சனி, 29 பிப்ரவரி, 2020

#777 - பழைய ஏற்பாட்டில் 39புத்தகம்தான் உண்டு என இயேசு சொன்னாரா? அப்போஸ்தலர்கள் சொன்னார்களா?

#777 - *பழைய ஏற்பாட்டில் 39புத்தகம்தான் உண்டு என இயேசு சொன்னாரா அப்போஸ்தலர்கள் சொன்னார்களா?*

*பதில்*
பழைய ஏற்பாடு என்றும் புதிய ஏற்பாடு என்றும் கிறிஸ்துவின் காலத்திலோ ஒரிஜினல் அப்போஸ்தலரின் (!!) காலங்களிலோ நாம் தற்போது கரங்களில் வைத்திருக்கும் தொகுப்பான வேதாகமம் கிடையாது.

அக்காலங்களில் தனிதனியே சுருள்களாக தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக சபைகளில் வாசித்து மற்றவர்கள் படிக்கும்படி கொடுத்து உதவி பயின்றார்கள் – எஸ்றா 6:2, எரே 36:14, 2தீமோ 4:13, 1தெச 5:27, கொலோ 4:16, அப் 8:30, லூக்கா 4:17, 20

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் சுமார் 400வது கி.பியில் பல தகுதியுள்ள கண்டெடுத்த சுருள்களை ஒரு புத்தகமாக வேதாகமம் என்ற பெயரில் இணைத்தார்கள்.

அப்படியானால் யார் எந்த அளவீட்டில் இதை செய்தது என்ற கேள்வியை கேட்போமென்றால்:

பல வேத வல்லுனர்கள் – தீர ஆராய்ந்து கீழ்வரும் விதிகளுக்கு உட்பட்டு உள்ள சுருள்களை தேர்வு செய்து 39+27=66 புத்தகங்கள் அடங்கிய வேதாகமாக இணைத்தார்கள்.

இந்த பதில் சம்பூரணமாக இருக்கமுடியாது என்றாலும் நான் கூடுமான அளவிற்கு முக்கிய சாராம்சத்தை மாத்திரம் விளக்க முற்படுகிறேன்.

நாம் தற்போது உபயோகிக்கும் 66 புஸ்தகங்கள் கொண்ட வேதாகமம் Canonical Bible என்றழைக்கப்படுகிறது.

Canonical Bible என்றால் என்ன?

கேனான் – கிரேக்க வார்த்தைக்கு அர்த்தம் – வரையறுக்கப்பட்ட அல்லது சரியான ரீதியில் அளவுகோளுக்கு இணங்க வகையறுக்கப்பட்டவை என்று பொருள்.சுமார் 5 அல்லது 6 தகுதிகளின் அடிப்படையில் 66 புத்தகங்கள் தகுதி பெற்றதன் அடிப்படையில் – அவைகள் முழு வேதாகமாக உருபெற்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த தகுதிகளை கவனிக்கவும்:

1. தேவனுடைய தீர்க்கதரிசியால் எழுதப்பட்ட புத்தகமாக இருந்ததா?

2. தேவனுடைய செயல்களால் எழுத்தாளர் உறுதிப்படுத்தியிருக்கிறாரா?

3. இந்த செய்தி தேவனை பற்றிய உண்மையைச் சொல்கிறதா?

4. அது தேவனின் வல்லமையோடு வந்ததா?

5. அந்த எழுத்துக்களை கிறிஸ்துவோ / அப்போஸ்தலர்களோ அதை குறிப்பிட்டார்களா?

வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டது என்று 2 தீமோ 3:16ல் வாசிக்கிறோம். அதன் அடிப்படையில் கண்டெடுத்த ஆராய்ந்த வகையில் மேலே உள்ள தகுதிகளில் வகையறுக்கப்படாத சுமார் 20 புத்தகங்களை வெளியே எடுத்துப்போட்டனர். அந்த பட்டியல் கீழே உள்ளது :

1.      Tobit or Tobias
2.      Judith
3.      Esther with additions
4.      1 Maccabees
5.      2 Maccabees
6.      Wisdom or Wisdom of Solomon
7.      Sirach or Ecclesiasticus
8.      Baruch
9.      Letter of Jeremiah
10.    Daniel with additions
11.    Song of the Three Children (Vulgate Daniel 3:24–90)
12.    Story of Susanna (Vulgate Daniel 13)
13.    The Idol Bel and the Dragon (Vulgate Daniel 14)
14.    Prayer of Manassas (Daniel)
15.    1 Esdras
16.    2 Esdras
17.    3 Maccabees
18.    4 Maccabees [45]
19.    Psalm 151
20.    Psalms of Solomon

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக