சனி, 22 ஏப்ரல், 2023

வேதாகமத்தில் எண்கள் - #12(பன்னிரெண்டு)

 


*வேதாகமத்தில் எண்கள் - #12(பன்னிரெண்டு)*

By: Eddy Joel Silsbee

 

நம்மை முழுவதுமாய் நேசிக்கும் பிதா தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

வேதாகமத்தின் எண்களை ஆராய்ந்து வருகிறோம்.

*இன்று எண் 12*

                                                    

12 – தேவன் (3) x மனிதனுக்காக உலகத்தில் (4) இறங்கி வந்ததையும், தேவனுடைய சபையையும், தேவனுடைய வல்லமையையும், அவருடைய திட்டமான ராஜரீகத்தையும் குறிக்கிறது.

 

தேவனுடைய வேலையில் பொல்லாதவர்களை அழிப்பதும் உண்மையுள்ளவர்களின் மீட்பும் அடங்கும். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக, மனிதனை மீண்டும் தேவனிடம் கொண்டுவருவதற்கான முயற்சியாக நாகரிகத்துடன் இணைந்து பணியாற்ற தேவன் மனிதனுக்கு 120 வருட கால அவகாசம் கொடுத்தார். ஆதி. 6:3

 

120 வருடங்கள் மனிதனுக்கு அவகாசம் அல்லது எச்சரிக்கை.. [தேவத்துவம்(3) உலகத்திற்காக(4) முழுமையாய்(10) கொடுத்தது - 3x4x10=120]

 

12 கோத்திரங்கள் – பழைய ஏற்பாட்டில். ஆதி. 49:28

12 அப்போஸ்தலர்கள் – புதிய ஏற்பாட்டில். மத். 10:1-4

 

பிரதான ஆசாரியன் கவசத்தில் 12 கற்கள் (யாத். 28:15-21)

 

வருடத்திற்கு 12 மாதங்கள் (எபிரேயத்தில் துவங்கியது)

 

பகலுக்கு 12 மணித்துளிகள். யோ. 11:9

 

12புளிப்பில்லா அப்பங்களை பிரதான ஆசாரியன் ஓய்வு நாள் தோறும் ஆசரிப்பு கூடாரத்தில் வைக்கவேண்டும் (லேவி. 24:5-6)

 

12 ஆச்சரியமான காரியங்கள் ஆசரிப்பு கூடாரத்தில் !!  *வாசித்து எண்ணி* பாருங்கள் (read & count) – எண். 7:84-88

 

எண். 7:84-88  பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது:

வெள்ளித்தாலங்கள் *பன்னிரண்டு*,

வெள்ளிக்கலங்கள் *பன்னிரண்டு*,

பொன் தூபகரண்டிகள் *பன்னிரண்டு*. 

ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது.

தூபவர்க்கம் நிறைந்த

பொன் தூபகரண்டிகள் *பன்னிரண்டு*, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது. சர்வாங்க தகனபலியாகச்

செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் *பன்னிரண்டு*,

ஆட்டுக்கடாக்கள் *பன்னிரண்டு*,

ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் *பன்னிரண்டு*,

அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட

வெள்ளாட்டுக்கடாக்கள் *பன்னிரண்டு*.

 

12 நபர்களை நிற்க இஸ்ரவேலர்கள் யோர்தானை கடக்க சொன்னார் தேவன் (யோசு. 3:17)

 

12வயதான போது இயேசுவை எருசலேமில் பார்க்கிறோம்! (லூக். 2:41-47)

 

வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் மாத்திரம் :

12 கதவுகள், அஸ்திபாரங்கள், பெயர்கள், பன்னீராயிரம் நீளம்xஅகலம்xஉயரமுள்ள  நகரம், ஆபரணங்கள், முத்துக்கள், பழங்கள் !! எல்லாம் 12ல்

 

*கவனிக்க* :  எண்களை ஆராய்ந்தது பைபிள் ஜோதிடத்திற்கு அல்ல !! 

தேவனின் செய்கைகளில் உள்ள எண்களின் ஒற்றுமையும் அர்த்தங்களையும் நாம் ஆச்சரியத்தோடு உணர்ந்து கொள்கிறோம் !!

 

அர்த்தமில்லாமல் எந்த எண்ணும் வேதத்தில் பார்க்க முடியவில்லை !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர்

தொடர்பு : +91 81 44 77 6229

   

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும்:

https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtube.com/live/7IeV2_hzznA

 

வேதாகம எண்கள் #12ஐக் குறித்த விரிவான தகவலுக்கு - வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:

https://youtu.be/NPnYNU3q9JA?t=411

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக