வெள்ளி, 5 ஜூலை, 2019

#256 - அன்னியபாஷை என்றால் என்ன?

#256 - *1) அன்னியபாஷை என்றால் என்ன?*

2) பல சபைகளில் ஒரு சில வார்த்தைகளையே பலரும் ஒன்றுபோலவே மிக உரத்த சத்தமாக (மிரட்டுவது/கத்துவது) பற்பல மாதங்களாக பேசுகிறார்கள் இது சரியா?

3) மற்றும் நம்மையும் பேசும்படி தூண்டுகிறார்கள் இது சரியா?

இவை குறித்து மிகத் தெளிவாக வேதம் என்ன சொல்கிறது என்று விளக்கம் தாருங்கள்.

*பதில்*:
இந்த காலகட்டத்தில் இந்த கேள்வி மிக அவசியமானது.

1) *அன்னியபாஷை என்றால் என்ன*?
பாஷை என்பது சமஸ்கிருத வார்த்தை.  அதன் தமிழ் வார்த்தை - மொழி என்பதாகும்.

அந்நிய பாஷை என்றால் – வேற்று மொழி என்று தமிழில் பொருள்படுகிறது.

தமிழர்கள் வெளி மாநிலங்கள் போகும் போது வேற்று மொழியில் பேச வேண்டிய அவசியத்தை அறிவோம்.

பட்டணத்தில் வேலை செய்பவர்கள் குறைந்தது 2 அந்நியபாஷை பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

நான் 5 அந்நியபாஷை பேசுகிறவன்.

2) *பல சபைகளில் ஒரு சில வார்த்தைகளையே பலரும் ஒன்றுபோலவே மிக உரத்த சத்தமாக (மிரட்டுவது/கத்துவது) பற்பல மாதங்களாக பேசுகிறார்கள் இது சரியா*?

சபைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக தெளிவாக அப்போஸ்தலன் பவுல் தன் நிருபத்தில் கூறுகிறார்.

1கொரி 14ம் அதிகாரத்தில் அதை நாம் காணமுடியும்.

பாஷை அல்லது மொழி என்பது பல வார்த்தைகளை கொண்டது.
ஒரு சில வார்த்தைகளை மாறி மாறி வித்தியாசமாக சொல்வது பாஷை அல்ல. அது வெறும் சப்தமே.

மொழிக்கு இலக்கணம் அவசியம். இதை குறித்ததான வசனங்களை கீழே வாசிக்கவும்:

1கொரி 14:27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது *இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்*.

1கொரி 14:28 *அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால்*, சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.

ஒட்டுமொத்தமாக சபையினுள் அனைவரும் கத்துவது – வேதத்திற்கு முரணானது !!  தவறான முறை !!

அந்நிய பாஷையில் – ஒரே ஒருவர் தான் பேச வேண்டுமாம் (வ27)

அதுவும் – வேறொவர் மொழி பெயர்க்க வேண்டுமாம் (வ27)

அவரே பேசிக்கொண்டு – அவரே மொழி பெயர்க்க கூடாது (வ28)

சபையில் – ஆக மொத்தம் 3 பேர் தான் அந்நிய பாஷையில் பேச வேண்டுமாம் !! (வ27)

அதுவும், மூவரும் ஒன்றாக (கூட்டாக) அல்ல - ஒருவர் பின் ஒருவர் பேச வேண்டும் (வ27)

3) *நம்மையும் பேசும்படி தூண்டுகிறார்கள் இது சரியா*?
 
வேதத்திற்கு முரணானவையினின்று விலகியிருங்கள்.

(மேலும் விபரங்களுக்கு கேள்வி #75 மற்றும் #83ன்  பதில்களை வாசித்து பார்க்கவும்)

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக