புதன், 10 ஜூலை, 2019

#266 - சாத்தான் யார்? லூசிஃபர் யார்? விளக்கவும்

#266 - *சாத்தான் யார்? லூசிஃபர் யார்? விளக்கவும்*

*பதில்*:
ஆதியாகமம் 3ல், நாம் சர்ப்பத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகிறோம், அவன் சாத்தான் என்று அடையாளம் காண்கிறோம்.

இரண்டு வாக்கியங்கள் நமக்கு பிசாசின் துவக்கத்தை காண்பிக்கிறது.

முதலாவது-
ஏசாயா 14: 12-17. லூசிஃபர் என்று அழைக்கப்படும் சாத்தான் ஒரு காலத்தில் பரலோகத்தில் ஒரு தூதனாக இருந்தான் என்பதை அறிகிறோம்.

அவன் கடவுளுக்கு எதிராக புறப்பட நினைத்தபோது (யூதா 1: 6) கீழே தள்ளப்பட்டான் என்று பார்க்கிறோம்.

இரண்டாவது-
எசேக்கியேல் 28: 13-18 இங்கே சாத்தான் ஒரு கேருப் (அழகிய தூதன்) / ஒரு பாதுகாவலன் / அல்லது போர்வீரன் என்று குறிப்பிடப்படுகிறான்.

தன் அழகின் நிமித்தம் / பெருமையின் நிமித்தம் அவன் வீணாக போனான் என்பதை 17 வது வசனம் குறிக்கிறது.

அவன் பெருமையின் நிமித்தம் தள்ளப்பட்டான் என்று 1 தீமோத்தேயு 3: 6 குறிக்கிறது.

பைபிளில் - சாத்தான் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறான்.

பொல்லாதவன் - மத்தேயு 13:19

எதிரி - மத்தேயு 13:34

பெயல்செபூல் - மத்தேயு 12:24

பிசாசுகளின் இளவரசன் - மத்தேயு 12:24

வலிமையான மனிதன் - மத்தேயு 12:29

கொலைகாரன் - யோவான் 8:44

பொய்யன் மற்றும் பொய்களின் பிதா - யோவான் 8:44

இந்த உலகத்தின் இளவரசன் - யோவான் 12:31

சாத்தான் - மாற்கு 1:13

இந்த உலகத்தின் கடவுள் - II கொரிந்தியர் 4: 4

பேலியாள் - II கொரிந்தியர் 6:15

பழைய பாம்பு - வெளிப்படுத்துதல் 12: 9

சோதனைக்காரன் - I தெசலோனிக்கேயர் 3: 5

விரோதி - I பேதுரு 5: 8

பாதாளத்தின் தூதன் - வெளிப்படுத்துதல் 9:11

அப்பொல்லியோன் - வெளிப்படுத்துதல் 9:11

அபெத்தோன் - வெளிப்படுத்துதல் 9:11

வலு சர்ப்பம் - வெளிப்படுத்துதல் 12: 3

பிசாசு - மத்தேயு 4: 1

குற்றஞ் சாட்டுபவன் - வெளிப்படுத்துதல் 12:10

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக