*#1244 - முதல் உடன்படிக்கையின் காலத்திற்கு முன்பு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை எங்கு செல்ல வேண்டும் என்பது எப்படி கணக்கிடப்பட்டது?*
*பதில்* : இரட்சிப்பு எப்போதும் விசுவாசத்தினால்தான். ஆதியாகமம் 15:6
லூக்கா 16:19-31ன்படி ஏழை லாசரு ஆபிரகாமின் மடி (பரதீசு) சென்றான். ஐசுவரியவான் வேதனையான (பாதாளம்) இடத்திற்குச் சென்றான். இரண்டிற்கும் இடையில் பெரிய பிளவு இருந்தது.
இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த பிறகு இரட்சிப்பு முழுமையாக நிறைவேற்றப்பட்டது.
எபிரெயர் 9:15 - முதல் உடன்படிக்கையின் கீழிருந்த மீறுதல்களுக்காகவும் மீட்பை உண்டாக்கினார். அதாவது, இயேசுவின் சிலுவை பலியானது எதிர்கால மக்களுக்காக மட்டும் அல்ல, அவருக்கு முன்பு விசுவாசத்தில் வாழ்ந்தவர்களுக்கும் பொருந்தியது.
எபிரெயர் 11 இதை உறுதிப்படுத்துகிறது. அங்கே ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், மோசே மற்றும் தாவீது அனைவரும் "விசுவாசத்தினாலே" நீதிமான்களாகக் கருதப்பட்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.
மேலும், எபிரெயர் 11:39-40ல் நாம் காண்பது “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்."
இது, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளின் இரட்சிப்பும் இறுதியில் கிறிஸ்துவின் கிரியையிலேயே நிறைவேறியது என்பதை காட்டுகிறது.
ஆகவே, சிலுவைக்கு முன்னரும், விசுவாசத்தினால் மரித்தவர்கள் பரதீசிற்கும், விசுவாசியாதவர்கள் பாதாளத்திற்கும் போவது ஊர்ஜிதமாகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய* :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக