வியாழன், 6 ஜூன், 2019

#201 - இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி சொல்லுங்கள்

#201 - *இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி சொல்லுங்கள். வெளிப்படுத்தல் 20:4 குறிப்பிட்டுள்ள ஆயிர வருட அரசாட்சி எதை குறிக்கின்றது?*

*பதில்*:
இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில்:

முதலாவதாக;
அது வரை மரித்த யாவரும் (நல்லோர் தீயோர்) புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்பட்டு எழுந்திருப்பார்கள்.

இரண்டாவதாக;
அந்த க்ஷனம் வரை உயிரோடிருப்பவர்களுக்கும் இந்த அழிவுள்ள சரீரம் மாற்றப்பட்டு அழிவில்லாத புதிய சரீரம் கொடுக்கப்படும்.

அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நின்று அவரவர் கிரியைக்குத்தக்க தீர்ப்பை பெற்று பரலோகமும் நரகமும் பெற்றுக்கொள்வர் (2கொரி 5:10, யோ. 5:28-29, ரோ. 2:6-10, 1கொரி 15:23, 51-53, 1தெச. 4:15-17)

கிறிஸ்துவின் வருகையில், அவரை ஏற்றுக்கொள்ளதவர்கள் அழிக்கப்படுவார்கள். மத். 3:11-12; லூக்கா 3:16,17

இரகசியமாக இயேசு கிறிஸ்து வந்து தன்னுடைய ஜனத்தை மாத்திரம் கூட்டி கொண்டு அர்மகெதோனில் போர் புரிந்து  எல்லா நாட்டு இராஜாங்கத்தையும் வீழ்த்தி தனக்கு கீழ் ஒரு இராஜ்ஜியத்தை ஏற்படுத்தி 1,000 வருஷம் அரசாள போகிறார் என்று சொல்லப்படும் பிணைக்கப்பட்ட கற்பனை கதைகளை நம்பி *ஏமாந்து போகாதீர்*.... அதைக் குறித்ததான தெளிவான விரிவான விளக்கத்தை அறிய நமது கேள்வி எண் 320ஐக் காணவும்.

..கிறிஸ்து வரும் போது - கண்கள் யாவும் அவரைக் காணும்... பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.. (வெளி. 1:7;  6:15-17; 18:15-19; மத். 24:30; லூக். 23:28-30

இயேசு கிறிஸ்து வரும் போது இந்த உலகம் அழிக்கப்படும்.

அனைவரையும் நியாத்தீர்ப்பில் நிறுத்துவார். அவருடைய கட்டளைக்கு கீழ்படிகிற நாம் பரலோகதிற்கும், கீழ்படியாத அனைவரும் நரகத்திற்கும் போவது உறுதி. 

அவர் பூமிக்கு ராஜாவாக போட்டி போட்டு இருந்தால் கிறிஸ்து சிலுவையில் அறையப்படாதபடி அவர் சீஷர்கள் அப்பொழுதே சண்டை போட்டிருப்பார்கள். (யோ. 18:36)

சகல துர்குணங்களையும் விட்டு அவர் வருகைக்கு தயாராவோம்!!

ஆண்டவரே சீக்கிரம் வாரும். 2பேதுரு 3:12-14
 
வேதத்தில் வரும் எண்கள் எல்லாம் அர்த்தம் உள்ளவை.... ஆயிரம் – முழுமையை குறிக்கிறது... பல தடவை ஒருவரை தொடர்பு கொள்ள முயற்சித்து கிடைக்காமல் சில நாள் சென்று அவரை நேரடியாக பார்த்தால் நாம் வழக்கமாக சொல்வோமே – என்னங்க ஆயரந்தடவ ஒங்களுக்கு ஃபோன் போட்டேன் என்று... அது எண்ணிக்கையை அல்ல – முழுமையை குறிக்கறது நினைவில் வைத்தால் ஆயிரம் வருட அரசாட்சி புரியும்.... இதை குறித்ததான மிக தெளிவான செய்தியின் லிங்க் இப்பதிவின் கடைசி வரியலி் உள்ளது – கேட்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக