சனி, 29 பிப்ரவரி, 2020

#778 - அக்கிரமக்காரன் என்றால் என்ன?

#778  - *அக்கிரமக்காரன் என்றால் என்ன என்பதை அறிய வேண்டும்*

*பதில்*
கிரமம் – என்றால் நேர்த்தி / சரியானது.

கிரமமாய் செய்வது என்றால் – நேர்த்தியாக செய்வது அல்லது சரியானதை செய்வது.

கிரமக்காரன் – என்றால் சொன்ன விஷயத்தை அப்படியே நேர்த்தியாய் ஒழுங்காய் சரியாக செய்தவன்.

யாத். 40:4 மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி

அப். 18:23 அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.

1கொரி. 14:40 சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 

கிரமத்திற்கு நேர் மாறானது அக்கிரமம்.

விசுவாசத்திற்கு நேர் மாறானது அவிசுவாசம்

சன்மார்க்கத்திற்கு நேர் மாறானது துன்மார்க்கம்.

அது போல
அக்கிரமக்காரன் என்றால்
- சொல்லப்படாததை செய்கிறவன்.
- சொல்லப்பட்ட விதமாக செய்யாதவன்.
- கொடுக்கப்பட்ட மாதிரியின் படி செய்யாதவன்.

ஆதி. 19:5-7
யாத். 34:7
லேவி. 5:17, 7:18
2பேதுரு 2:12-16
1தீமோ. 1:9

தொழுகை முறை, கர்த்தருடைய பந்தி முறை, ஞானஸ்நானம் முறை,  பாடல் முறை, வாழ்க்கை முறை என்று சகலவற்றையும் தேவன் நமக்கு தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

அவைகளை நாம் கிரமமாக கடைபிடித்தல் அவசியம்.

அப்போது நாம் கிரமக்காரனாக அவர் முன்னதாய் நிற்போம்.

தன் நண்பன் என்று அழைக்கப்பட்ட மோசேயை கூட தேவன் இந்த அளவு கோலை ஒரு சின்ன விஷயத்தில் கூட தளர்த்தவில்லை !! யாத். 33:11, எண். 20:11-12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக