#1031 - *சூரைச் செடியைப் பற்றி விளக்கம் தாருங்கள்*.
*பதில்* :
சூரைச் செடி என்பது நேடியாக தமிழ் வேதாகமத்தில் மூன்று இடங்களிலும் ஆங்கில வேதாகமத்தில் நான்கு இடங்களிலும் வருகிறது.
1இராஜாக்கள் 19:4, 5, சங்கீதம் 120:4 மற்றும், ஆங்கில வேதாகமத்தில் யோபு 30:4-ஆம் வசனத்திலும் காணலாம்.
பழைய ஏற்பாடு எபிரேய பாஷையில் எழுதப்பட்டது.
சூரைச்செடி என்பது எபிரேயத்தில் ரீதம் ரோதம் என்றழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் ஜூனிப்பர் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த சூரைச்செடி என்பது - துடைப்பம் அல்லது விளக்குமாறு அல்லது கூட்டுமாறு என்று சொல்லப்படுவதை தயாரிக்க உதவும் செடி அல்லது மரம்.
வளமையாக இந்த செடி அல்லது மரம் ஊசியாக சில கிளைகளை மாத்திரமே கொண்டு உயரமாக வளரக்கூடியது. தரையில் அதிகமான நிழல் விழும்படியாக படர்ந்து வளராது.
இது ஹீதர் என்றும் அழைக்கப்படுகிறது. பசுமையான ஊசியிலையுள்ள புதர்கள் அல்லது சைப்ரஸ் குடும்பத்தின் மரங்களுடன் தொடர்புடையது.
ஆர்க்டிக் முதல் துணை வெப்பமண்டல மலைப் பகுதிகள் வரை வடக்கு அரைக்கோளத்தில் வளருகிறது.
இவை பெரும்பாலும் மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும். இந்த இனத்தைச் சேர்ந்த மரம் சுமார் 15 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மைக்கொண்டது.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
திங்கள், 2 நவம்பர், 2020
#1031 - சூரைச் செடியைப் பற்றி விளக்கம் தாருங்கள்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக