#792 - *இந்த வசனத்தின் பிரகாரம் ஆபிரகாம் பரலோகத்திலே இருந்தாரா?*
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து,
தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். லூக்கா
16:23 இந்த வசனத்தின் பிரகாரம் ஆபிரகாம் பரலோகத்திலே இருந்தாரா??
*பதில்*
பரலோகத்தில்
இருந்தார் என்றோ பரதீசில் இருந்தார் என்றோ வசனப்பகுதி நமக்கு தெளிவுபடுத்தவில்லை.
ஆனால்
குறிப்பாக ஐஸ்வரியவான் பாதாளத்தில் இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது – லூக். 16:23
இந்த
பகுதியை வசனத்தின் மூலம் நாம் அறிய வேண்டும் என்றால்: இயேசு கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்புக்கு
பின்னரே நிரந்திர இடமாகிய பரலோகம் மற்றும் நரகத்திற்கு அவரவர் கிரியைகளின் படி அனுப்பப்படுவார்கள்
என்பதால் (மத். 25:31-46;
ரோ. 2:16; 1 கொரி. 5:13; 2 தெச. 1:7-10; 2 தீமோ. 4:8; யூதா 1:9,
14-15) ஆபிரகாமின் மடி என்பது பரதீசாக இருப்பதற்கு எல்லா
சாத்தியக்கூறுகளும் உள்ளது.
இயேசு
கிறிஸ்துவின் தற்காலிக இடம் பரதீசாக இருந்தது – லூக்கா 23:43
பவுல்
குறிப்பிடும் மனுஷனின் நியாயதீர்ப்புக்கு முன்னர் – சென்ற எல்கை பரதீசு – 2கொரி.
12:3
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக