*#1137- பட்சிகளை துண்டிக்காமல் விட்டதே இஸ்ரவேலரின் அடிமைத்தனத்திற்கு காரணமா?*
உன் சந்ததியார் 400 வருடம் அந்நிய தேசத்தில் உபத்திரவப்படுவார்கள் என்று கர்த்தர் ஆதி. 15:13ல் ஆபிரகாமிடம் சொல்கிறார். ஆபிரகாம் தேவனுக்கு பலியிட்ட போது பட்சிகளை துண்டிக்காமல் விட்டதே (ஆதி. 15:10) இந்த உபத்திரவத்துக்கு காரணம் என்று ஒரு போதகர் போதித்தார் இது சரியா?
ஆபிரகாம் பட்சிகளை துண்டிக்காதது தவறு எனறால் தேவன் நிச்சயமாக சொல்லியிருப்பாரே.
எ.கா :- அபிமெலேக்கு சாராளை கூட்டி கொண்டு போனது தவறு என்று தேவன் சுட்டி காண்பித்தார். ஆதி. 20:3
கன்மலையை பார்த்து பேசுவதற்கு பதிலாக மோசே அடித்ததை எண். 20ல் சுட்டி காண்பிக்கிறார்.
தாவீது பத்சேபாளோடு விபச்சாரம் செய்து அவளது கணவர் உரியாவை கொன்ற தை தவறு என்று 2சாமு. 12ம் அதிகாரத்தில் தேவன் சுட்டி காண்பித்தார்.
இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஐயா, இது பல நாட்களாக என் மண்டையை துளைத்து கொண்டிருந்த கேள்வி.
*பதில்* : பட்சிகளை துண்டிக்காதது காரணமல்ல என்ற உங்களது கணிப்பு சரியானதே. பிற்காலங்களில் இஸ்ரவேலருக்கு பிரமாணமாக கொடுக்கப்பட்ட கட்டளையில் இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. லேவி. 1:14-17ல் இதைக் காணமுடியும்.
லேவி. 1:14-17 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன். அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு, அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
ஆகவே, ஆபிரகாம் அந்த *பட்சியை துண்டிக்காமல் விட்டது* தேவ நீதியான செயல்.
ஆதாரமில்லாத கருத்துக்களை நூதனமாய் ஜனங்களுக்கு சொல்லி தன் வசம் ஜனங்களை இழுப்பதில் நீங்கள் குறிப்பிட்ட இப்படிப்பட்ட வயிற்று பிழைப்பு வேடதாரிகள் ஓய்வதில்லை. எந்த கருத்திற்கும் வேத ஆதாரம் அவசியம்.
நடைமுறை வசன ஆதாரமில்லாத எந்த கருத்துக்களுக்கும் கோட்பாடுகளுக்கும் நாம் விலகியிருத்தல் அவசியம்.
*கூடுதல் தகவலாக:*
ஆதி. 15:10-ம் வசனத்தை கவனிக்கவும்: “அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை”.
*“அவைகளை (ஆதி. 15:9) நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்”* என்ற சொற்றொடர் ஒரு உடன்படிக்கையின் அங்கீகாரத்திற்காக விலங்கை தயார்படுத்துவதற்கான அறியப்பட்ட முறையாகும்.
ஒப்பந்தம் செய்பவர்கள் தங்களது உடன்படிக்கைக்கு (இடையே) நடுவே கடந்து செல்வது எபிரேய வழக்கம். அதை பிரதிபலிக்கும்படியாக பலிகள் இரண்டு துண்டுகளாக வெட்டப்படுவதாகும்.
"பலியை இரண்டாகப் பிரிப்பது, உடன்படிக்கையின் இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும். பிரிக்கப்பட்ட துண்டுகளுக்கு இடையில் அவர்கள் கடந்து செல்வது அவர்களின் ஒன்றிணைப்பைக் குறிக்கும். எரே. 34:18-19
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக