*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
மேய்ப்பராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கத்தோலிக்கர் செய்து வந்த முறைமைகளை,
தங்களை கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்ளும் மதத்தினரும் காலப்போக்கில் *லெந்து* நாட்களை கடைபிடிக்கத் துவங்கியதால், இனி வரும் காலங்களில் கத்தோலிக்கரைப் போல, *மரியாளுக்கும்* ஒரு முக்கிய இடத்தை தங்கள் ஆராதனைகளில் ஒதுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை !!
*லெந்து குறித்து வேதம் என்ன சொல்கிறது*?
வேதத்தில் காணமுடியாது. ஆங்கில வேதாகமத்தில் ஒரு இடத்தில் Lent என்ற வார்த்தை வருகிறது 1 சாமு 2:20ல். ஆனால் அர்த்தமோ வேறு !!
*கிறிஸ்தவர்கள் லெந்த் நாட்களை கடைபிடிக்கலாமா*?
கிறிஸ்துவின் பாடுகளை குறித்து ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் நினைவுக்கூற வேண்டும் என்பதை மாற்றி *வருஷத்திற்கு ஒரு முறை உபவாசம் என்பது மனிதர்களின் போதனை*. குறிப்பிட்ட ஆகாரத்தை விலக்க வேண்டும் என்று போதிப்பதும் மனிதனின் போதனை.
...சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலா. 1:7-8
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 2யோ.9
*இதை கடைபிடித்தால் என்ன தவறு*?
வாராவாரம் கடைபிடிக்க வேண்டிய கடமையை விட்டு வருஷத்திற்கு ஒரு முறை இப்படி செய்வது வேதத்திற்கு முரணானது.
அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (வந்திருக்கறது !! ) நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு.. 2தீமோ. 4:3-5
மேலும் இதைக் குறித்து நாளை பார்ப்போம்.
சத்தியதிற்கு மாத்திரம் செவிசாய்ப்போம்... தேவன் நம்மோடு இருப்பார். அப்போது ஆசீர்வாதம் நம்மோடு தங்கியிருக்கும் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக