#804 - *கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவனை தொழுது கொள்ளும் நாளாயிற்றே. எதிர்ப்பதா கீழ்படிவதா?* வேதத்தின் படி பதில் தரவும்.
நேற்றைய (20-3-20) இரவில் பிரதம மந்திரி அவர்கள் கொரோனா தொற்று நோய் காரணமாக வரும்
22ந் தேதி மார்ச் மாதம் ஒரு நாள் தேசம் முழுவதும் 144 விதியின் கீழ் ஊரடங்கு உத்தரவு
அறிவித்துள்ளார்கள்.
கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவனை தொழுது கொள்ளும் நாளாயிற்றே.
எதிர்ப்பதா கீழ்படிவதா? வேதத்தின்படி பதில் தரவும்.
*பதில்*
இந்த
கொடிய நோய் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவது மறுக்கமுடியாத உண்மை.
இது
வரை அதை எதிர்க்ககூடிய மருந்து இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த
நோயால் பாதிக்கப்படாத சில நூறு பேர் தங்களை சோதனை கருவியாக தாமாக முன்வந்து
விஞ்ஞானிகளிடம் தஞ்சம் புகுந்து இந்த மருந்து கண்டுபிடிப்பிற்காக தங்கள் வாழ்க்கையை
ஒப்புக்கொடுத்து சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
இன்று
வரை 252,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10,405
நபர்கள் மரித்திருக்கிறார்கள்.
இந்தியா
உட்பட 182 நாடுகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படிபட்ட
சூழ்நிலையில் ஞாயிறு ஒரே ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு எவ்வளவு பிரயோஜனத்தை கொடுக்கும்
என்பதை நாம் பொருத்திருந்து பார்ப்போம். அரசாங்கம் மக்களின் பிரதிநிதி மாத்திரம்
அல்ல நம் தேவாதி தேவனே அவர்களை அந்த ஆசனத்தில் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிய
வேண்டும் - ரோ 13:4
வசனம்:
ரோ 13:4 உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு,
அவன் தேவவூழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப்
பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச்
செலுத்துகிற தேவவூழியக்காரனாயிருக்கிறானே.
இந்த
குறிப்பிட்ட கட்டுபாட்டில் நாம் அரசாங்க கட்டளைக்கு எதிர்த்து நின்றால் – ஆக்கிணைக்கு
உள்ளாவோம் – ரோ 13:2
வசனம்: ரோ 13:2
ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்;
அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே
ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
பிரதமர் காலை
7மணியிலிருந்து இரவு 9மணிவரை தானே அறிவித்திருக்கிறார் !!
24 மணி நேரத்தில் 14
மணி நேரம் தானே... மீதம் நம் கையில் 10 மணி நேரம் உள்ளது.
அதை பிரயோஜனபடுத்திக்கொள்ளலாம்
!!
சனிக்கிழமை இரவு 12.01லிருந்து
காலை 6.50 வரையும்
ஞாயிறு மாலை 9.05லிருந்து
இரவு 12.00 மணி வரையும் நம் கையில் தான் உள்ளது.
அரசாங்கம் ஒரு வேளை
தேவனை தொழுது கொள்ள கூடாது என்றால் – நமக்கு ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவும்
தானியேலும் – மிகச்சரியான முன்னுதாரணத்தை வைத்துப்போயிருக்கிறார்கள். தானி 3:1-6.
அதிலும் எனக்கு மிக மிக
மிக பிடித்த வாசகம் :
தானியேல் 3ம் அதிகாரம்
16ம் வசனம்.
அது வரை மூவரும் ராஜாவே
ராஜாவே என்றவர்கள் 16ம் வசனத்தில் நேபுகாத்நேச்சாரே என்று கெர்ஜிக்கிறார்கள் !!
எவ்வளவு பெரிய தேவனை நாம் வணங்குகிறோம்... அல்லேலூயா !!!
வாசித்து பார்க்கவும்
தானியேல் 3:14-16
அந்த காலங்கள்
திரும்பவும் வராது என்று சொல்வதற்கில்லை.
அதற்கு முன்பதாக - முழங்கால்கள்
முடங்கட்டும்.
கரங்கள் சேரட்டும்.
சத்தியத்திற்கு பிரசங்கியார்கள்
செவிசாய்த்து கீழ்படியட்டும். ஆடுகள் தானாக திருந்திவிடுவார்கள்.
அனைத்தும் மாறலாம் !!
இயேசுவை தேவனுடைய
குமாரன் என்று விசுவாசிக்கிறவன் உலகத்தை ஜெயிப்பான் – 1யோ 5:5
ஞாயிற்றுக்கிழமை
அடைப்பு என்று சனிக்கிழமையில் தொழுகையை நடத்தும் ஜனங்கள் வேதத்திற்கு முரணாக
இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக