#776 - *ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள்
கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது (அதிகாரம்
30:39) - இது எப்படி சாத்தியம்?*
*பதில்*
30ம்
அதிகாரத்தின் 25 வது வசனம் ஒரு விசித்திரமான சம்பவத்தை தொடங்குகிறது.
ஆனால் லாபானுடனான விசித்திரமான ஒப்பந்தத்தில் யாக்கோபின்
அறிவைப் புரிந்துகொள்வது யாக்கோபின் குணாம்ச வளர்ச்சியை சிறப்பாகக் காண நமக்கு
உதவும்.
இந்த
சம்பவம் வரைக்கும் ஏற்கனவே யாக்கோபு லாபானுக்காக 14 ஆண்டுகள் சேவை செய்திருந்தார்.
ஆதி. 29:27, ஓசியா 12:12, (ஆதி. 31:41)
இப்போது
அவர் புறப்பட்டு கானானில் உள்ள தனது தந்தையிடம் திரும்ப விரும்பினார். ஆதி. 30:25
ஆயினும், லாபானோ யாக்கோபு தன்
கூடவே வைத்துக்கொள்ள விரும்பினார். ஏனென்றால் லாபானின் வீட்டில் இருந்தபோது
யாக்கோபு செய்த அனைத்தையும் தேவன் ஆசீர்வதித்தார். ஆதி. 30:27
லாபான்
செல்வந்தனாக வளர்ந்திருந்தான். ஆதி. 30:28
மருமகன்
என்றும் பாராமல் லாபான் யாக்கோபிடம் மிகவும் கண்டிப்பான முதலாளியாக நடந்திருந்தார்.
சிறிய நஷ்டத்தையும் விட்டுவிடாமல் அதற்கு ஈடாக யாக்கோபிடம் வசூல் செய்திருந்தார்.
இரவு பகல் பாராமல் வேலை வாங்கினார் – ஆதி. 31:39-40
சம்பளம்
எவ்வளவு என்று கேட்ட போது – லாபான் தன்னை மறுபடியும் தங்க வைக்க தூண்டுவதாக எண்ணியிருக்க
வேண்டும். ஏனென்றால் – நீர் எனக்கு எதுவும் தரவேண்டாம் என்று யாக்கோபு சொல்கிறதை
கவனிக்கவும் – ஆதி. 30:31
இந்த
பகுதி நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று !!
லாபானின்
மந்தையிலிருந்து வண்ணமயமான மற்றும் வரிகள் புள்ளிகள் கொண்ட ஆடுகளை பிரித்து, யாக்கோபுடைய
சம்பளமாக எடுத்துச் கொண்டது போல் தெரியும். ஆனால் வண்ணமயமான, வரிகள் புள்ளிகள் கொண்ட ஆடுகளை பிரித்து தன் குமாரரிடத்தில் லாபான் கொடுத்துவிட்டார்.
ஆதி. 30:35
அவனுடைய
குமாரர் மூன்று நாட்கள் பயண தூரத்தில் தங்கள் ஆடுகளை பிரித்து எடுத்துச்
சென்றார்கள் (வ36).
அப்படியானால் யாக்கோபுக்கு (லாபானுடைய) தூய வெள்ளை
ஆடுகளை மட்டுமே விட்டுச் சென்றது. அதாவது லாபானுடைய ஆடுகளை மேய்க்கும் வேலையை தொடர்ந்து
யாக்கோபு செய்கிறார்(வ31)
32ம்
வசனத்தின் கடைசி பிரிவு,
"இவை என் கூலியாக இருக்கும்" என்பது கொஞ்சம்
குழப்பமானதாகும்.
எபிரேய
மொழியில், "அது [அதாவது, எதிர்காலத்தில்] என் ஊதியமாக
இருக்கும்" என்று கூறுகிறது.
அவர்
மந்தையிலிருந்து அகற்றப்பட்ட புள்ளிகள் மற்றும் வண்ண ஆடுகள் அவருடைய கூலியாக
இருக்கும் என்று யாக்கோபு சொல்லவில்லை.
அதற்கு
பதிலாக, "நீங்கள் எனக்கு எதுவும் தரவேண்டாம்" என்பது யாக்கோபின் வார்த்தைகள்.
இனி
வருங்காலத்தில் மந்தையில் பிறக்கும் புள்ளிகள் அல்லது வண்ண ஆடுகள் யாக்கோபிற்கான கூலியாக
இருக்கும் என்று கூறுவார்.
ஆனால்
இது லாபனுக்கு சாத்தியமற்றதாகத் தோன்றியது - யாக்கோபுக்கு வெள்ளை ஆடுகள் மட்டுமே
இருந்தன!
வரிகள் புள்ளிகள் மற்றும் வண்ண ஆடுகள் இனி எத்தனை பிறந்து
விடும் என்பதால் லாபான் இந்த ஒப்பந்தத்திற்கு அவசரமாக ஒப்புக் கொண்டார் (வ34)
இப்போது, 33ம் வசனத்தின்
ஆரம்பம் மிக முக்கியமானது. "ஆகவே, என் ஊதியங்கள் உமக்கு
முன்பாக வரும்போது, என் நீதியும் எனக்குப் பதிலளிக்கும்
...." இந்த அறிவிப்பு யாக்கோபின் தன்மை வளர்ச்சியில் ஆழமான முன்னேற்றத்தைக்
குறிக்கிறது”.
பதான்
அராமிற்கு வந்தபோது, அவர் விரும்பியதைப் பெறுவதற்கு தனது சொந்த உள்ளார்ந்த திறன்களையும்
கைவினைகளையும் நம்பியிருந்த ஒரு கைதேர்ந்தவர் யாக்கோபு. ஆதி 29ம் அதிகாரம் 2லிருந்து
12ம் வசனம் முடிய வாசித்தால் இது விளங்கும். தன் அண்ணனுக்குரிய சேஷ்டபுத்திரபாகத்தையும் தகப்பனின் ஆசீர்வாதத்தையும்
வாங்கியது தெரிந்ததே !!
யாக்கோபு
செய்த எல்லாவற்றிலும் தேவன் அவரை ஆசீர்வதித்தார். யாக்கோபில் ஒரு மாற்றத்தை தேவனே ஏற்படுத்தினார்.
தேவனிடமிருந்து
ஆசீர்வாதங்களையும் செழிப்பையும் பெறுவதற்காக அவர் தனது நீதியான நடத்தையை
நம்பியிருந்த நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டார். ஆதி. 30:2, 30:27, 30:30, 31:5,
31:9
இது இதயத்தின் வியத்தகு மாற்றம், சரியான தன்மையில்
ஒரு பெரிய வளர்ச்சி!
37வது
வசனத்தில் பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின்
கொப்புகளை வெட்டி(பாப்லர், பாதாம் மற்றும்
கஷ்கொட்டை கிளைகள்) இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை
உரித்து போட்ட இந்த இடம் நமக்கு கேள்வியாக இருக்கிறது.
வாசிப்பவர்கள்
இதை ஒருவித மாயாஜால நடைமுறையாக இருப்பதையும் அல்லது பிள்ளை பேறு காலத்தில் பார்க்கும்
அதே வகை பிள்ளையும் பிறக்கிறது என்று நினைக்கின்றனர்.
38வது
வசனத்தைக் கவனியுங்கள்: "யாக்கோபு தோலுரித்த தண்டுகளை, மந்தைகள் குடிக்க
வந்தபோது தண்ணீர் தொட்டிகளில், குட்டைகளில் மந்தைகளுக்கு
முன்பாகவும் வைத்தார்” ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது கருத்தரிக்க வேண்டும்
என்று இந்த சம்பவம் தயார் படுத்தப்படுகிறது"
“(பொலிவு)
கருத்தரித்தல்" என்ற வார்த்தை எபிரேய வார்த்தையாகிய “யச்சாம்”லிருந்து
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது "சூடாக இருக்க வேண்டும்" என்று
பொருள்படும்.
மேலும்
விலங்குகளைப் பற்றி பேசும்போது,
"வெப்பத்தில் இருக்க வேண்டும்" என்று பொருள்படும்.
*ஏன்
தண்டுகளை தோலுறிக்க வேண்டும்*?
புதிய
வெட்டப்பட்ட தண்டுகளை உரிப்பதன் மூலம் (வ37),
சத்து நிறைந்த தண்டுகளின் தன்மை நேரடியாக தண்ணீரில் இலகுவாக வேகமாக கலப்பதற்கு
ஏதுவாகிறது.
இந்த
சத்தான தண்ணீரை ஆடுகள் பருகும் போது வெப்பத்திற்கு கொண்டு வர உதவும் என்று அவர்
நம்பினார்.
உரிக்கப்பட்ட
தண்டுகள் ஒரு வகையான தற்காலிக மர வேலியாகப் பயன்படுத்தப்பட்டன என்றும், மந்தைகள் குடிக்க
வந்தபோது அவை இனச்சேர்க்கைக்கு நீண்ட நேரம் ஒன்றாக இருக்கும்படி அமைக்கப்பட்டன
என்றும் வேத வல்லுனர்களால் கூறப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட
நல்ல ஆடுகள் இனப்பெருக்கத்திற்கு யாக்கோபு தெரிந்தெடுப்பதையும் 41-42 வசனங்கள்
நமக்குத் தெரிவிக்கின்றன.
மந்தையின் சிறந்தவைகளுக்கு மாத்திரம் இந்த விசேஷ தண்ணீர்
சிகிச்சையளிப்பதை உறுதிசெய்கின்றன. (வ41)
நாம்
கவனிக்க வேண்டியது என்னவென்றால் எந்த நேரத்தில் எந்த ஆடுகளை இணை சேர்க்க வேண்டும் என்று
தேர்ந்தெடுப்பதில் உதவியாய் இருந்திருந்தாலும் இந்த ஏற்பாடுகள் நிமித்தமே புள்ளிகள்
மற்றும் வண்ண ஆடுகளை உருவாகின என்று சொல்வதற்கில்லை.
யாக்போபின்
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற,
யாக்கோபின் வம்சத்தை ஆசீர்வதிக்க தேவன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஆடுகளின் அசாதாரண நிறத்தை இந்த தண்டுகளோ அல்லது முயற்சியினாலோ அல்ல அதை தேவனே ஏற்படுத்தினார்
– ஆதி. 31:7-10
யாக்கோபு
சொன்னது போல்: "என் நீதியே எனக்கு பதிலளிக்கும்"
வண்ண
ஆடுகளின் உற்பத்தி யாக்கோபின் நீதியின் தேவனின் பிரதிபலிப்பாகும்.
உண்மையில், லாபான், விளைவின் முடிவுகளைப் பார்த்து, யாக்கோபுக்கு எந்த
ஆடுகளைப் பெறுவார் என்ற ஒப்பந்தத்தை மாற்றிக் கொண்டே இருந்தார் என்பதையும் நாம் கவனிக்க
வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உற்பத்தி செய்யப்படும்
ஆடுகளின் நிறத்தை தேவனும் யாக்கோபிற்கு சாதகமாக மாற்றினார் – ஆதி. 31:8
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக