*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
வானாதி வானங்களில் வாசமாயிருக்கும் தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வானத்திலிருந்து அக்கினி ரதம் அனுப்பி எலியாவை கொண்டு சென்றார் தேவன். எவ்வளவு பெரிய பாக்கியம் !! (2இரா. 2:11)
தேவனோடு எவ்வளவு நெருக்கம் இருந்திருந்ததானால் அவருக்கு இப்பேற்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது !!
வானத்தை கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு அதிசயமாய் இருக்கிறது..
சுழல் காற்றில் வானத்தில் ஏறி போவதென்றால்... எப்படிப்பட்ட ஒரு மேன்மையை தேவன், எலியாவிற்கு கொடுத்திருக்கிறார்.
அப்பேற்பட்ட எலியா தான், கொஞ்சம் முன்பு, யேசபேலுக்கு பயந்து கெபியில் ஒடுங்கி இருந்தவர்.
ஆம், பிசாசு, சில நேரம் நம்மை ஒடுக்க நினைப்பான்.
தேவனுடைய மகத்துவத்தை நாம் உணர்ந்தால், 40 நாளளவும் இரவும் பகலும் *இரதத்திற்கு முன்னாக* கூட நம்மை ஓட வைப்பார்.
எந்த கவலையும், சங்கடமும், சோர்வும் இல்லாமல் வல்லமையுள்ள வானாதி வானங்களில் சிங்காசனத்தை அமைத்து சர்வத்தையும் ஆளுகிற உன்னதமான சேனையதிபரான நம் ஆண்டவர் இயேசுவையேப் பற்றிக்கொண்டிருப்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக