*மனந்திரும்புதலற்ற ஞானஸ்நானம்!*
இரட்சிக்கப்படுகிறவர்களை சபையில் சேர்க்கும் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள்.
யூதேயா மற்றும் எருசலேம் நகரத்தார், தங்கள் *பாவங்களை அறிக்கையிட்டு* யோவானிடம் சென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். மத். 3:5-6; மாற்கு 1:5
எல்லா நீதியையும் *நிறைவேற்ற* சுமார் 30வது வயதில் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்தார். மத். 3:15, லூக். 3:23
*விசுவாசித்து, தனது பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி*, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாவமன்னிப்பிற்கென பவுல் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். அப். 22:14-16
*விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம்* பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்று மாற்கு மூலம் பரிசுத்த ஆவியானவர் எழுதி வைத்துள்ளார். மாற்கு 16:16
சத்தியத்திற்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் எடுப்பவர்கள், *பாவத்திற்கு மரித்ததால்* கிறிஸ்துவினுடைய மரணத்திற்கும் அடக்கத்திற்கும் உட்படுகின்றனர் என்று பவுல் மூலமாய் பரிசுத்த ஆவியானர் எழுதினார். ரோ. 6:1-4
தனது *தவறை உணர்ந்த* சிறைச்சாலை அதிகாரி இரவு என்று கூட பாராமல் உடனடியாய் மனம் மாறினார், கட்டளைக்கு கீழ்படிந்தார், அப்பொழுது தானே ஞானஸ்நானமும் பெற்றுக்கொண்டார். அப். 16:33
ஜலத்தினால் மாத்திரமல்ல, ஆவியினாலும் பிறக்கவேண்டியது அவசியம் என்று இயேசு கிறிஸ்து தெளிவுப்படுத்தினார். யோ. 3:5
சுவிசேஷ வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள், *தங்கள் செயல்பாட்டை உணர்ந்து, மனந்திரும்பி, மனஸ்தாபப்பட்டு* உடனடியாய் கட்டளைக்குக் கீழ்படிந்து தங்களது பாவங்கள் மன்னிக்கப்படும்படி ஞானஸ்நானம் பெற்றனர். அப். 2:36-41
ஏதோ எல்லாரும் எடுக்கிறார்களே, நாமும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, *மனந்திரும்பாமலே ஞானஸ்நானம்* பெற வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை விஷப்பாம்புகள் என்று யோவான் கண்டித்தார். மத். 3:7-8
முண்டியடித்து ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டதால், அன்று வரை “ஐயோ அம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களது புதிய மாற்றமாக, உட்கார்ந்தாலும் எழுந்தாலும், “ஆண்டவரே, கர்த்தாவே” என்று வாயால் சதா உச்சரிக்கத் துவங்கி தமக்கு தாமே கிறிஸ்தவன் என்று மெச்சிக்கொண்டாலும், கிறிஸ்தவர் என்று ஊரே அங்கீகரித்தாலும்... *முறையான மனந்திரும்புதல்* இல்லையெனில் அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வீட்டு வாசலைக்கூட கடக்க முடியாது என வசனம் அவர்களை அங்கீகரிக்கவே மறுக்கிறது. மத். 7:21
இப்படி எந்த வகையிலும் உட்பட வாய்ப்பில்லாத பிஞ்சு குழந்தைக்கு ஞானஸ்நானம் என்ற பெயரில் வேதம் அறியாதவர்கள் கொடுக்கும் பொழுது - வசனத்தை எடுத்துச்சொல்லி தவறு என்று போதிக்க இப்பொழுது பலர் அறிந்துள்ளனர்.
சொல்வதில் அல்ல செயலிலும் மாற்றம் வேண்டும் என்பதை மறந்துபோகக்கூடாது !! யாக். 1:22; ஓசியா 8:2-3; ரோ. 2:13; லூக்கா 6:46; 13:25; தீத்து 1:16; யாக். 2:20-26
எப்படியாயினும் தங்களுக்குப் படி அளக்கும் எஜமானர்களைக் குஷிப்படுத்திவிடவேண்டும் என்ற முனைப்பிலோ என்னவோ தெரியவில்லை... “இவருக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறோம் - ஜெபித்துக்கொள்ளுங்கள்” என்று தாங்கள் ஞானஸ்நானம் கொடுத்தவர்களுடன் நின்று எடுத்துக்கொண்ட சிலரது புகைப்படங்களில்; அவர்களது *மதத்தைக் குறிக்கும் குறியீடு நெற்றியில் அப்படியே இருந்த பொழுதும்* அவர்களுக்கு ஞானஸ்நானத்தை கொடுத்தவர்களை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது.
கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக அசையாமல் நிற்கவேண்டும் என்ற வைராக்கியம் எங்கே போனது?
*சுய ஆதாயத்திற்காய் நாம் ஓடுவதை எப்போது நிறுத்துவது?*
உண்மையை ஆராய மனமில்லாமல் சிலர் சொல்லும் கருத்துக்களில் தங்களது நிலையையே மாற்றிக்கொண்டு ஊரோடு ஒத்துப்போகிற மனப்பான்மை இருந்தால் - *சத்தியத்திற்கு எப்படி போராடுவது?*
வேற்று ஜனம் உள்ளே வந்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச்சொன்னாலும் தங்கள் கதவை அடைத்துக்கொண்டு அவர்களை சமாதானப்படுத்த அப்படியே சொல்லிவிடுவரோ என்ற எண்ணமும் உள்ளது? 1சாமு. 15:24(c)
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை கடைபிடிக்கிறோம் என்று வாயால் சொல்வது போதாது... செயலிலும் உண்மை இருக்கவேண்டும்.
*நமது செயலுக்கான அங்கீகாரத்தை சுவாசமுள்ள மனிதர்களிடத்திலிருந்து அல்ல தேவனிடத்திலிருந்து வரட்டும்*. அப். 5:29; 4:19.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*
*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக