வெள்ளி, 4 அக்டோபர், 2019

#531 - இறைவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு சகோதரர் சகோதரிகள் இருப்பதாக நாம் வேதத்தில் படிக்கின்றோம், அவர்கள் மரியாள் யோசேப்பின் பிள்ளைகளா அல்லது அவர்களின் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளா?

#531 - *இறைவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு  சகோதரர் சகோதரிகள் இருப்பதாக நாம் வேதத்தில் படிக்கின்றோம், அவர்கள் மரியாள் யோசேப்பின் பிள்ளைகளா அல்லது அவர்களின் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளா?*

*பதில்*
இந்த பதிவு அநேகருக்கு ஆச்சரியத்தையும் முக்கியமாக கத்தோலிக்க நண்பர்களுக்கு மனசங்கடத்தையும் ஒருவேளை கடுங்கோபத்தையும் ஏற்படுத்தலாம். சொந்த அங்கீகரிப்பையும் விருப்பத்தையும் நம்பிக்கையையும் பத்து நிமிடம் ஒதுக்கி வைத்து – தங்கள் கரங்களில் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு இந்த பதிவை ஒப்பிட்டு படிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.

*மத்தேயு 13: 55-56 & மாற்கு 6:3*
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? … மத்தேயு 13: 55-56 & மாற்கு 6:3

மேலே கூறப்பட்ட வசனங்களில் – இயேசுவின் சொந்த சகோதர சகோதரிகள் அல்லவென்றும் அவருடைய இனத்தார்கள் என்றும் பலர் சொல்கின்றனர்.

*கவனமாக படிக்கவும்*
யோவான் 1:41 பேதுரு மற்றும் அவரது *சகோதரர்* என்ற இடத்தில் உபயோகப்படுத்தும் கிரேக்க வார்த்தை – அடல்ஃபோஸ்

கொலோ. 4:10ல்  பயன்படுத்தப்படும் *இனத்தான் அல்லது ஆங்கிலத்தில் கசின்* (Cousin) என்ற இடத்தில் வரும் கிரேக்க வார்த்தை அனப்சியோஸ்.

மத்தேயு 13: 55-56ல் "இது தச்சரின் மகன் அல்லவா? அவருடைய தாயார் மரியாள் என்றும் *அவருடைய* சகோதரர்களான யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா என்றும் அழைக்கப்படவில்லையா? (வ56) "*இவன்* சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?  இப்படியிருக்க, இதெல்லாம் *இவனுக்கு* எப்படி வந்தது? என்று சொல்லி, (57) *அவரைக்குறித்து* இடறலடைந்தார்கள். *இயேசு* அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

மேலே உள்ள வசனம் மிக தெளிவாய் இருக்கிறது என்று நம்புகிறேன்.

*இன்னும் வாசிக்கவும்*: மத்தேயு 12:46 & மாற்கு 3:31 & லூக்கா 8:19

இயேசுவானவர் இரத்த சம்பந்த சகோதரர்களுக்கும் விசுவாசத்தின் மூலம் கொண்ட சகோதரர்களுக்கும் இடையில் வேறுபடுத்துவதை கவனிக்கவும்.

இயேசு அல்ல வேறு யாரோ "தாய், சகோதரர்கள்" என்று அழைத்ததை நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையில் சகோதரர்கள் இல்லை என்றால், அம்மாவும் உண்மையில் இல்லை.

மத். 12:46ல் குறிப்பிடப்படும் அவருடைய தாயும் *சகோதரர்களும்* என்ற வார்த்தைக்கு அடல்ஃபோஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது யோ. 1:41ல் பயன்படுத்தப்பட்ட சகோதரர் என்ற பதம். அதாவது தன் சொந்த தாயாகிய மரியாளுக்கு பிறந்த தன்னுடைய இரத்தபந்த சகோதரரை குறிக்கிறது.

மத். 12:48 தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, மத். 12:49 தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!  மத். 12:50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார். 

*மேலும்* மத்தேயு 1: 23-25

(வ25) "அவள் தன் முதற்பேறான குமாரனைப் *பெறுமளவும் அவளை அறியாதிருந்து*, அவருக்கு இயேசு என்று பேரிட்டான். " என்பது தெளிவாக உள்ளது.

மத். 1:18 - இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் *கூடிவருமுன்னே*, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

*மேலும்* யோவான் 2:12 & யோவான் 7: 1 & அப்போஸ்தலர் 1:14 & கலாத்தியர் 1:19 & 1 கொரிந்தியர் 9: 5  வசனங்கள் எந்த கேள்விக்கும் அப்பாற்பட்டவை.

யோவான் 2:12 - அதன் பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் (அடல்ஃபோஸ்) அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.

யோவான் 7: 1 அப்பொழுது அவருடைய சகோதரர் (அடல்ஃபோஸ்) அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம்.

அப்போஸ்தலர் 1:14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட (அடல்ஃபோஸ்) ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

கலாத்தியர் 1:19  கர்த்தருடைய சகோதரனாகிய (அடல்ஃபோஸ்) யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.

1 கொரிந்தியர் 9:5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும்(அடல்ஃபோஸ்), கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

மேலே சொல்லப்பட்டவை போதுமான ஆதாரங்களுடம் வேதம் மிக தெளிவாய் சொல்கிறது.

கிறிஸ்து பிறக்கும் வரைக்கும்:
சகல பெண்களிலும் மேன்மையான பரிசுத்தமான தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மரியாள் என்கிற பாக்கியவதி – கன்னியாக இருந்தார்கள் என்றும் கிறிஸ்து பிறந்தபின் அவருக்கு மேலும் பிள்ளைகள் பிறந்தார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக