புதன், 29 அக்டோபர், 2025

#1224 - நூற்றுக்கு அதிபதி இயேசுவை நேரடியாக பார்த்தார் என மத்தேயு 8:5லும், லூக்கா.7:3ல் மூப்பரை அனுப்பினார் என்றும் உள்ளதே… இதை எப்படி புரிந்துக்கொள்வது?

 #1224 - *நூற்றுக்கு அதிபதி இயேசுவை நேரடியாக பார்த்தார் என மத்தேயு 8:5லும், லூக்கா.7:3ல் மூப்பரை அனுப்பினார் என்றும் உள்ளதே… இதை எப்படி புரிந்துக்கொள்வது?*
 
*பதில்* : இது ஒரு முரண்பாடு போல தோன்றலாம். ஆனால், சம்பவத்தின் பார்வை மற்றும் பாணியில் உள்ள வேறுபாட்டை கவனிக்கவும்:
 
மத்தேயு மற்றும் லூக்கா இருவரும் ஒரே சம்பவத்தை விவரித்தாலும், அவர்கள் கவனம் வேறுபடுகிறது:
 
மத்தேயு சொல்லும்போது சுருக்கமாகவும் நேரடியாகவும் எழுதுகிறார். இது இயேசுவின் அதிகாரம் மற்றும் நேரடி தொடர்பு என்பதைக் காட்டும்.
 
லூக்கா சமூக விவரங்களில் அதிக கவனம் செலுத்தி, விபரமாய் எழுதுகிறேன் என்று தனது கடிதத்தை  துவங்கினாரே ! (லூக்கா 1:3-4)
 
ஆகவே, இருவருக்கு இடைப்பட்டதான மனிதர்கள் (யூத மூப்பர்கள்), பின்னர் நூற்றுக்கு அதிபதியின் நண்பர்கள் ஆகியோரை குறிப்பிடுகிறார். இதன் மூலம் கலாச்சார மற்றும் உறவுப் பின்புலத்தை வெளிப்படுத்துகிறார்.
 
அதாவது:
மத்தேயு அந்த நிகழ்வை நூற்றுக்கு அதிபதி நேரடியாக செய்தது போல சுருக்கமாக எழுதுகிறார், ஆனால் லூக்கா அவர் யூதர்களின் மூப்பர்கள் வழியே செயல்பட்டதை விளக்குகிறார்.
 
இவ்வாறு எழுதப்படுவது ஒரு பழமையான வழக்கமான சொற்தொடர். 
 
உதாரணங்கள்:
யோவான் 4:1-3அங்கே இயேசு ஞானஸ்நானம் கொடுத்தார் என கூறினாலும், அதனைத் தொடர்ந்து அவர் தாமே அல்ல, அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாய் விளக்குகிறது.
 
யாத்திராகமம் புத்தகத்தில் - மோசே, பார்வோனோடு ஆரோன் மூலம் பேசுகிறார்; ஆனாலும் வேதாகமம் “மோசே பேசினார்” என்று கூறுகிறது.
 
ஆகவே, மத்தேயுவின் விவரம் லூக்காவை மறுப்பதல்ல. 
 
ஒவ்வொரு நற்செய்தியாசிரியரும் தங்களின் முக்கிய செய்திக்கேற்ப எழுத்து வகையை அமைத்துள்ளனர்.
 
மத்தேயு – புறஜாதியானான நூற்றுக்கு அதிபதியின் நம்பிக்கை மீது கவனம் செலுத்துகிறார். அதாவது யூதரல்லாதவரும் இயேசுவின் அதிகாரத்தை ஏற்கிறார்கள் என்பதை காட்டுகிறார். இதை தனிப்பட்ட சந்திப்பு போல சுருக்கமாக எழுதுகிறார்.
 
லூக்கா - அந்த நூற்றுக்கு அதிபதியின் தாழ்மை மற்றும் தகுதியற்ற தன்மை பற்றி கவனம் செலுத்துகிறார். அவர், தான், இயேசுவை நேரில் சந்திக்கத் தகுதியற்றவனாக எண்ணியதையும் (லூக்கா 7:6) அதனிமித்தம் யூதர்களின் மூப்பர்களின் மூலம் நடந்ததாகவும் விவரிக்கிறார். 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக