*வேதாகமத்தில் எண்கள் - #5 (ஐந்து)*
By: Eddy Joel Silsbee
கிருபையுள்ள தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
வேதாகமத்தில் வரும் எண்களை நாம் பார்த்து வருகிற முறைப்படியே இன்று 5ம் எண்ணை பார்க்கபோகிறோம்.
5 – தேவ கிருபையை குறிக்கிறது.
தேவனை குறிக்கும் 1 + உலகத்தை குறிக்கும் 4 = 5கிருபை என்றோ, தேவத்துவத்தை குறிக்கும் 3 + பிரிவை குறிக்கும் 2 = 5கிருபை என்றும் சொல்லமுடியும்.
5 என்ற கிருபையின் எண்ணிக்கை, தானாகப் பெருக்கப்படும் போது, 'கிருபையின் மீது கிருபை பெற்றோம். யோ. 1:16
பத்து கட்டளைகளில் 5 கட்டளைகளின் இரண்டு தொகுப்புகள் உள்ளன. முதல் 5 கட்டளைகள் மனிதன் மற்றும் தேவனுடனான உறவு தொடர்பானவை, கடைசி 5 கட்டளைகள் மனிதன் மனிதனுடனான உறவைப் பற்றியது.
தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தின் கிருபையை 5விதமான பலிகள் மூலமாக ஆபிரகாம் செலுத்தினார். ஆதி. 15:9
தேவ கிருபையால் தாவீது கோலியாத்தை வென்றார். அவர் எடுத்துகொண்டது 5கல் ! (1சாமு. 17:40) உபயோகப்படுத்தினது 1 (தேவன்) கல்!
பரிசுத்த அபிஷேக தைலத்தை உண்டுபண்ணும்படி தேவன் மோசேக்கு கட்டளையிட்டது 5 கந்தவர்க்கங்களை கொண்டு !! யாத். 30:23-25
பரிசுத்த தூப வர்க்கமும் 5ஆல் செய்யும்படி தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். யாத். 30:34-35.
ஆசரிப்பு கூடாரம் – 5ஐ கொண்டு பெருக்கி உள்ளது! (யாத். 26-28)
100x50 – வெளிப்புறம்
சுற்றி மொத்தம் 60தூண்கள் (5கிருபை x 12 கோத்திரங்கள்
திரைசீலையை தாங்கி நின்ற தூண்கள் 5x5
திரைசீலை 5x5 பங்காக்கபட்டது.
தகனபலி பீடம் 5x5 – யாத். 27:1
தானியேல் உரைத்த 5வது இராஜ்ஜியம் – தேவனுடைய நித்தியமானது! தானி. 2:44
5ம் சீல் விசுவாசிகளின் மீட்பு என்று வெளிபடுத்தல் புஸ்தகம் சொல்கிறது. 6:9-11
( வேதத்திலுள்ள எண்களை புரிந்து கொள்ள மாத்திரமே இந்த பதிவுகள்.... எண் ஜோதிடத்திற்குள் நுழைந்து விடவேண்டாம்... அது தேவனுடைய பார்வையில் அருவருக்கத்தக்கது !! கவனம் )
தேவ கிருபை நம்மோடு இருப்பதாக!!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/GT45jMuRPvU
வேதாகம எண்கள் #5ஐக் குறித்த விரிவான தகவலுக்கும் வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:
https://www.youtube.com/watch?v=ZIbfxB21S6k&t=1416s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக