#775 - *அப்பமும் திராட்சை ரசமும் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறுகிறதா?*
வாரத்தின் முதல் நாள் காலை ஆராதனையில் கர்த்தரின் சரீரம்=(அப்பம்), இரத்தம்=(திராட்ச
ரசம்) கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்ட பின் சபையாருக்கு பங்கிடப்படுகிறது.
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதற்கு முன் கோதுமையில் செய்யப்பட்ட
அப்பமாகவும், திராட்சை பழத்தில் கிடைக்கும்
சாராகவும் இருக்கிறது.
கர்த்தரால் ஆசீர்வதிக்பட்ட பின் அவைகள் கிறிஸ்துவின் சரிரமாகவும், இரத்தமாகவும்
மாறிவிடுகிறது.
மீதம் உள்ளது மாலை ஆராதனைக்காக வைக்கப்படுகிறது.
திரும்பவும் மாலை ஆராதனையில் (காலை ஆராதனையில் பங்கிட்டு கொடுத்து
மீதம் உள்ள கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் எடுத்து ஆசீர்வதிக்கும் படி செய்வது
சரியா?
காலை ஆராதனையின் போது அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் படி கேட்கிறேம், அப்பம்
கிறிஸ்துவின் சரீரமாக ஆசீர்வதிக்கப்படுகிறது.
மாலை ஆராதனையில் நாம் கையில் எடுப்பது கிறிஸ்துவின் சரிரமா? அல்லது
அப்பமா? கிறிஸ்துவின் சரிரமாக இருந்தால் ஏன் திரும்பவும்
ஆசீர்வதிக்கும் படி வேண்டுதல் செய்கிறோம்?
*பதில்*
1)
அப்பமும்
திராட்சை ரசமும் ஒரு போதும் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறுவது இல்லை.
இரத்தத்தை
உண்பது கிறிஸ்தவனுக்கு தடுக்கப்பட்டது – அப் 15:20
ஜெபித்ததும்
– மேஜையில் இருக்கும் அப்பமும் திராட்சை ரசமும் மாமிசமாகவும் இரத்தமாகவும் மாறிவிடுகிறது
என்ற போதனையை உட்புகுத்தியது கத்தோலிக்கம் (Transubstantiation)
கத்தோலிக்கத்திற்கும்
கிறிஸ்தவத்திற்கு சம்பந்தம் இல்லாத அளவிற்கு அவர்களின் போதனை மற்றும் முறைகள்
அனைத்தும் வேதத்திற்கு முரணானவை. இதனை குறித்த ஒப்பீடை #475ஐ பார்க்கவும்.
*அப்பமும்
மாமிசமாகவும் திராட்சை இரசம் இரத்தமாகவும் மாறுகிறதா என்று கூற்றுக்கு வேதம் என்ன
பதில் சொல்கிறது*?
மத்தேயு 26: 26-29ன் படி கத்தோலிக்கர்கள் “இது என் சரீரம்”
என்றும் “இது என் இரத்தம்” என்றும் இயேசு சொன்னதை சுட்டிக்காட்டுகின்றனர்.
இயேசு இதை உண்மையில் சொன்னாரா அல்லது ஒரு உருவமாக அல்லது
அடையாளமாக சொன்னாரா என்பதை கவனிக்க வேண்டும்.
ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இது குறியீடாக இருப்பதை
புரிந்து கொண்டனர்.
கிறிஸ்து தன் சீஷர்களுக்கு முன்பாக முழுதாக இதை சொல்லும்
போது ஒரு அடையாளமாகவே குறிக்கிறார்.
ஆனால் அதிசயமாக மாறுகிறது என்று கூறி ரோமன்
கத்தோலிக்கர்கள் இதை நிராகரிக்கின்றனர்
ஆயினும்,
வேதத்தின் மற்ற எல்லா அற்புதங்களையும் போலல்லாமல், இது அறிவிக்கப்படாத, காணப்படாத, மற்றும் அங்கு இருந்தவர்களால் கவனிக்கப்படாதது என்று கூறப்படுகிறது.
அடையாள மொழியாக இது சொல்லப்படவில்லை என்றால், சீஷர்கள் எவ்வாறு அந்த
*பாத்திரத்தை* குடித்தார்கள்? - மத்தேயு 26:27
பாத்திரம்
அவருடைய இரத்தம் என்று சொன்ன பிறகு,
இயேசு அதை திராட்சை ரசம் என்றே அழைக்கிறார் - மத்தேயு 26:29.
இதே
போல பவுலும் குறிப்பிடுவதை கவனியுங்கள்:
*முதலாவது*:
1கொரி 11:24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு:
நீங்கள் வாங்கிப் புசியுங்கள், *இது உங்களுக்காகப்
பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது*; என்னை
நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
1கொரி 11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே
பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் *என் இரத்தத்தினாலாகிய* புதிய
உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப்
பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
*இரண்டாவது*
(பகிர்ந்த பின்பு – மறுபடியும் அப்பம் பாத்திரம் என்றே சொல்லப்பட்டிருப்பதை
கவனிக்கவும்)
1Co 11:26 ஆகையால்,
நீங்கள் *இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில்* பானம்பண்ணும்போதெல்லாம்
கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
1Co
11:27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் *கர்த்தருடைய
அப்பத்தைப்* புசித்து, அவருடைய *பாத்திரத்தில்*
பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும்
இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
1Co
11:28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, *இந்த அப்பத்தில் புசித்து, இந்தப்
பாத்திரத்தில்* பானம்பண்ணக்கடவன்.
2)
*உங்களுடைய
இரண்டாவது கேள்வி* :
திரும்பவும் மாலை ஆராதனையில் (காலை ஆராதனையில் பங்கிட்டு கொடுத்து
மீதம் உள்ள கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் எடுத்து ஆசீர்வதிக்கும் படி செய்வது
சரியா?
அப்பமும்
திராட்சை இரசமும் மாமிசமாகவும் இரத்தமாகவும் மாறுவது இல்லை என்று மேலே பார்த்தோம்.
ஆனால்
காலையில் சுட்ட அப்பமும் பிழிந்த திராட்சை இரசமும் மாலையில் புளித்து போக அதிக
வாய்ப்பு உள்ளது.
புளிப்பு
– பாவத்தை குறிக்கிறது – 1கொரி 5:7-8
மாலையிலும்
தொழுகையை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சபையானது – அப்பமும் திராட்சை
இரசத்தையும் மாலையில் புதியதாக செய்ய வேண்டும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக