புதன், 3 ஏப்ரல், 2019

#83 - தீர்க்கதரிசனம், அந்நிய பாஷை பேச வேண்டும் என்று சொல்கிறார்களே - விளக்கவும்

#83 - *தீர்க்கதரிசனம், அந்நியபாஷை பேச வேண்டும் என்று சொல்கிறார்களே - விளக்கவும்* :

*பதில்:*
1-
தீர்க்கதரிசனம் என்பது - தேவனுடைய சித்தத்தை மனிதர்களுக்கு சொல்வது.
அதாவது - எது பாவம், எது சரியில்லாதது, எது தனக்கு பிரியம் என்பவை போன்றவைகளை தேவன் மனிதனுக்கு கற்றுக்கொடுத்தார்.

*அ*.
ஆதி காலங்களில் தேவன் *நேரிடையாக* - தனக்கு பயந்து கீழ்படிந்த மனிதர்கள் மூலமாக (உதாரணம் - ஆபிரகாம், ஈசாக்கு மூலமாக) மற்ற மனிதர்களுக்கு தகவல் கொடுத்தார்.

*ஆ*.
பின்னர் மோசே மூலமாக சகல கட்டளையும் (செய்யவேண்டியவை 248 & செய்யகூடாதவை 365) மொத்தம் 613 கட்டளைகளை (பிரதாக 10 கட்டளைகள் உட்பட) மோசே மூலமாக இஸ்ரவேலருக்கு கொடுத்தார் (நாம் கடைபிடிக்க அல்ல).

*இ*
பின்னர் தாம் தெரிந்தெடுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக மற்ற மனிதர்களுக்கு மேலும் உள்ள தம் சித்தங்களை / திட்டங்களை ஜனங்களுக்கு கொடுத்தார். (உதாரணத்திற்கு : எலியா, யோனா)

*ஈ*.
கிறிஸ்துவானவர் நேரிடையாக உலகத்தில் வந்து சகலவற்றையும் மனிதர்களுக்கு தொியபடுத்தினார் - இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.  (யோ. 20:31)

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.  யோ. 16:13

*உ*
பவுல் தீமோத்தேயுவுக்கு சொன்னதை கவனிக்கவும்:

2தீமோ. 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் *தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,  (3:17) அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்* பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

மேலும்
யூதா 1:3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு (ஓரேவிசை என்று பொருள் - ஆங்கிலத்தில் Once for all) ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.

மேலும்
2பேதுரு 1:3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே *ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய* யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,....

தேவனுடைய வார்த்தை என்றும், தேவன் எனக்கு வெளிப்படுத்தினார் என்றும் இனியும் ஒருவர் சொல்லும் பட்சத்தில் நாம் அவைகளை வெளிபடுத்தல் புஸ்தகத்திற்கு அடுத்த புஸ்தகமாக போட்டுக்கொள்ள வகை வகுக்கும் !!

*ஆனால்*
வெளி. 22:18 ...  நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்...

1கொரி. 4:6 ... எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும்,

என்கிற வசனங்கள் நம்மை எச்சரிப்பதால்
நாம் கவனமாய் இருக்கவேண்டும்.

வேதாகமத்தில் கொடுக்கப்பட்ட வசனங்கள் - தீர்க்கதரிசன வசனங்கள்
அந்த வசனங்களை எடுத்து *பேசுகிறவன் தீர்க்கதரிசி*
நாம் அதிகமாய் தீர்க்கதரிசனம் பேசுவது அநேகரை இரட்சிப்புக்குள்ளாக நடத்தும்

2-
*அந்நிய பாஷை* என்பதன் தமிழ் வார்த்தை - *வேற்று மொழி*
எவ்வளவுக்கதிகமாய் நாம் வேற்று மொழிகளை பேசுகிறோமே அவ்வளவுக்கதிகமாய் நாம் புதிய ஜனங்களை தேவனுக்கென்று ஆதாயபடுத்த முடியும்.

ஆங்கிலம், இந்தி, மலையாளம், அரபி, தமிழ் என்று *நான் 5 அந்நிய பாஷைகள்* பேசுகிறேன் - ஆகவே இந்த 5 விதமான ஜனங்களிடத்திலும் என்னால் தேவனுடைய வார்த்தையை எடுத்து செல்ல முடிகிறது.

இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். (1கொரி. 14:39)

சபையில் பேசவேண்டுமா என்பதை குறித்து ஏற்கனவே நான் தெளிவாய் எழுதியிருக்கிறேன் -
Link https://kaniyakulamcoc.blogspot.com/2019/03/blog-post_24.html

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக