#475 - *கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்களா? வேதத்திற்கும் கத்தோலிக்கர்கள் கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளதா?*
*பதில்* :
இந்த கேள்விக்கு முழுமையான ஒரு பதிலை நான் கொடுக்க முயற்சிக்கிறேன் – ஓரளவு ஒரு கண்ணோட்டத்தை கொடுப்பது உதவும் என்று நம்புகிறேன். அந்தளவிற்கு முரண்பாடுகள் இருவருக்கும் உண்டு !!!
கத்தோலிக்கம் கிறித்துவத்தின் *வேர்களைக்* கொண்டுள்ளது.
பவுல் 1தீமோத்தேயு 4ம் அதிகாரம் 1-3ம் வசனங்களில் சொன்னவற்றை நம் காலங்களில் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கத்தோலிக்கம் அதன் மதகுருக்களை - திருமணம் செய்வதைத் தடைசெய்கிறது.
வேதமோ ஊழியம் செய்பவர் திருமணம் செய்திருக்க வேண்டும் என்கிறது (தீத்து 1:6)
விக்கிரக வழிபாடு கூடாது என்கிறது வேதம் (1யோ. 5:21).
கத்தோலிக்கர்கள் விக்கிரகத்தை வழிபடுபவர்கள்.
தேவனை தவிர யாரையும் தொழுது கொள்ள கூடாது என்கிறது வேதம் (யாத். 20:3).
கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயாகிய மரியாளையும் இயேசுவின் சீஷர்களையும் விட்டுவைக்கவில்லை.
சகோதரர் என்றே அனைவரும் அழைக்கப்படவேண்டும் என்கிறது வேதம்.
ஆனால் ஃபாதர் என்றும் மதர் என்றும் அதன் ஊழியர்கள் அழைக்கப்படுகிறார்கள். (மத். 23:8)
தெளிப்பு ஞானஸ்நானமும், குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை 180ம் கி.பியில் அறிமுகப்படுத்தினார்கள் கத்தோலிக்கர்கள்.
வேதமோ - ஞானஸ்நானம் என்பது முழுகி எடுக்க வேண்டும் என்று சொல்கிறது (ரோ. 6:1-5, எபே. 5:26, தீத்து 3:5)
கி.பி 2ம் நூற்றாண்டுகளில் ஜெபித்தவுடன் கையாலே மேலேயும் கீழேயும் இடதும் வலதும் தொட்டுக்கொண்டு சிலுவையை போல போட்டுக் கொள்ளும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.
வேதமோ சிலுவை என்ற வேதனையை தான் தூக்க சொன்னது (மத். 16:24)
கி.பி 3ம் நூற்றாண்டுகளில் வட்டார முறைப்படி பிஷப் முறையை கத்தோலிக்கம் கொண்டு வந்தது.
வேதமோ பிஷப் என்பவர் *அந்தந்த சபைக்கு* மாத்திரமே நியமிக்கப்படுவர் என்று சொல்கிறது (1பேதுரு 5:3, அப். 20:28)
கி.பி. 360ம் ஆண்டு கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையை அறிமுகப்படுத்தினார்கள்.
டிசம்பர் 25க்கும் கிறிஸ்துவிற்கும் சம்பந்தமேயில்லை என்பது வேத நிகழ்வுகளின் அடிப்படையிலும் கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையின் மூலஆதாரமும் தெளிவாக விளக்குகிறது. லூக்கா 2:8, 2:3
கி.பி 670ம் ஆண்டு தொழுகையில் இசைகருவியை (ஆர்கன்) அறிமுகப்படுத்தி எதிர்ப்புகளினால் திரும்ப எடுத்து பின் மறுபடியும் கி.பி 775ம் ஆண்டு இணைத்து இன்று மற்ற அனைவரும் பின்பற்றும்படி செய்தவர்கள் இவர்களே.
புதிய ஏற்பாட்டிலோ இசைகருவியை தொழுகையில் உபயோகப்படுத்தியதாக எங்கும் காணமுடியாது.
கி.பி 1090ம் ஆண்டுகளில் ரோசாரி என்ற மாலையை அறிமுகப்படுத்தினார்கள்.
இதுவும் ஒருவகையான விக்கிரக வழிபாடாகிவிட்டது.
கி.பி 1414ல் சபை நடத்துபவர் (அவர்கள் பாஷையில் ஃபாதர்) மாத்திரமே கர்த்தருடைய பந்தியில் இருக்கும் திராட்சை ரசத்தை குடிக்க வேண்டும் என்று கொண்டு வந்தார்கள்.
வேதமோ அப்பமும் இரசமும் சாப்பிடவேண்டும் என்று சொல்கிறது (1கொரி. 11:26)
இப்படி ஏராளம் ஏராளம் ஏராளம் வித்தியாசங்கள் உண்டு.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
கத்தோலிக்கர்கள் வேதாகமத்தை கையில் வைத்துக்கொண்டாலும் - அதனுள் உள்ள கிறிஸ்துவின் கட்டளைக்கு மாத்திரம் கீழ்படிவது அவசியம்.
*குறிப்பு:* கடந்த 100 வருடங்களில், இவர்களின் முறைமையை மற்ற பிரிவினரும் தங்களது பழக்கங்களில் சேர்த்துக்கொண்டது - கத்தோலிக்கரின் வெற்றி. ஆனால், அதே வேளையில் பரிதாபமான நிகழ்வு என்னவென்றால் - வேதாகமத்தை பற்றிக்கொண்டே, கிறிஸ்துவை விட்டு பிரிந்து செல்வதை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக