செவ்வாய், 26 ஏப்ரல், 2022

#1124 - பிரதான தூதன் மிகாவேல், காபிரியேல், லூசிஃபர் மற்றும் சங்கார தூதன் குறித்து எழுதவும்.

#1124 - *பிரதான தூதன் மிகாவேல், காபிரியேல், லூசிஃபர் மற்றும் சங்கார தூதன் குறித்து எழுதவும்*.

*பதில்* மிகாவேல் என்பவரை பிரதான தூதன் என்று வேதம் அடையாளப்படுத்துகிறது (யூதா 9, தானி. 10:13). இங்ஙனம் மிகாவேல் தேவதூதர்களிடையே பிரதானமான நிலையில் அவரைக் குறிக்கிறது. மேலும், பிரதான நிலையிலுள்ள தூதனுக்கு எப்படிப்பட்ட பிரத்யேக அதிகாரம் என்பதை நாம் அறியோம்.

எபிரேயம் மற்றும் கிரேக்கம் ஆகிய இரு மொழிகளிலுமே தூதர் என்பதற்கு "தூதுவர்" என்றே பொருள்படுகிறது. அதாவது சொல்வதை செயல்படுத்துபவர் அல்லது அப்படியே சொல்பவர்.

தேவதூதர்கள் என்பது பிரதானமாக அல்லது பொதுவாக தேவனுடைய தூதுவர்கள்.  எபி. 2:2

தூதர்களின் எண்ணிக்கையோ நமது எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டது. எபி. 12:22

தேவனுடைய சிங்காசனத்தை சூழ நிற்பதாக வெளி. 5:11ல் காண்கிறோம்.

மிகாவேலுக்கு அடுத்தபடியாக வானதூதர்களில் பெயருடன் வேதாகமத்தில் அடையாளப்படுத்தப்படுபவர் காபிரியேல் என்னும் தூதன். லூக்கா 1:19

இன்னும் சிலரோ தங்களை அடையாளப்படுத்த விரும்பாமல் மறைத்தார்கள் என்பதையும் ஆதி. 32:29 & நியா. 13:17-18ல் வாசிக்கிறோம்.

மனிதர்களைப் போலவே தேவதூதர்களும் சுதந்திர விருப்பமுள்ளவர்கள். பாவம் செய்யக்கூடியவர்கள். 2பேதுரு 2:4

தேவத்தூதர்களை நாம் வழிபடக்கூடாது. அது விக்கிரகாராதனை. வெளி 19:10, 22:19

சண்டையிடும் பிரிவும் அவர்களிடையே உள்ளது என்று வெளி. 12:7ல் காண்கிறோம்.

*தூதர்களின் தோற்றம் மாறுபட்டதை கீழே பட்டியலிடுகிறேன்:*
*மனிதனைப் போலத் தோன்ற முடியும். தானி. 8:15

*சிலர் உருவிய வாள்களுடன் போர்வீரர்களாகத் தோன்றினர். யோசு. 5:13-15

*சில பிரகாசமாகத் தோன்றினர். லூக். 24:4; தானி. 3:24-25; 10:5-6

*சிலர் தங்களைப் பார்த்தவர்களை பயமுறுத்தினார்கள். நியா. 13:6; மத். 28:2-4

*பலமுகங்களும் செட்டைகளுடனும் காணப்பட்டார்கள். எசே. 1:5-9

*வேகமாக பறக்கமுடியும். வெளி. 8:13

*தூதர்களது வேலை என்ன?*

தேவனுடைய செய்தியை அல்லது சொல்லப்பட்ட செயலை நிறைவேற்றுவது. ஆதி. 3:24; 16:7-9; 19: 12-15; அப். 12:7-10; 27:23-24; தானி. 6:22; 8:16-17; 9:21-22; எபி. 1:14; 1இரா. 19:5-6; 1நாளா. 21:15-16; ஏசா. 37:36; மத். 13:30, 39;

*மனிதர்கள் இரட்சிப்பினுள் வரும்போது தேவதூதர்கள் மகிழ்கின்றனர். லூக். 15:10

*தேவதூதர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அல்ல !! மத். 24:36

*நமக்கு வழங்கப்பட்ட செய்திகள் கூட அவர்களுக்கு முழுமையாக அறிந்திருக்கவில்லை. 1பேதுரு 1:12

மிகாவேலையும் காபிரியேலையும் நாம் பார்த்தோம்.. சங்காரத்தூதன் என்று வேதாகமத்தில் சொல்லப்படாமல் சங்காரக்காரன் என்றேயுள்ளது என்பதை நாம் கவனிக்கத்தவறக்கூடாது.

*லூசிஃபரின் தகவலுக்கு நமது கேள்வி பதில் எண் #266, #267 & #323ஐ படிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக