வெள்ளி, 8 ஏப்ரல், 2022

வனாந்திரமாய் காய்ந்தாலும் செழிப்பாய் மாற்ற வல்லவர்

*வனாந்திரமாய் காய்ந்தாலும் செழிப்பாய் மாற்ற வல்லவர்*

by : Eddy Joel Silsbee

 

சர்வ வல்லமையுள்ள தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

 

சமுத்திரத்தில் நாம் பார்க்கும் தண்ணீரின் அளவை விட மிக அதிகமாக மேகங்களில் அடக்கி வைக்கும் வல்லமை தேவனுக்கே உரியது. (ஆமோஸ் 5:8, யோபு 37:11)

 

யோபு 37:11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.

 

யோபு 36:27-28 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது. அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.

 

நினையாத நாளிகையிலும் அபரிதமாய் மழையை வருஷிக்க தேவனாலே மாத்திரம் கூடும்.

 

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறவர் அவர். யோபு 5:9

 

வறண்ட இடத்திலும் விடாய்த்த இடத்திலும் பரத்திலிருந்து ஆசீர்வதிப்பவர் அவர் ஒருவரே.

 

பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி, பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி, வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் குத்தவர் அவர். யோபு 38:25-27

 

ஆகவே, நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தேவன் அதை மாற்ற வல்லவர்.

 

அவரை மாத்திரம் பற்றிக்கொண்டு இருப்போம்.

 

வனாந்திரத்திலும் பாதையை உண்டு பண்ணி, மழையை வருஷிக்க அவராலேயே ஆகும். யோபு 38:26

 

விசுவாசத்தோடு உங்கள் விண்ணப்பத்தை அவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/ecEtQTr3suQ

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக