#344 - *கள்ள ஊழியர்கள் என்று நமக்கு தெரிந்தும் கர்த்தர்
பார்த்து கொள்வார் என்று விட்டு விட்டு நாம் நம் வேலையை பார்க்கலாமா*...
*பதில்* :
பிதாவானவர் யார் என்றும் இயேசுவானவர் யாரென்றும் பரிசுத்த
ஆவியானவர் யாரென்றும் உணராமல் – தேவ ஊழியக்காரன் என்கிற பெயரில் அநேகர் சுற்றி
திரிவதை அவர்களுடைய ஒரே ஒரு ஜெபத்திலேயே கண்டு பிடித்து விடலாம்.
பலர் அறியாமையில் கலவையாக இருப்பார்கள்,
பலர் அறிந்தும் உணராமல் இருப்பார்கள்,
பலர் கற்றும் பணத்தாசையால் தொற்றிக்கொண்டு இருப்பார்கள்.
இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சொல்லாதவன் அந்தி கிறிஸ்து
(Anti-Christ).
இயேசு தேவனுடைய குமாரன் என்று அறிந்தும் – அவர் தான் பிதா
என்று வாதிடுபவனும் தப்பமுடியாது. (1கொரி 11:3, யோ
14:28)
இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளாதவன் அந்தி கிறிஸ்து (Anti-Christ) --- 1யோ 2:22
உழைக்க சரீரமும் பெலமும் நேரமும் இருந்தும் - சொந்த பிழைப்பிற்காக
/ இலாபத்திற்காக சபை என்ற பெயரில் ஒரு கம்பெனி அல்லது கிளப் போன்று நடத்துகிற ஊழியர்கள்
ஏராளம். (2பேது 2:1-3, 13-14, 17-18)
சத்தியத்தை நாம் அறிந்திருந்து – போதிக்கிறவர்கள் தவறாக போதிப்பதை
நாம் அறிந்தால் இரண்டொருதரம் புத்தி / உண்மையை வேதத்திலிருந்து எடுத்து சொல்ல
வேண்டும். கேட்காத பட்சத்தில் விட்டு விட்டு விலக வேண்டும் என்று வேதம் நமக்கு
எச்சரிக்கிறது (தீத்து 3:10, தீத்து 1:11-14)
*வசனங்கள் கீழே* :
தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ
இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு.
ரோ 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள்
கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும்
உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை
விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
2தீமோ 3:5 தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை
மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
1தீமோ 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும்
தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும்
மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
2தெச 3:14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள்
வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக்
குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே
கலவாதிருங்கள்.
2தெச 3:6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில்
ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற
எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக்
கட்டளையிடுகிறோம்.
அடிப்படை சத்தியம் கூட அறியாமல் இயேசுவின் சிலுவை அன்பை
நினைத்து பல ஊழியர்கள் ஊக்கமாய் ஊழியம் செய்கிறது உண்மையே. ஆனால் – சத்தியத்தை அறியாமல்
செய்யும் பட்சத்தில் மற்றவர்களை நரகத்திற்கு தள்ளுவது மாத்திரமல்லாமல் தங்களுக்கும்
கேடு வருவித்து கொள்கிறார்கள் (யாக் 3:1)
நேர்த்தியானதை அறிவிக்க கேட்டும் மனந்திரும்ப
மனதில்லாதவர்கள் வயிறு அவர்கள் தேவன் (பிலி
3:19, ரோ 16:18)
*** சத்தியத்தை
திருஷ்டாந்தமாய் சொல்லியும் திருந்தவில்லையென்றால் – நேர விரயம் வேண்டாம்..
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
thooki poottu mithichira vendiyathu thaan appo...
பதிலளிநீக்கு