சனி, 7 மார்ச், 2020

#793 - தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடு;ம் வரைக்கும், அப். 2:34

#793 - *தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடு;ம் வரைக்கும், அப். 2:34 - இந்த வசனத்தை தெளிவு படுத்துங்கள்*

*பதில்*
12 அப்போஸ்தலர்களும் பரிசுத்த ஆவியாரனவரால் அபிஷேகம் பண்ணப்பட்டு நவமான வெவ்வேறு பாஷைகளை மற்றவர்கள் *அனைவரும் புரியும் வண்ணம்* பேசிக்கொண்டிருந்த பொழுது – தங்கள் தங்கள் பாஷைகளில் அந்த கலிலேயர்கள் பேசுவதை கேட்டு கூடியிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டதுமல்லாமல் பிரமித்துப் போனார்கள் (அப். 2:6-11)

ஒரு கூட்டதார் இப்படி கலங்கிபோக இன்னொரு கூட்டம் அப்போஸ்தலர்கள் மது போதையினால் இப்படி பேசுகிறார்கள் என்று பரியாசம் பண்ணினார்கள் (அப். 2:13)

அப்போது பேதுரு தன்னுடன் இருந்த 11பேரையும் எழுப்பி அனைவரது முன்பும் நின்று அந்த நாளின் விசேஷத்தை / முக்கியத்துவத்தை / சரித்திர நிகழ்வை / ஒரு புதிய அத்தியாயத்தை / சபையின் அஸ்பார நாளை அவர்களுக்கு விளக்கும் வண்ணம் நடந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்த யூதர்களுக்கும் இஸ்ரவேலருக்கும் - தீர்க்கதரிசனங்களிலும் ஆகமங்களிலும் இந்த நாளை குறித்து ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கமளிக்கிறார்.

யோவேல் தீர்க்கதரிசி சொன்னது இன்று நிறைவேறிவிட்டது என்றும் (அப். 2:17-21)  தாவீது இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லியிருக்கிறார் என்றும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற வசனம் *அந்த நாளில் (பெந்தேகோஸ்தே நாளான அந்த 50வது நாளில்) நிறைவேறினது*. இன்றும் இந்த வசனத்தை கோடிட்டு காண்பித்து கடைசி நாள் கடைசி நாள் ஆவியை ஊற்றுகிறார் என்று எவரும் உரிமை கொண்டாட முடியாது.. கடைசி நாள் என்பது – நியாயபிரமாண காலத்தின் கடைசிநாள் !! அது அன்று நிறைவேறியது.

யோவேலின் தீர்க்கதரிசனத்தை முன்னிட்டு அந்த நாளின் நிகழ்வை ஊர்ஜீதப்படுத்தினதை தொடர்ந்து தாவீதின் சங்கீதத்தில் சொல்லப்பட்டவைகளையும் பேதுரு குறிப்பிடுகிறார். (அப். 2:25)

அப். 2:25-28 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;

வ26- அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

வ27- என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

வ28- ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்

என்று பேதுரு சங்கீதம் 16ஐ குறிப்பிட்டு – தாவீது மரணமடைந்ததும் அடக்கம் பண்ணினதும் இது வரை அந்த கல்லறை திறக்கப்படாமல் அவர் மரித்தோரின் மத்தியிலேயே இருப்பதும் உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தானே... ஆகவே தாவீது தன் சங்கீதத்தில் தன்னை குறித்து அல்ல இந்த இயேசு கிறிஸ்துவை குறித்து தான் சொன்னார் என்று விளக்குகிறார். (வ29-31, 34-35)

இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்ததற்கு நாங்களே சாட்சிகள் என்று தைரியமாக சூளுரைத்தார் – வ32

தொடர்ந்து பேதுரு அவர்களுடனே பேசி - இந்த இயேசுவை பிதாவான தேவன் தாமே ஆண்டவுரும் கிறிஸ்துவுமாக்கினார் என்பதை தெரியப்படுத்துகிறார் (வ36)

கிறிஸ்து என்றால் இரட்சகர் என்று பொருள்.

அதை அறிந்த / உணர்ந்த / ஏற்றுக்கொண்டவர்கள் சுமார் 3000 புருஷர்கள் இயேசுவை கிறிஸ்துவாக ஏற்றுக்கொண்டு தங்கள் பாவம் மன்னிக்கப்படும்படி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள் (அப். 2:37-38)

ஞானஸ்நானம் பெற்றவர்களே இரட்சிக்கப்பட்டார்கள் – அப்படிப்பட்டவர்களை தேவன் கிறிஸ்துவின் சரீரமாக ஒரு அங்கமாக சேர்த்துக்கொண்டார் (அப். 2:47)

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் கொடுப்பது இந்த கால தவறான போதனை !!

ஞானஸ்நானம் பெற்றவர்களே இரட்சிக்கப்பட்டார்கள் என்பது வேதத்தின் போதனை ... மாற்கு 16:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக