*வேதாகமத்தில் எண்கள் - #9(ஒன்பது)*
By: Eddy Joel Silsbee
நியாயாதிபதியாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.
வேதாகமத்தின் எண்களை ஆராய்ந்து வருகிறோம்.
*இன்று எண் 9*
9 – இறுதி நிலை அல்லது நியாயதீர்ப்பை குறிப்பதாக வேதத்தில் காணமுடியும்.
இந்த 9ம் எண் ஆறாவது எண்ணுடன் தொடர்புடையது.
அதன் காரணிகளின் கூட்டுத்தொகை (3x3 = 9, மற்றும் 3+3 = 6).
இது மனிதனின் முடிவிலும், மனிதனின் அனைத்து படைப்புகளின் கூட்டுத்தொகையிலும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே ஒன்பது என்பது இறுதி அல்லது தீர்ப்பின் எண்ணிக்கை.
நோவாவின் காலத்தின் பாவம் நிறைந்த உலகை முடிவிற்கு கொண்டு வந்த நோவாவின் பேழை – 900 முழம்
இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட பாவநிவிர்த்தி நாள் (யோம் கிப்பூர்) தேவனுடைய வருடாந்திர விருந்து நாட்களில் ஒன்றாகும். ஏழாவது எபிரேய மாதத்தின் 9 ஆம் நாள் சூரிய அஸ்தமனத்தில் தொடங்குகிறது. லேவி. 23:32.
சிதேக்கியா ராஜாவின் ஆட்சியின் *ஒன்பதாம்* ஆண்டில் தான், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் யூதாவின் தெற்கு ராஜ்யத்தை கைப்பற்றி அழிக்கும்படி எருசலேம் நகரத்திற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள். 2 இரா. 25:1
ஓசெயாவின் *ஒன்பதாம்* வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 2 இரா. 17:6.
723 கி.மு. வில் அசீரியர்களிடம் விழுவதற்கு முன்பு இஸ்ரவேலின் கடைசி ராஜாவாக இருந்த ஓசெயா வெறும் *9* ஆண்டுகள் (732 முதல் 723 கி.மு.) ஆட்சி செய்தார். 2இரா. 17:1-2
ஆகாய் தீர்க்கதரிசி நியாயதீர்ப்பு குறித்து சொல்லும் போது *9* இடங்களையும் சேர்க்கிறார் (ஆகாய் 1:11)
உலகின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் உயிரைக் கொடுத்தது ஒன்பதாவது மணிநேரம். மத். 27:46.
ஆவியின் பலன்கள் *9* (கனிகள்). அவை அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். கலா. 5:22-23.
(அடிக்கடி ஆவியில் நிரம்புகிறவர்கள் யோசிக்கவேண்டியவை.... முதல் கனியே அன்பு தான். குடும்பத்தில் சண்டையே வராது. வீட்டில் சண்டை நிலைகொண்டிருந்தால் இருக்கும் ஆவி எது என்று சோதித்துப் பார்க்கவும்)
*9ம்* எண்ணுடன் எந்த ஒற்றை எண்களை பெருக்கினாலும் வரும் விடையை அதன் ஒன்றோடு ஒன்று கூட்டினால் – முடிவு – *9தான்* வரும்!!
*எ.கா :*
9x2=*18* = 1+8=*9*
9x5=*45* = 4+5=*9*
9x8=*72* = 7+2=*9*
9ம் எண் = முடிவு அல்லது நியாயதீர்ப்பு !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://www.youtube.com/watch?v=LegMiWKrkE4
வேதாகம எண்கள் #9ஐக் குறித்த விரிவான தகவலுக்கு - வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:
https://www.youtube.com/watch?v=q2FkkGyztm4&t=2037s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக