வெள்ளி, 5 ஜூலை, 2019

#255 - ஆண்கள் மாத்திரமே பிரசங்கம் செய்ததாக நான் வேதத்தில் பழைய ஏற்பாட்டில் படித்திருக்கிறேன். தற்பொழுது அதிகமாக பெண்கள் பிரசங்கம் செய்கிறார்களே? இது சரியா? விளக்கவும்

#255 - *ஆண்கள் மாத்திரமே பிரசங்கம் செய்ததாக நான் வேதத்தில் பழைய ஏற்பாட்டில் படித்திருக்கிறேன். தற்பொழுது அதிகமாக பெண்கள் பிரசங்கம் செய்கிறார்களே? இது சரியா?* விளக்கவும்

*பதில்*:
ஆண்கள் மத்தியில் பெண்கள் சபையிலே (ஆண்களுக்கு) போதிப்பதற்கு தேவன் இடம் கொடுக்கவில்லை. அதற்கான காரணத்தையும் தெளிவாக சொல்லியிருக்கிறார் பவுல்.

மனைவிக்கு தலை கணவன்
கணவனுக்கு தலை கிறிஸ்து
கிறிஸ்துவிற்கு தலை பிதாவாகிய தேவன் (1 கொரி. 11:3)

தலை தான் மற்ற பாகங்களுக்கு ஆலோசனை கூறும்.
தலை சொல்லும் ஆலோசனைக்கு மற்ற பாகங்கள் கீழ்படியவேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனமாக வாசிக்கவும்:

1- *ஆதி சபையில் பெண்கள் தீர்க்கதரிசிகள் இருந்தார்கள்*
குமாரரும் குமாரத்திகலும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் என்று அப். 2:17ல் நாம் பார்க்க முடிகிறது.

1. பிலிப்புவின் குமாரத்திகள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் - அப். 21:9

2. கொரிந்து சபையில் தீர்க்கதரிசனம் சொல்லும் பெண்கள் இருந்தார்கள்  - 1 கொரி. 14:34

3. அன்னாள் – ஒரு தீர்க்கதரிசி (பழைய ஏற்பாட்டு காலம்) - லூக். 2:36


2- *ஆதி சபையில் ஊழியக்காரிகள் இருக்கவில்லையா*?
புதிய ஏற்பாட்டில் நாம் காணும் ஊழியக்காரியகள் :

A. தொற்காள் – அப். 9:36-39

B. இயேசுவிற்கு ஊழியம் செய்த பெண்கள் மத். 26:7-13

C. பெபேயாள் -  ரோமர் 16:1-2

D. எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் – பிலிப். 4:2-3

 
3- *அப்படியென்றால் பெண்கள் சபையில் பிரசங்கிக்கலாமே*?
முடியாது.
சபையில் ஆண்களும் இருப்பார்களே.

ஆண்களுக்கு போதிக்கும்படி பெண்களுக்கு வேதம் அனுமதி கொடுக்கவில்லை.

1 கொரி. 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

1 தீமோ. 2:12, உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

4- *பெண்கள் எங்குமே பிரசங்கிக்க முடியாதா*?
பெண்கள் *போதிக்கவேண்டும்* என்று வேதமே சொல்கிறது. தீத்து 2:4-5
பெண்கள் போதிப்பதையும் ஜெபிப்பதையும் வேதாகமம் தடைசெய்யவேயில்லை.

பெண்கள் போதித்தார்கள் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம். அப். 18:26; 21:9; Iகொரி. 11:5.

பொதுவான இடத்திலோ, சபையிலோ – ஆண்கள் கூடியிருக்கும் / கலந்திருக்கும் போது பெண்கள் பிரசங்கிக்க போதிக்க அனுமதியில்லை.

பெண்கள் குழுவிலோ, பிள்ளைகளின் மத்தியிலோ, தன் கணவனோடு கூட தனியாக வேறொரு ஆணுக்கு பிரசங்க்கவோ தடையில்லை (அப். 18:26)

*** ஆண்கள் மத்தியிலோ, ஆண்களும் கூடியிருக்கும் சபையிலோ – பெண்கள் பேசுவது அயோக்கியத்தனம் *** (1கொரி. 14:35)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக