சனி, 14 நவம்பர், 2026

#1259 – இளம் வயது மரணத்தைக் குறித்ததான கேள்விகளின் தொகுப்பு

#1259 – *இளம் வயது மரணத்தைக் குறித்ததான கேள்விகளின் தொகுப்பு*

1.⁠ ⁠இளம் வயதில் மரணம் ஏன் ஏற்படுகிறது? அதுவும் ஏன் விபத்தில் ஏற்படுகிறது?

2.⁠ ⁠கடவுளுக்கு பிடிதிருந்தால் அழைத்துச் செல்வாரா?

3.⁠ ⁠பிறக்கும் போதே ஒருவரது மரணமும் நிர்ணயிக்கப்படுகிறதா? எப்படி இறக்கவேண்டும் எந்த நேரம் இறக்க வேண்டும் என ஏற்கனவே எழுதப்பட்டதா?

4.⁠ ⁠தலைமுறை பாவம் பின் தொடருமா? தலைமுறை பாவம் இறைவனை முழுமையாக நம்புபவரை பாதிக்குமா? திருமுழுக்கின் போது தலைமுறை பாவம் மன்னிக்கப்படாதா?

5.⁠ ⁠ஒரு நல்ல பிள்ளையின் இளம் வயது மரணம் கடவுளின் விருப்ப அழைப்பா? ...... கடவுள் குழந்தை உலக பாவத்தில் விடக்கூடாது என அழைத்தாரா?
 
இந்தக் கேள்விகளுக்கு பைபிள் என்ன சொல்கிறது?
 
*பதில்* : விடையளிப்பதற்கு காலம் தாமதமானதற்காய் மன்னிக்கவும். கூடுதலான வேலைப் பளு!
 
#1- விபத்துகளோ, இளம் வயது மரணங்களோ தேவன் திட்டமிட்டு உருவாக்கும் தண்டனைகள் அல்ல.
பிரசங்கி 9:11 / லூக்கா 13:4
 
#2- தம்மை நேசிப்பவர்களைத் தண்டிக்கவோ, அவர்களின் குடும்பத்தைத் துயரத்தில் ஆழ்த்துவதோ அவருக்குப் பிரியமானதாய் இருக்குமோ? 
ஏனோக்கு - ஒரு விதிவிலக்கு ஆதியாகமம் 5:24
 
ஏனெனில், மனிதர்கள் பூமியில் நீண்ட ஆயுளுடன், நலமுடன் வாழ வேண்டும் என்பதையே தேவன் விரும்புகிறார் - சங்கீதம் 91:16
 
மரணத்தை விரும்புகிறவர் தேவன் அல்ல - எசேக்கியேல் 18:32
 
#3. - இல்லை.  "விதி" என்பதும் மாற்றவே முடியாது என்ற கொள்கைகளை வேதாகமம் ஆதரிக்கவில்லை.
சங்கீதம் 139:16 - வசனம், நம்மைக் குறித்ததான தேவனது முன்னறிவைக் குறிக்கிறதே தவிர, அவரே எல்லாவற்றையும் வலுக்கட்டாயமாக நடத்துகிறார் என்பதை அல்ல. 
 
அதாவது, மனிதர்கள் தங்கள் சுயாதீனத்தினால் எடுக்கப்போகும் முடிவுகளையும், அதனால் வரப்போகும் விளைவுகளையும் தேவன் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்.
 
அவரவரது பழக்கவழக்கம் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தையோ அல்லது நோயையோ தேவன் முன்பே எழுதிவைத்து நடத்துவதில்லை. மனிதர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் தேவன் கொடுத்துள்ளார் - உபாகமம் 30:19
 
#4. தலைமுறை பாவங்கள் ஞானஸ்நானத்தில் மன்னிக்கப்படுவதில்லையா என்ற கேள்விக்கான விடையை இன்னமும் பலர் சரியாய் புரிந்துக்கொள்வதில்லை. ஏனெனில் கிறிஸ்தவத்திற்கு அடிப்படை துவக்கமான இந்தச் செயலை லாவகமாய் மாற்றி மனிதர்களை வேதாகமத்தினின்று மாற்றிப்போட்டனர்.
 
வேதாகம முறை:
வசனத்தைக் கேட்டு, 
மனந்திரும்பி, 
பாவத்தை அல்ல விசுவாசத்தை அறிக்கையிட்டு,
பாவமன்னிப்பிற்கென ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்பொழுது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. அப். 22:16
 
வேதாகமத்தில் சொல்லப்பட்ட இந்த முறையை விட்டு தங்களது விருப்பத்தின்டி
வேதாகமத்தில் சொல்லப்படாத முறையாக 
- பிறந்த குழந்தையை தண்ணீரில் முக்கி எடுப்பதும், 
- தலையில் தண்ணீர் தெளித்துவிடுவதும்,
- மனம் மாறுதலின்றி முழுகி எடுப்பதும் (கிறிஸ்தவத்தில் வந்த பின்னரும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளப் பிரியப்படுவது, புரியாத வார்த்தைகள் உச்சரிப்பதை பரிசுத்தம் என நம்பிக்கொள்வது (1கொரி. 14:27-28)
 
இப்படிப்பட்டதான வேதாகமத்தில் அங்கீகரிக்கப்படாத பலவகைகளில் ஏதாவதொன்றில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்பொழுது, பரலோகத்தின் சட்டத்திற்கு நாம் விலகியிருக்கிறோம் என்பதை உணரவேண்டும்.
 
பாவமன்னிப்பிற்கான வழிமுறைகளை வேதாகமம் நமக்குத் துல்லியமான வழிமுறைகளையும் எச்சரிப்புகளையும் கொடுத்துள்ளது.
 
வேறொவரது பாவத்தை அடுத்தவர் சுமப்பதில்லை. தகப்பனுடைய அக்கிரமத்தை மகன் சுமப்பதில்லை, மகனுடைய அக்கிரமத்தைத் தகப்பன் சுமப்பதுமில்லை. 
 
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் என எசேக்கியேல் 18:20 மிகத் தெளிவாகக் கூறுகிறது. 
 
முன்னோர்களின் பாவங்களுக்காகப் பிள்ளைகளைக் தேவன் தண்டிப்பதில்லை. முன்னோர்களின் தவறான பழக்கவழக்கங்களின் விளைவுகள் பிள்ளைகளைப் பாதிக்கலாமே தவிர, அவர்களது பாவ வாழ்க்கையின் தெய்வீக கணக்கு அடுத்தவர்களைத் தொடர்வது இல்லை.
 
ஞானஸ்நானத்தில் மேல் சொன்ன சத்தியத்தின்படி ஒருவர் கீழ்படியும் பொழுது, அந்த நபர் புதிய சிருஷ்டியாகிறார் - 2 கொரிந்தியர் 5:17
 
கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை - ரோமர் 8:1
 
கிறிஸ்துவின் இரத்தம் “சகல பாவங்களையும்” நீக்கிச் சுத்திகரிக்கிறது - 1 யோவான் 1:7
 
#5. ஏசாயா 57:1 -ல் "நீதிமான் மடிந்துபோகிறான்... வரப்போகிற பொல்லாப்புக்குத் தப்பும்படி நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான்" என்ற வசனம் உள்ளது. இது அக்காலத்தில் இருந்த கொடிய அழிவுகளிலிருந்து சில நீதிமான்கள் தப்பியதைக் குறிக்கச் சொல்லப்பட்டதே தவிர, எல்லா நல்ல பிள்ளைகளையும் தேவன் இளம் வயதிலேயே எடுத்துக்கொள்வார் என்பதற்கான விதி அல்ல.
 
இளம் வயதில் ஒருவர் விபத்திலோ, நோயாலோ இறப்பது என்பது இவ்வுலகின் அழிவுக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் உட்பட்ட ஒரு துயரமான சம்பவம். 
 
பிரிவினால் மற்றவர்கள் துயரப்பட்டபொழுது இயேசு கிறிஸ்துவும் அதில் பங்கெடுத்ததை யோவான் 11:35 நமக்கு காண்பிக்கிறது. இளம் வயது மரணத்தை தேவன் விரும்பி ஏற்படுத்துவதில்லை.
 
மரணம் என்பது தேவன் உருவாக்கிய திட்டம் அல்ல; அது பாவத்தின் வழியாக உலகிற்குள் வந்த ஒரு "கடைசி சத்துரு" என 1 கொரிந்தியர் 15:26ல் காண்கிறோம். 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 

*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :* https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக