புதன், 15 ஜனவரி, 2020

#716 - லூக்கா 14:26,33 ல் உள்ளது போல் ஏன் இயேசு இப்படி கூறினார்? இந்த வசனங்களை விளங்கப்படுத்துங்கள். உறவுகளை தந்து விட்டு இவையெல்லாம் வெறுக்கும் படி கூறினால் அது எப்படி முடியும்?

#716 - *லூக்கா 14:26,33 ல் உள்ளது போல் ஏன் இயேசு இப்படி கூறினார்?* இந்த வசனங்களை விளங்கப்படுத்துங்கள். உறவுகளை தந்து விட்டு இவையெல்லாம் வெறுக்கும் படி கூறினால் அது எப்படி முடியும்?

*பதில்*
சீஷத்துவத்தின் விலையை குறித்து இந்த வசன பகுதி தெளிவுபடுத்துகிறது.

நீங்கள் குறிப்பிட்ட வசனங்களை கீழே மற்றவர்கள் இலகுவாக கேள்வியை புரிந்துகொள்ளும்படி கீழே பதிவிடுகிறேன்.

லூக்கா 14:26 - யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

லூக்கா 14:33 - அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார் 1யோ. 4:8

சக சகோதர சகோதரிகளை நேசிக்காதவன் தேவனை நேசிக்க முடியாது 1யோ. 2:11, 1யோ. 2:9

ஆனால் முதன்மையான முன்னுறிமை எவருக்கு என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் - தகப்பனையாவது தாயையாவது *என்னிலும் அதிகமாய்* நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது *என்னிலும் அதிகமாய்* நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத். 10:37

தேவனை முழு இருதயத்தோடும் முழு மனதோடும் தேடினால் மற்ற யாவற்றையும் தேவன் நமக்கு தருகிறார் மத். 6:33

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராகத் இருப்பதற்கு எந்த குடும்ப உறுப்பினர்களையும் விட அவரிடம் அதிக அன்பு அவசியப்படுகிறது.

இயேசு, "உங்கள் சொந்த வாழ்க்கையை நேசிப்பதை விட நீங்கள் என்னை நேசிக்காவிட்டால் நீங்கள் என்னுடன் வர முடியாது" என்று கூறினார்.

இயேசுவின் சீர்கள் இயேசுவை முன்னிட்டு மரணத்தை எதிர்கொள்ள கூட தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார் (லூக். 14: 27)

அவ்வாறே, தன்னிடம் உள்ள அனைத்தையும் கைவிடாத எவரேனும் ன் சீராக இருக்க முடியாது என்றார்.

குடும்ப அன்பின் உறவுகளை விட நம் அன்பு அதிகமாக இருக்க வேண்டும், லூக். 14: 26;

நம்முடைய சொந்த அன்பை விட அதிகமாக அது இருக்க வேண்டும். சொந்த அன்பை சிலுவையில் அறைந்திருக்க வேண்டும். லூக். 14:27.

நம்முடைய உடைமைகள் மற்றும் சொத்துக்களின் அன்பை விட அதிகமாக இருக்க வேண்டும், லூக். 14:33.

தேவனை விட அதிகமாக யாரிடம் நாம் அன்பு வைக்கிறோமோ அது அவருக்கு ஆபத்து. எசே. 24:16

உறவுகளை தந்துவிட்டு அவர்களை வெறுக்க சொல்லவில்லை தேவனுக்கு சமமாக யாரையும் எதையும் வைக்கக்கூடாது என்றே நமக்கு வலியுறுத்துகிறார் யாத். 20:3-5

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக