#323 - *சாத்தான் எப்படி உருவானான்?* வேதத்தின்படி விளக்கம் தரவும்.
*பதில்* :
சாத்தானின்
யதார்த்தத்தை நிரூபிக்க பைபிள் எந்த முயற்சியும் விரயம் செய்யவில்லை.
அதே வேளையில் – சாத்தான்
உண்டு என்பதை வேதம் நிச்சயமாக தெளிவு படுத்துகிறது.
மேலும் சாத்தானின்
ஆரம்பத்தை அல்லது தோற்றம் குறித்து வேதம் திட்டமாக
குறிப்பிடவில்லை.
இருப்பினும், இந்த மர்மத்தை வெளிச்சம்
போட்டுக்காட்டகூடிய சில வசனங்கள் / சம்பவங்கள் வேதத்தில் உள்ளன.
கிறிஸ்துவின்
மூலம் சகலவற்றையும் தேவன் உருவாக்கினார் (கொலோ. 1:16)
தேவன்
உருவாக்கிய / சிருஷ்டித்த *யாவும் மிகவும் நல்லது* என்று
கண்டார் (ஆதி. 1:31)
தேவன்
தங்களுக்கு ஏற்படுத்தி வைத்த மேன்மையான இடத்தில் இருக்க பொறுக்காமல் சில தூதர்கள் தேவனுக்கு
எதிராக முரண்டுபிடித்தனர் (யூதா 6)
தனக்கு
எதிரானவர்கள் தூதராயினும் அவர்களை தேவன் தப்பவிடவில்லை (2பேதுரு 2:4)
பெருமை வந்தது –
ஆக்கினையும் வந்தது (1தீமோ. 3:6)
அந்த நேரத்தில்
நடந்த யுத்தத்தை காட்சியாக வெளிபடுத்தல் புஸ்தகத்தில் காணமுடிகிறது (வெளி. 12:7-9)
தேவனுக்கு
எதிராக அனைவரையும் தன் பக்கம் இழுத்து அடிமையாக்கி கொள்ள வேண்டும் என்பதில் அவன்
முதல் தம்பதியினரை தன் வழிக்கு இழுத்து சாதித்துக்கொண்டான் (ஆதி. 3:1-9)
ஆகவே தான் இயேசு
கிறிஸ்து சொன்னார் – அவன் ஆதியிலிருந்தே பொய் பேசுகிறவனும் கொலைகாரனும் என்று.. (யோ. 8:44)
சகோதரர்களை
குற்றம் சாட்டுபவன் (வெளி. 12:10)
ஆதியாகமம் 3ல், சர்ப்பம் என்று நாம் காண்பவன், சாத்தான் என்று அடையாளப்படுத்தப்படுகிறான் (வெளி. 12:9)
ஆதியாகமம் 3ல், சர்ப்பம் என்று நாம் காண்பவன், சாத்தான் என்று அடையாளப்படுத்தப்படுகிறான் (வெளி. 12:9)
*இரண்டு
வாக்கியங்கள் நமக்கு பிசாசின் துவக்கத்தை சுமாராக காண்பிக்கிறது*.
*முதலாவது*-
ஏசாயா 14:
12-17. லூசிஃபர் என்று அழைக்கப்படும் சாத்தான் ஒரு காலத்தில் பரலோகத்தில் ஒரு
தூதனாக இருந்தான் என்பதை அறிகிறோம்.
அவன் கடவுளுக்கு
எதிராக புறப்பட நினைத்தபோது (யூதா 1: 6) கீழே தள்ளப்பட்டான் என்று பார்க்கிறோம்.
*இரண்டாவது*
எசேக்கியேல் 28:
13-18 இங்கே சாத்தான் ஒரு கேருப் (அழகிய தூதன்) / ஒரு பாதுகாவலன் / அல்லது போர்வீரன் என்று
குறிப்பிடப்படுகிறான்.
தன் அழகின்
நிமித்தம் / பெருமையின் நிமித்தம் அவன் வீணாக போனான் என்பதை 17 வது வசனம்
குறிக்கிறது.
அவனுக்கு சபைகள்
உண்டு (வெளி. 2:9)
அவனுக்கென்று கோட்பாடுகள்
உண்டு (வெளி. 2:24)
அவனுடைய
ஆவிக்குரிய பிள்ளைகளும் உண்டு (யோ. 8:44)
அவனுடைய ஆவிக்குரிய
இராஜ்ஜியமும் உண்டு (கொலோ. 1:13)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக