சனி, 14 மார்ச், 2020

#794 - சுவிசேஷத்தை குறித்து உங்கள் நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; இதில் “உங்கள்” எனும் போது புறஜாதியார்களாயாகிய எங்களையா குறிக்கிறது.

#794 - *ரோமர் 11:25-28 இதில் வரும் புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் …… அப்படியென்றால் புறஜாதியாருடைய நிறைவு எதை குறிக்கிறது ?*

சுவிசேஷத்தை குறித்து உங்கள் நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; இதில் “உங்கள்” எனும் போது புறஜாதியார்களாயாகிய எங்களையா குறிக்கிறது.

விளக்கம் தாங்க பிரதர் நன்றி

*பதில்*
தமிழ் வேதாகமத்தில் ஜாதிகள் என்று மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தையானது : தமிழர்கள் (ஹிந்து மதத்தினர்) மத்தியில் இருக்கும் ஜாதி பிரிவாகிய பிராமனர் ஷத்ரியர் வன்னியர் நாடார் சூத்திரர் அகமுடையார் பிற்படுத்தப்பட்டோர் SC/ST MBC என்று இன்னும் இப்படி 70க்கும் மேற்பட்ட பிரிவை குறிப்பது அல்ல.

இந்த ஜாதி பிரிவுகள் இந்துக்களின் அடிப்படையில் வந்தவை. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். கிறிஸ்தவன் ஆன பின்பும் தன்னை ஜாதி மூலம் அடையாளப் படுத்திக்கொள்பவர்கள் பூரணமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது.

மாறாக வேதாகமத்தில் ஜாதிகள் என்பது தேசத்தாரை குறிக்கிறது.

யூத (இஸ்ரவேலர்) ஜனங்களை தேவன் தனக்கென்று தெரிந்து கொண்டார். உபா 7:6-7, உபா 14:2

அந்த நாளில் தெரிந்தெடுக்கப்படாத மற்ற தேசத்தார் அனைவரும் புறஜாதிகள் அல்லது புறதேசத்தார் – ரோ 9:24, எபே 2:12

நியாயபிரமானத்தின்படி புறஜாதியார் – தேவனுடைய ஆலயமாகிய எருசலேம் தேவாலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை – அப் 21:28, வெளி 11:2. சங் 79:1

கிறிஸ்துவோ – யூதரையும் புறஜாதியாராகிய நம் அனைவருக்காகவும் வந்தவர். இந்த பிரிவினையை தன் சிலுவையில் எடுத்துப்போட்டு ஒன்றாக்கினார். எபே 2:13-16

உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிடும் *புறஜாதியாருடைய நிறைவு* என்பது புறஜாதியாராகிய நம்மைப்போல உள்ளவர்கள் (யூத ஜனம் அல்லாத) கிறிஸ்துவை அறியாதவர்களும் இரட்சிப்படையும்படியாக சுவிசேஷம் கேட்கப்படும்வரை கிறிஸ்துவின் வருகை தாமதப்படும் என்கிறார் - மத் 24:14.

மேலும் அந்த நிறைவு வரும்வரை யூதரில் ஒரு கூட்டம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல்  எதிர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள் – ரோ 11:25

எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அந்த நாட்டு இராஜா தன் நாட்டு ஜனங்களை பார்த்து கதறினார் – சங் 122:6

அறியாத ஜனங்கள் தன் தேசத்திற்காகவும் தன் இனத்தாரின் இரட்சிப்பிற்காகவும் கதறுவதை விட்டு விட்டு எருசலேமிற்காக கதறுதிறோம் என்று விழா எடுத்து விளம்பரம் செய்து கதறிக்கொண்டிருக்கிறார்கள் யூதரல்லாத நம்மை போல உள்ள இந்த புறஜாதியினரான உள்ளுர் கிறிஸ்தவ மதபோதகத்தார் !!

நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே – இன்னமும் இஸ்ரவேலரில் ஒரு பிரிவை இரட்சிப்புக்குள்ளாக்க முயற்சிக்காமல் தேவன் அவர்களை விட்டிருக்கிறாராம் !! எவ்வளவு பெரிய அன்பு நம்மீது நம் பரம பிதாவிற்கு --- அல்லேலூயா...தேவனுடைய நாமம் வாழ்க!! ரோ 11:17

யூதர்களுடைய இரட்சிப்பு நிச்சயம் வரும் – ரோ 11:26, 23

சுவிசேஷத்தை குறித்து உங்கள் நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; இதில் “உங்கள்” என்பது புறஜாதியார்களாயாகிய நம்மையே குறிக்கிறது.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144776229 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக