புதன், 30 ஜூன், 2021

இருபக்கமும் தகவல் சொன்ன தேவன்

*இருபக்கமும் தகவல் சொன்ன தேவன்

by : Eddy Joel Silsbee

 

சர்வ வல்லவரின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

*வேதத்தில் இல்லாததை* ஆண்டவர் சொன்னார் என்று சொல்பவர்களுக்கு கீழ்படிந்தால் தேவக்குற்றம்.

 

இல்லாததை சொல்லும் பாஸ்டரையும் காளான் ரெவரென்டுகளையும் பிரியப்படுத்த நினைத்தால் கடவுளை விரோதிப்பீர்கள். யாக். 4:4

 

ஆரோனை உன்னோடு எகிப்துக்கு *கூட்டிக்கொண்டு போ என்று மோசேயினிடத்தில் சொன்ன தேவன், ஆரோனிடமும் மோசேயுடன் போ* என்று சொன்னார் - யாத். 4:14, 27

 

பேதுருவை *ஆள் அனுப்பி அழைப்பி* என்று கொர்நேலியுவிடம் சொன்ன ஆண்டவர், *அந்த ஆட்களோடு போ* என்று பேதுருவினிடமும் சொன்னார். அப். 10:5, 20

 

சவுலைப் *போய் பார்* என்று அனனியாவிடம் சொன்ன ஆண்டவர், *அனனியா வருவதை* சவுலிடமும் சொன்னார்.  அப். 9:10-12

 

நகையை கழுத்தில் போடக்கூடாது கழற்றி காணிக்கை பெட்டியில் போடும்படி ஆண்டவர் சொல்வதாக எந்த பாஸ்டராகிலும் சொன்னால் – மிகக் கவனம் !!

 

உங்களிடம் பணம் பெற்றுக் கொள்ளும்படி ஆண்டவர் என்னிடம் சொன்னார் என்று யாரவது வந்தாலும், உங்களுக்கும் அப்படிப்பட்ட தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டியது வேதத்தின் உதாரணம் !!

 

சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது !! 1கொரி. 14:40

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/tOUgcxH0WSw

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக