#1060 - *ஆகார் எவ்வாறு 14வயது மகனை சுமந்து செல்ல முடிந்தது? வேறு வகையில் ஆயுள் முன்காலங்களில் கணக்கிடப்பட்டது?*
என் குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆதியாகமத்தில், நம் முன்னோர்கள் பலர் பல ஆண்டுகளாக வாழ்ந்திருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக, மெத்தூசலா, அல்லது ஆபிரகாம், சாராள் மற்றும் பலர். ஆனால் சங்கீதக்காரர் நம் வாழ்நாள் 70 அல்லது 80 வயது என்று கூறுகிறார்.
ஆதியாகமம் 17-ல் இஸ்மவேலின் தந்தை ஆபிரகாமுக்கு 99 வயதாக இருந்தபோது 13 வயதைக் காண்கிறோம். பின்னர் ஈசாக்கு பிறந்து ஆகாரை அவர்களது வீட்டிலிருந்து வெளியே அனுப்பும்போது இஸ்மவேல் ஒரு இளைஞனாக இருந்திருக்க வேண்டும். 14+ ஆனால் ஆகார் அவரை சுமந்து கொண்டு மரத்தின் அடியில் வைப்பதைக் காண்கிறோம்.
எனது கேள்வி என்னவென்றால், இப்போது நம்மிடம் உள்ள 12 மாத காலெண்டரைப் போலன்றி, வேறு சில அளவுகோல்களின் அடிப்படையில் வயது கணக்கிடப்பட்டதா? நிச்சயமாக, கிரிகோரியன் காலண்டர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பு அது எவ்வாறு மதிப்பிடப்பட்டது? தயவுசெய்து அதை விரிவாக விளக்க முடியுமா?
*பதில்* : இஸ்மவேல் பிறக்கும் போது ஆபிரகாமிற்கு வயது எண்பத்தாறு (86). ஆதி. 16:16
மனைவியாகிய சாராள் மூலமாக ஆபிரகாமிற்கு மகன் பிறப்பான், அவனுக்கு ஈசாக்கு என்று பெயர் வைக்கவேண்டும் என்று தேவன் ஆபிரகாமிடம் சொன்ன அதே நாளில் (ஆதி. 17:23);
ஆபிரகாமுடன் தேவன் செய்த உடன்படிக்கையான விருத்தசேதனத்தை தனக்கும், தன் மனைவியின் வேலைக்காரியான (அடிமைப்பெண்) எகிப்திய நாட்டு ஆகார் வழியாக பிறந்த மகன் இஸ்மவேல் உட்பட தன்னுடைய அனைத்து வேலைக்காரருக்கும் விருத்தசேதனத்தை செய்த போது, ஆபிரகாமின் வயது தொண்ணூற்றொன்பது (99), இஸ்மவேலின் வயது பதின்மூன்று (13). ஆதி. 17:1, 23-25, ஆதி. 16:1-2
ஆகாரும் இஸ்மவேலும், சாராளின் வார்த்தையின் படியும், தேவனுடைய அனுமதியின்படியும் ஆபிரகாமின் வீட்டிலிருந்து துரத்திவிடப்பட்டபோது(ஆதி. 21:9-12), ஈசாக்கு பால் மறந்த குழந்தை (ஆதி. 21:8).
அதாவது, ஈசாக்கு மூன்றிலிருந்து ஐந்து வயதிற்குட்டபட்டவனாக இருந்திருக்க வேண்டும். (1சாமு. 1:22-28, 2நாளா. 31:16, லேவி. 27:6). அப்போது இஸ்மவேலுக்கு சுமார், (13+3 to5) பதினாறு அல்லது சுமார் பத்தொன்பது வயதுள்ளவனாக இருக்கவேண்டும்.
ஆகார், தன் மகன் இஸ்மவேலுடன் பிரயாணிக்கும் போது, தன் தோளில் சுமந்தது சென்றது மகனை அல்ல, தனக்குண்டான பொருள்களையே என்பதை கவனிக்க வேண்டும். வசனத்தை அப்படியே கீழே பதிவிடுகிறேன்.
ஆதி. 21:14 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, *அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல்* வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
ஆதி. 21:15 துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் *பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு*,
ஆதி. 21:16 பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
கிரிகோரியன் காலண்டர் ஆனாலும், யூதக் காலண்டர் ஆனாலும், ஆதி காலம் துவங்கி, ஒரு நாள் என்பது சூரிய சுழற்சியின் அடிப்படையில் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
பகல் எவ்வளவு இரவு எவ்வளவு என்று சூரியனை அடிப்படையாக கொண்டு நேரத்தை கணக்கிடுகிறோம்.
அவைகளின் மூலம் நாம் இவ்வாறு காலங்களையும் நேரத்தையும் கணக்கிட வேண்டும் என்பது தேவனுடைய நீதி.
கீழே உள்ள வசனத்தை கவனிக்கவும்:
பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். ஆதி 1:14
இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்து பகல் என்றும் இருளை, இரவு என்றும் பெயரிட்டார். ஆதி 1:5
*சாயங்காலமும் விடியற்காலமும் ஆகி “முதலாம் நாள்”* என்று தேவன் கணக்கிட்டார். ஆதி 1:5
ஆதி நாட்களில் அதிக வயதுடன் வாழ்ந்தவர்கள், பிற்காலங்களில் அவ்வாறு நீண்ட ஆயுள் ஏன் பெறவில்லை என்பதன் விளக்கத்திற்கு நம் கேள்வி எண் #1025ஐக் காணவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 2 ஜனவரி, 2021
#1060 - ஆகார் எவ்வாறு 14வயது மகனை சுமந்து செல்ல முடிந்தது? வேறு வகையில் ஆயுள் முன்காலங்களில் கணக்கிடப்பட்டது?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக