.
லூக்கா 2:1–2 - அகஸ்து ராயனின் கணக்கெடுப்பு பற்றிக் கூறுகிறது.
எனவே:
“யோவான் ஸ்நானனின் பிறப்பு — சுமார் கி.மு. 5–4”
“இயேசு கிறிஸ்துவின் பிறப்பு — சுமார் கி.மு. 4–3”
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தது மெய்யான காரியம்.
அவர் மீண்டும் வருவதும் நிச்சயம்.
ஆகவே, நமது பாவங்களை மன்னித்து மீட்டெடுக்க வந்த இரட்சகரை உண்மையாய் பற்றிக்கொண்டு நமது நித்திய வாழ்வை சுதந்தரிப்போம். கற்பனை கதைகளை நித்தியமான நரகத்தினுள் நுழைந்து விட வேண்டாம்!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
-------------------------*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக