சனி, 1 ஜூன், 2019

#191 - இறந்ததிற்கு பின் நம் ஆவி எங்கு செல்லும்? என்ன நடக்கும்? நியாய தீர்ப்பு எப்படி கிடைக்கும்??

#191 - *இறந்ததிற்கு பின் நம் ஆவி எங்கு செல்லும்? என்ன நடக்கும்? நியாயத்தீர்ப்பு எப்படி கிடைக்கும்??*

*பதில்:*
1தெச. 5:23ல் மனுஷனானவன் ஆவி ஆத்துமா சரீரம் உள்ளவன் என்பதை அறிகிறோம்.

1- சரீரம் அழியக்கூடிய மண்ணினால் உருவானது.
அந்த சரீரம் தேவ சாயலில் உருவாக்கப்பட்டது. (ஆதி. 1:26-27)

மண்ணினால் மனிதனை உறுவாக்கிய தேவன்
தேவனானவர் தனது ஆவியை மண்ணிலிருந்து உருவாக்கிய மனித உருவத்தின் நாசியில் ஊதினார்.
மனிதன் உயிர் பெற்றான் (ஆதி. 2:7)

ஒருவரது மரணத்தின் போது அவரது சரீரம்
– மண்ணுக்கு திரும்புகிறது (புதைப்பதோ / எரிந்து விடுவதோ / அழிந்து விடுவதோ – எல்லாம் கடைசியில் மண்ணிலேயே முடிகிறது)

2- தேவன் மனிதனுக்குத் தந்த *ஆவி – தேவனிடத்திற்கு திரும்பிவிடுகிறது*. (பிரசங்கி 12:7)


3- *ஆத்துமா என்பது ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கை*.
இந்த ஆத்துமாவே நியாயத்தீர்ப்பு வரை காக்கப்படுகிறது.
மனிதன் மரிக்கும் போது வாழ்க்கை/வாழ்வு என்னும் ஆத்துமா சரீரத்திலிருந்து பிரிந்து தற்காலிகமான ஓர் இடத்தில் சேர்க்கப்படுகிறது.

இரட்சிக்கப்பட்டவர்களின் ஆத்துமா பரதீசுவிற்கும் (இளைப்பாறுதலிலும்);
இரட்சிக்கப்படாதவர்களின் ஆத்துமா (2தெச. 1:7) பாதாளத்திலேயும் (வேதனையிலும்) சேர்க்கப்படுகிறது (லூக்கா 16:19-31, 23:43).

*இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது:*
அது வரை மரித்த யாவருக்கும் (நல்லோர் தீயோர் இருவருக்குமே அதாவது பரதீசு மற்றும் பாதாளத்திலுள்ளவர்களுக்கும்) புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்பட்டு எழுந்திருப்பார்கள்.

அந்த க்ஷனம் வரை பூமியில் உயிரோடிருப்பவர்களும் கண் இமைக்கும் நேரத்தில் மண்ணினால் உருவான இந்த அழிவுள்ள சரீரம் மாற்றப்பட்டு அழிவில்லாத புதிய சரீரம் கொடுக்கப்படும்.

உயிர்த்தெழுந்த மரித்தோரும் மற்றும் மறுரூபமானவர் என்ற இந்த இரண்டு சாராருமே
அப்பொழுது கிறிஸ்துவின் முன்பு நின்று அவரவர், தம்தம் கிரியைக்கு தக்க தீர்ப்பை பெற்று
பரலோகமும் நரகமும் பெற்றுக்கொள்வர் (2கொரி. 5:10, யோ. 5:28-29, ரோ. 2:6-10, 1கொரி. 15:23, 51-53, 1தெச. 4:15-17)

ஆத்துமாவை குறித்த இன்னும் விரிவான விளக்கத்திற்கு கேள்வி #183ஐ வாசித்து பார்க்கவும்.

***** கொடுக்கபட்டுள்ள எல்லா குறிப்பு வசனங்களையும் வேதத்திலிருந்து வாசித்து பார்க்கவும். *****

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக