வியாழன், 18 நவம்பர், 2021

ஒன்றுமறியாத குழந்தைக்கு ஞானஸ்நானம்

*ஒன்றுமறியாத குழந்தைக்கு ஞானஸ்நானம்*

By : Eddy Joel Silsbee

 

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

யார் ஒருவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள்:

 

1- முதலாவது வசனத்தை கேட்க வேண்டும். ரோ. 10:13, யோ. 6:44-45

 

2-பின்பு, விசுவாசிக்க வேண்டும். யோ. 8:24, எபி. 11:6

 

3-பின்பு, மனம் திரும்ப வேண்டும், அப். 2:38, 17:30

 

4-பின்பு, தான் செய்த *பாவத்தை அல்ல* தன்னிலுள்ள விசுவாசத்தை அறிக்கையிடவேண்டும். ரோ. 10:9-10, அப். 8:37

 

5-பின்பு, மதம் மாறுதவதற்காக, சபையில் சேர்வதற்காகவல்ல, திருமணத்திற்காக அல்ல, கிறிஸ்தவ ஜாதியில் சேர்வதற்காக அல்ல, *பாவமன்னிப்பிற்காக ஞானஸ்நானம்* பெற்றுக் கொள்ளவேண்டும் மாற்கு 16:16, 1பேதுரு 3:21, அப். 2:38; 22:16

 

தனைத் தொடர்ந்து, முடிவு பரியந்தம் சத்தியத்தின்படி நடக்க வேண்டும். கொலோ. 1:21, வெளி. 2:10

 

மேற்சொன்ன இத்தனையையும் ஒரு *குழந்தை அல்லது சிறு பிள்ளை எப்படி* அறியும்?

 

ஒன்றுமறியாத பிஞ்சு குழந்தைக்கு ஞானஸ்நானம் என்பது வேதாகமத்தில் சொல்லப்படவேயில்லை !!

 

பாரம்பரியமும், மனுஷ அறிவு ஜீவிகளின் ஆலோசனையும் சேர்த்ததால் கிறிஸ்தவ *மதம்* வளர்ந்து இருக்கிறது !!

 

இக்காலங்களில் மிக அதிகமான களைகள் வளர்ந்து, செழித்து, மேலோங்கி, கதிர்களை சூழ்ந்து பெரும் காடாக படர்ந்துள்ளது.

 

சத்தியத்தை அறிந்தவர்கள் சொற்பமாக இருந்தாலும், வேதத்தை தெளிவாய் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

 

ஆறு இலட்சம் புருஷருக்கு அழைப்பிதழ் இருந்தபோதும் *அழைக்கப்பட்டவர்களில் கீழ்படிந்த இரண்டு பேர் மாத்திரமே காணானுக்குள் பிரவேசித்த* சம்பவத்தின் மூலம் தேவனின் அளவுகோலை மறக்கக்கூடாது !! எண். 14:30, 38; 26:65; 32:11-12

 

எது தூய்மை, எது கலப்படம் என்று ஜனங்களால் கண்டறிய முடியாதபடி ”கலப்படமே இக்காலங்களில் அவசியமும் சரியானதும்” என்றளவிற்கு பொய்யான மனித கோட்பாடுகள் பிரபலமாகி ஏராளமானோரை ஆட்கொண்டாலும் அனைத்தும் வேறோடு பிடுங்கப்படும் !!  மத். 15:13

 

பிரபலமானவர்களது கோட்பாடுகளையும் சுயபோதனையையுமல்ல  பிரபலமில்லையென்றாலும் இடுக்கமான வாசலான உண்மையான சத்தியத்தையே தேர்ந்தெடுங்கள். மத். 7:14

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/_sdJFkuufP8

 

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக