#267 - *பிறகு எதற்கு லூசிபர் என்றால் சாத்தானின் பெயர்
என அனேகர் குறிப்பிடுகிறார்கள்?* தேவனையும்
விடிவெள்ளி என வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதே... இதை குறித்து லூசிபர் விளக்கம் என்ற தலைப்பில்
பதிவிட்டால் அனேகர் பயன்பெறுவார்களே.
*பதில்*:
லூசிஃபர் என்பது சாத்தானுக்கு வைக்கப்பட்ட
*பெயர்* அல்ல.
எபிரேயத்தில் - ஹேலியல் என்றும்
லத்தீன் மொழியில் - லூசிஃபர் என்றும்
தமிழில் விடிவெள்ளி நட்சத்திரம்
என்றும் பொருள்.
1)
ஏசா. 14:12-17 அதிகாலையின் மகனாகிய
விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே,
நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
- இந்த வசனம் பாபிலோன் இராஜாவின் வீழ்ச்சியை
குறித்து சொல்லப்பட்டாலும், கீழே தள்ளப்பட்ட சாத்தானை
பிரதிபலிக்கிறது (எசே. 28:13-17; லூக். 10:18; 2பேதுரு 2:4; வெளி. 12:7-10).
2)
மேலும் -
வெளி. 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய
நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
வெளிபடுத்தல் 22:16ன் படி - விடிவெள்ளி நட்சத்திரம் என்பது கிறிஸ்துவை
குறிக்கிறது.
விடிவெள்ளி என்பது வீனஸ் என்கிற வானத்தில்
உள்ள நட்சத்திரத்தை குறிக்கும்.
சூரியன் உதிக்கும் வரை அதிகாலையில்
இந்த வீனஸ் நட்சத்திரத்தின் ஒளி எங்கும் வீசிக்கொண்டிருக்கும்.
மிக பிரகாசமான பொிய நட்சத்திரமான சூரியன்
உதித்தவேளையில் வீனஸின் ஒளி மங்கிவிடுகிறது.
மேலும் வல்லமையுள்ள இராஜ்ஜியங்களை -
சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களுக்கு ஒப்பிட்டு வேதத்தில் தீர்க்கதரிசனமாக
குறிப்பிடப்பட்டிருப்பதை கவனிக்கவும் (ஏசா. 13:9-13, எசே. 32:7-9, யோவேல் 3:11-16, ஆமோஸ் 8:9-10)
இயேசு கிறிஸ்துவானவர் இராஜாதி இராஜாவாக
வீற்றிருக்கும் போது விடிவெள்ளியாக இருந்த தூதர்கள் மேற்கொள்ளப்படுகிறார்கள் (வெளி. 19:16, யோபு 38:7)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக