*வேதாகமத்தில் எண்கள் - #8 (எட்டு)*
By: Eddy Joel Silsbee
மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிரோடு எழுந்து புதிய துவக்கத்தை அளித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.
வேதாகமத்தின் எண்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.
*இன்று எண் 8*
எண் 8 – புதிய துவக்கமான இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
ஏழாம் நாள் (7) பூரணமாய் முடிந்து அடுத்து வரும் 8 - புதிய தொடக்கத்தை கொடுக்கிறது.
8 – வடிவத்தை கவனிக்கவும்.... துவக்கமும் முடிவும் இல்லாதது (Infinity), அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவரும் முடிவை காணமுடியாது !!! வெளி. 22:13
பேரழிவிற்கு பின்னர் 8 பேர் பேழையில் இருந்து வெளியே
புதிய வாழ்கையை துவங்கினர். ஆதி. 7:13, 1பேதுரு 3:20
8ம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது. ஆதி. 17:12, பிலி. 3:5
தேவனால் தெரிந்தெடுத்து அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது – தன் தந்தைக்கு 8வது பிள்ளை !! 1சாமு. 16:10-13, 1 நாளா. 2:15
8வது நாள் – வாரத்தின் புதிய நாள் (வாரத்தின் முதல் நாள் !! )
8ம் நாளில் – முதல் (1) பேரான குமாரரை– தேவனிடத்தில் கொடுப்பது... யாத். 22:29-30
(வேதத்திலுள்ள எண்களை புரிந்து கொள்ள மாத்திரமே இந்த பதிவுகள்.... எண் ஜோதிடத்திற்குள் நுழைந்து விடவேண்டாம்... அது தேவனுடைய பார்வையில் அருவருக்கத்தக்கது !! கவனம்)
ஆதியும் அந்தமுமான தேவனிடத்தில் தஞ்சமாய் இருப்போம். சகலத்தையும் நேர்த்தியாய் மேன்மையாய் சந்தோஷமாய் மாற்றுவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/HkhAdslU_Uk
வேதாகம எண்கள் #8ஐக் குறித்த விரிவான தகவலுக்கு - வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:
https://youtu.be/q2FkkGyztm4?t=515
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக