#195 - *மனிதர்களால் பைபிள் கலங்கடிக்கப்பட்டு விட்டது. உங்கள் விளக்கம் என்ன?*
சிரியன் வேதாகமம்
– 61 புத்தகம்
புரோடன்ஸ் வேதாகமம்
– 66 புத்தகம்
காப்டிக் வேதாகமம்
– 75 புத்தகம்
கத்தோலிக்க வேதாகமம்
– 73 புத்தகம்
கிரிஸ்மெடிக் வேதாகமம்
– 76 புத்தகம்
எதியோப்பியா வேதாகமம்
– 81 புத்தகம்
கிரீக் ஆதோட் வேதாகமம்
– 78 புத்தகம்
ஆர்தோட்டெக் வேதாகமம்
– 86 புத்தகம்
மனிதர்களால்
பைபிள் கலங்கடிக்கப்பட்டு விட்டது. உங்கள் விளக்கம்
என்ன?
*பதில்:*
துரதிர்ஷ்டவசமாக, கையில் உள்ளவை பெரும்பாலும்
கல்விசார் சமூகத்தின் அடிப்படையில் கடந்து சென்று விட்டது. மேலும் பல காலங்களையும் பல நாட்டு மக்களையும் உள்ளடக்கியது.
இந்த விஷயத்தை கவனத்தோடு பார்ப்போம்:
நற்செய்தி புத்தகங்கள் என்றும் அப்போஸ்தலர்களின் நிருபங்கள்
என்றும் சில புத்தகங்கள் உரிமை கொண்டாடப்பட்டாலும் அவைகள் இரண்டிலிருந்து நான்காம்
நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. ஆகவே இந்த புத்தகங்கள் அங்கீகரிக்கபட்ட 66
புத்தகங்கள் கொண்ட பதிப்பில் இல்லை.
எவ்வாறாயினும், இந்த புத்தகங்கள்
பைபிளில் ஏன் இணைக்கப்படவில்ல என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டது என்று 2தீமோ.
3:16ல் வாசிக்கிறோம்.
ஏறத்தாழ 40 எழுத்தாளர்கள் சுமார் 1500 ஆண்டுகளின் இடைவெளியில்
பலவேறு இடங்களில் ஒருவரை ஒருவர் காணாதிருந்தும் எழுதப்பட்டவைகளின் சுருள்களை
கண்டெடுத்த போது அதை மிக கவனத்தோடு பல வல்லுனர்கள் ஆராய்ந்து வசனத்தின்
அடிப்படையில் கிடைக்கப்பெற்ற எல்லா எழுத்து சுருள்களையும் சேமித்து
அடுக்கினார்கள்.
தேடி வாசியுங்கள் அவைகள் ஜோடில்லாதிராது என்று ஏசா. 34:16ல் பார்க்கிறோம்.
அதாவது – ஒருவர் சொன்னதை மற்றொவர் நிச்சயம் சொல்லியிருப்பார் என்று பொருள்.
சொல்லியிருக்காத பட்சத்தில் எழுதியவர் தேவ அருளால் எழுதவில்லை
என்பது திண்ணம் (2தீமோ. 3:16ன் படி)
இப்படி சுமார் 5 அல்லது 6 தகுதிகளின் அடிப்படையில் 66
புத்தகங்கள் தகுதி பெற்றதன் அடிப்படையில் – அவைகள் முழு வேதாகமாக உருபெற்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த தகுதிகளை கவனிக்கவும்:
1. தேவனுடைய தீர்க்கதரிசியால்
எழுதப்பட்ட புத்தகமாக இருந்ததா?
2. தேவனுடைய செயல்களால்
எழுத்தாளர் உறுதிப்படுத்தியிருக்கிறாரா?
3. இந்த செய்தி தேவனை
பற்றிய உண்மையைச் சொல்கிறதா?
4. அது தேவனின் வல்லமையோடு
வந்ததா?
5. தேவனுடைய மக்கள்
அதை ஏற்றுக்கொண்டார்களா?
66 புத்தகங்களில்
வராத மற்ற புத்தகங்கள் – மேலே கொடுக்கப்பட்ட தகுதிகளின் கீழ் வராதவை.
அவைகள் தள்ளுபடி
ஆகமங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே அவைகளில் கொடுக்கப்பட்டுள்ள உபதேசங்களும்
தேவனுடையவைகளா என்பது கேள்விக்குறி.
எல்லா தகுதியோடும்
எழுதப்பட்டிருக்கும் இந்த 66 புத்தகங்களில் உள்ளவை நாம் பரலோகம் போவதற்கு போதுமானவை
(யோ. 20:31)
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக