வெள்ளி, 5 ஜூலை, 2019

#257 கேள்வி: ஆராதனையின் போது பாடலின் முடிவில் சீரற்ற (டப டப டப டப....) என்ற கைத்தாளம் சரியா?


#257
கேள்வி:

ஆராதனையின் போது  பாடலின் முடிவில் சீரற்ற (டப டப டப டப....) என்ற கைத்தாளம் சரியா? இதை குறித்து ஊழியக்காரரிடம் கேட்ட போது சங்கீதம்150:5 மேற்கோள் காட்டுகிறார். அதில் போரோசை என்பது சீரற்ற கைத்தாளத்தை சுட்டிக்காட்டுகிறதா?

இவை குறித்து தெளிவுபடுத்துங்கள்...

பதில்:

சங்கீதம் 150:5ல் வரும் கைதாளங்கள் என்பது – நம் இரு கையால் அடிக்கும் சப்தத்தை குறிக்கவில்லை !! 😊

மூல எபிரேய பாஷையில் சேலாட்ஸால் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் ஜால்ரா !!  ஆங்கிலத்தில் அதற்கு சிம்பால்ஸ் என்று சொல்வர்.

டிரம்ஸ் செட்டில் தகரம் போல 2அடி வட்டத்திற்கு வெண்கலத்தில் வைத்து “டாங்” என்று அடிப்பார்களே – அதை குறிக்கும் வார்த்தை !!!

நாம் கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்துவின் மரணத்தோடு – மோசேயின் பிரமானம் முடிவுற்றது (ரோ 10:4).

ஆராதனையில் (தொழுகையில்) கை தட்டலுக்கே இடமில்லை !! 

புதிய ஏற்பாட்டு ஆராதனை முறையில் – எங்குமே வேதாகமத்தில் கைதட்டலை பார்க்கமுடியாது !!

ஆகவே சங்கீதம் 150:5ன் முறையை கிறிஸ்தவர்கள் பின்பற்ற முடியாது. அந்த சட்டம் காலாவதியாகிவிட்டது.

இப்போதும் அது வேண்டும் என்று கடைபிடிப்பவர்கள் தங்களுக்கு கேடு வருவித்து கொள்கிறார்கள் (கலா 3:10)


நன்றி


Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 2:

Group 1:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக