புதன், 15 ஜனவரி, 2020

#715 - யோசேப்பின் முதல் மனைவிகளின் பிள்ளைகள் என்று RC சபையார் கூறுவது சரியா?

#715 - *மரியாளின் பிள்ளைகள் யோசேப்புக்கு பிறந்த பிள்ளைகள் இல்லை என்றும் இவர்கள் யோசேப்பின் முதல் மனைவிகளின் பிள்ளைகள் என்று RC சபையார் கூறுவது சரியா?*

இவன் தச்சன் அல்லவா
? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். மாற்கு 6:3

அ) இந்த வசனத்தில் உள்ள மரியாளின் பிள்ளைகள் யோசேப்புக்கு பிறந்த பிள்ளைகள் இல்லை என்றும் இவர்கள் யோசேப்பின் முதல் மனைவிகளின் பிள்ளைகள் என்று RC சபையார் கூறுவது சரியா?

ஆ) மரியாள் யோசேப்பு இருவரும் மரிக்காமல்  (எலியா) போல்  எடுத்து கொள்ளப் பட்டார்கள் என்று உபதேசம் செய்வது சரியா?  பதில் தரவும்.

*பதில்*
லட்சக்கணக்கான ஊழியர்களும் குருமார்களும் அவரவர் தங்களுக்கு தேவன் வெளிப்படுத்தினார் என்று எதை சொன்னாலும் – அந்த கருத்து நம் கையில் வைத்திருக்கும் வேதத்தில் இல்லையென்றால் நாம் நம்பக்கூடாது – யோ. 16:13-15, கலா. 1:8, வெளி. 22:18-19.

வேதத்தின்படி யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்கள் மரியாளுக்கு பிறந்தவர்கள் என்று அறிகிறோம். இதற்கான முழு விபரங்களுக்கு பதிவு #531ஐ பார்க்கவும்.

வேதத்தின்படி நடப்பவர்கள் தவறாக எதையாவது சொல்லும் போது நாம் ஆராயலாம் அல்லது திருந்தவோ திருத்தவோ முயற்சிக்கலாம்.

எப்படி இந்துக்களையோ இஸ்லாமியர்களையோ அல்லது மற்ற மதத்தினரையோ நாம் ஒப்பிடக்கூடாதோ RC சபையினரை குறித்தும் நாம் வேதத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்களுக்கு என்று தனி கோட்பாடு உண்டு. தனி தலைவர்கள் உண்டு.  தங்கள் தலைவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டியது அவர்கள் கோட்பாடு.

வேதத்திற்கும் RC சபையினருக்கும் என்ன வித்தியாசம் என்று அறிய பதிவு #475ஐபார்க்கவும்.

எவர் எல்லாம் நேரடியாக வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் என்ற தகவல் வேதத்தில் உள்ளது. அந்த பட்டியலில் மரியாளும் யோசேப்பும் இல்லை.

நாம் வேதத்தை மீறி எண்ணங்கொள்ள முடியாது. 
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
  
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html 
 
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக