*#1168 - நோவா காலத்தில் மழையால் உலகம் அழிந்தபோது, வேதாகமம் எங்கே இருந்தது. பின்பு எப்படி மீண்டும் இந்த பூமியில் வேதாகமம் வந்தது? நோவா கொண்டுவந்தார் என எடுத்துகொள்ள முடியுமா?*
*பதில்* : மனிதகுலத்தின் ஆரம்ப மனிதன் ஆதாமைக் குறித்து நாம் வேதத்தில் வாசிப்பதால் அந்த புத்தகத்தை ஆதாம் எழுதினார் என்பதல்ல.
ஆதாம் துவங்கி பத்தாவது தலைமுறையாக பிறந்தவர் நோவா.
நோவாவிற்கு பிறகு பத்தாவது தலைமுறையாக பிறந்தவர் ஆபிரகாம்.
ஆபிரகாம் துவங்கி ஏழாவது தலைமுறையில் லேவி கோத்திரத்தில் பிறந்தவர் மோசே. யாத். 6:20
ஆக ஆதாமுடன் சேர்த்து கணக்கிடும்போது மோசே 26வது தலைமுறையில் பிறந்தவர்.
ஆதாம் காலந்துவங்கி ஏறத்தாழ 2433 வருடங்கள் கழித்து மோசே பிறக்கிறார்.
வேதாகமத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் பரிசுத்த ஆவியானவர் மனிதர்கள் மூலமாகவே எழுதி வைக்கிறார். 2தீமோ. 3:16
ஆதியாகமத்துடனான முதல் ஐந்து புத்தகத்தை நமக்கு தொகுத்து / எழுதி கொடுத்தவர் மோசே.
இன்னும் குறிப்பாய் சொல்லவேண்டுமானால் “நானே நான்” (இருக்கிறவராகவே இருக்கிறேன் / I’m Who I’m) என்று யாத்திராகமம் 3:14ன் வசனம் மற்றும் யாத். 3:4-6ல் நாம் காணும் வசனங்கள் “முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டு அவன்: இதோ, அடியேன் என்றபொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்று சொன்னதும் பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்” என்ற வாக்கியங்களுமே வேதாகம *பதிவிற்கான* முதல் துவக்கம்.
அங்கிருந்து பின்னோக்கிய காலங்களை பிற்காலங்களில் மோசே பதிவிட்டு;
கால நிகழ்வின்படியாக வேதாகம புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டு;
ஆதியாகமம் துவங்கி வெளிப்படுத்தல் புத்தகம் வரை ஏறத்தாழ சுமார் நாற்பது (40) எழுத்தாளர்களின் பதிவுகளை தொகுத்து;
அறுபத்தாறு (66) புத்தகங்களை உள்ளடக்கி வேதாகமம் என்ற ஒரு தொகுப்பாக நம் கரங்களில் உள்ளது.
ஏன் வெறும் 66 புத்தகங்கள் என்ற விபரத்திற்கு பதில் எண் #195ஐ வாசித்துப் பார்க்கவும்.
மேலும், சுமார் நூறு (100) வருடங்கள் பிரசங்கித்தும் தனது குடும்பத்தை மாத்திரமே காப்பாற்றிக்கொள்ளக்கூடிய அளவில் உலகமனைத்தும் கெட்டுக்கிடந்த காலத்தில் தான் நோவா அனைவரைக் காட்டிலும் தேவனுக்கு உத்தமனாயும் நீதிமானாயும் வாழ்ந்தார் வாழ்ந்திருக்கிறார். ஆதி. 6:5,9
மேலும், நோவாவின் தகப்பனார் லாமேக்குவின் காலத்தில் முதல் மனிதனான ஆதாம் உயிருடன் (ஆதி. 5:5) தான் இருக்கிறார்!! ஆதாம் துவங்கி லாமேக்கு வரைக்குமான எட்டு (8) தலைமுறையினர் தேவனைக் குறித்து லாமேக்கிற்கும், பின்னர் லாமேக்கு, தனது குமாரன் நோவா நீதிமானாகவும் தேவனுக்கு உத்தமனாகவும் வாழும்படிக்கு நிச்சயமாக போதித்திருக்கவேண்டும். அதனை நோவா எழுதிவைத்திருக்கலாம் அல்லது தனது முற்பிதாக்களின் எழுத்துக்களை தன்னுடன் வைத்திருக்கலாம் அல்லது பிற்காலங்களில் பதித்திருக்கலாம். அதற்கான எந்த ஆதாரமில்லையென்றாலும்; சாத்தியமில்லை என்று சொல்வதற்கில்லை.
ஆகவே, நோவா காலத்தில் வெள்ளத்தினால் உலகமே அழிக்கப்பட்ட போது வேதாகமம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்ற கேள்வி சந்தேகமின்றி இங்கு தெளிவாகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 7 ஜனவரி, 2023
#1168 - நோவா காலத்தில் மழையால் உலகம் அழிந்தபோது, வேதாகமம் எங்கே இருந்தது. பின்பு எப்படி மீண்டும் இந்த பூமியில் வேதாகமம் வந்தது? நோவா கொண்டுவந்தார் என எடுத்துகொள்ள முடியுமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக