#803 - *கிறிஸ்து கிபி 33 ம் ஆண்டு சபையை ஏற்படுத்தினேன் அதன்படி நடவுங்கள் என சொன்னாரா?* பத்துக் கட்டளை இல்லை என்றால் பாவம் இன்னதென்று நமக்கு தெரியாது? வாரத்தின் 7-ம் நாளில் சபை கூடவேண்டும் அதை மீறினால் பாவம் இல்லையா?
*பதில்*
கிறிஸ்து எதற்காக வந்தார்? அவர் வந்ததன் நோக்கம் என்ன என்பதை அறிந்தால் உங்களுக்கு விடை இலகுவாக கிடைக்கும்.
ஆதாம் ஏவாள் பாவத்தில் விழுந்த போதே – மனுக்குலத்தை மறுபடியும் தம்மிடம் சேர்த்துக்கொள்ளும் தீர்மானத்தை தேவன் ஏற்படுத்தியிருந்தார் – ஆதி. 3:15
தன் குமாரனாகிய கிறிஸ்து வெளிப்படும்படி – ஜனத்தின் நடுவே ஒரே ஒரு சந்ததியை தெரிந்தெடுத்து கிறிஸ்து வெளிப்பட்டார் - ஆதி. 17:7
அந்த சந்ததி தனக்கு முன்பாக பரிசுத்தமாய் வாழும்படி 10 பிரதான கட்டளைகளையும் 603 உபகட்டளைகளையும் சேர்த்து மொத்தம் 613 கட்டளைகளை கொடுத்தார். அதில் 248 – செய்ய வேண்டியதும், 365 செய்யக்கூடாததுமாகும்.
நியாயபிரமாணம் – *நம்மைப்போல உள்ள புறஜாதியாருக்கு கொடுக்கப்படவில்லை*. ரோ. 2:14, ரோ. 9:4-5
குறிப்பாக, பிரத்தியட்சமாக விசேஷமாக *இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது* – உபா. 4:44, உபா. 4:1
இந்த கட்டளைகள் அவர்களுக்கு பாரமாகவும் முழுவதுமாக கடைபிடிக்க முடியாததுமாக இருந்தது – எபி. 8:7
தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்திற்கு மனிதன் ஈடு கொடுக்க முடியாமல் தன் நடவடிக்கைகளில் தோற்றுப்போனதால் – கிறிஸ்துவானவர் அதே கட்டளையின்படி நியாயபிரமாணகாலத்தில் பிறந்து மனிதனால் முடியாததை தேவன் கொடுக்கவில்லை என்று 100% நியாயபிரமாணத்தின்படி வாழ்ந்து காட்டினார், நிறைவேற்றினார் - மத். 5:17, கலா. 4:5
கிறிஸ்து இந்த உலகத்தில் பிறப்பதற்கு சுமார் 610 ஆண்டுகளுக்கு முன்னரே – இந்த *நியாயபிரமாணத்தை மாற்றி புதிய பிரமாணத்தை அனைவருக்கும் கொடுப்பதாக தேவன் முன்னுரைத்தார்* – எரே. 31:31-32
அது போல அவர் இந்த உலகில் பிறந்த 30வது வயதில் தேவ நீதியை நிறைவேற்றும்படி ஞானஸ்நானம் பெற்று (லூக்கா 3:22-23) சுமார் 3½ ஆண்டுகள் தேவனுடைய இராஜ்ஜியத்தை குறித்தும் தான் வந்த நோக்கத்தை குறித்தும் பிரசங்கித்தார் – மத். 4:17, யோ. 17:2
தான் சிலுவையில் பாடுபடுவதற்கு முன்னர் தன்னுடைய சீஷர்களை வரவழைத்து *புதிய உடன்படிக்கையை குறித்து விவரித்தார்* – லூக்கா 22:19-20
நியாயபிரமாணத்தின்படி எருசலேம் தேவாலயத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது நேரடியாக வர வேண்டிய கட்டாயம் இஸ்ரவேலருக்கு இருந்தது – 1 நாளா. 17:1-15, யோ. 4:21, உபா. 16:1, அப். 20:16
யூதரல்லாத அனைவரும் புறஜாதியினர். நெகே. 5:8
கிறிஸ்துவானவர் எங்கும் தொழுதுகொள்ளும் வண்ணம் அந்த முறையை மாற்றினார் – யோ. 4:21
அவருடைய சிலுவையில் – 613 கட்டளைகளும் முடிவிற்கு வந்தது. கொலோ. 2:14
இனியும் அதை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் சாபத்திற்குள்ளாகிறார்கள் – கலா. 3:10
613 கட்டளையில் ஒன்றை மீறினாலும் சாபம் வருகிறது !! கலா. 3:10, உபா. 27:26, எரே. 11:3, யாக். 2:9-10
நியாயபிரமாணத்தினாலே ஒருவரும் தேவனிடத்தில் நீதிமான் ஆகமுடியாது – ரோ. 3:20, கலா. 3:11, கலா. 2:16
இப்படி அடிப்படையை அறியாதவர்கள் – நியாயபிரமாணம் தேவை என்று மேடையில் கர்ஜிக்கிறார்கள் – 1தீமோ. 1:7
ரோ. 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
அப். 13:39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
விசுவாசிக்கிற எவருக்கும் கிறிஸ்து நியாயபிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் – ரோ. 10:4
இந்தியாவில் இருப்பவர்கள் அமெரிக்கா நாட்டின் சட்டத்திட்டங்களின்படி வாகனத்தை ஓட்ட முற்பட்டால் – இந்திய போக்குவரத்து காவல் துறை அபராதம் போடுவார்கள் !!
அது போல – நடைமுறையில் உள்ள கட்டளையாகிய புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படிவோாம்.
7ம் நாள் என்பது ஓய்வு நாள் – அது சனிக்கிழமை.
அந்த நாளில் எந்த வேலையும் செய்யாமல் ஓய்ந்திருக்கும்படி தேவன் இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார். அந்த முழு கட்டளைகளுமே சிலுவையில் முடிவுற்றது என்று மேலே பார்த்தோம்.
கிறிஸ்தவர்கள் – கிறிஸ்துவை தலையாக கொண்டு – கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்.
கிறிஸ்தவர்களுக்கு 7ம் நாளும் அல்ல சனிக்கிழமைகளிலும் அல்ல. வாரத்தில் முதல் நாளில் கூடி தொழுது கொள்ள வேண்டும்.
*ஏன் வாரத்தின் முதல் நாள்*?
1-இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாள் - மாற்கு 16:9
2-உயிர்தெழுந்த பின் பரமேரும் முன்னர் 6 முறை தரிசனமான நாட்கள் - மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக். 24:34; 24:13-15; 33,36, யோ. 20:19; 26
3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேரும் நாளுக்கும் இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது - யோ 20:19, 26, அப். 2:1
4- சபை ஸ்தாபிக்கப்பட்டது - அப். 2:1
5- பரிசுத்த ஆவியானவர் இறங்கின நாள் - அப். 20:1-4
6-அப்பம் பிட்கும்படி கூடினார்கள் - அப். 20:7
7- காணிக்கை சேர்க்கும்படி கூடினார்கள் - 1கொரி. 16:1-3
இந்த அருமையான கேள்வியினால் அநேகர் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக