வெள்ளி, 7 ஜூன், 2019

#202 - லூக்கா 2:25 ல் வரும் சிமியோனும் அப் 13:1ல் வரும் சிமியோனும் ஒரே நபரா – விளக்கவும்.

#202 -  *லூக்கா 2:25 ல் வரும் சிமியோனும் அப் 13:1ல் வரும் சிமியோனும் ஒரே நபரா – விளக்கவும்*.

*பதில்:*
நாடு விட்டு நாடு வந்த பிரயாணத்தினால் பதிலளிக்க தாமதமானது – மன்னிக்கவும்.

1)
லூக்கா 2:25ல் உள்ள சிமியோன் – வயதானவர் (லூக். 2:26).

பிறந்து 8 நாளே ஆன பிள்ளை இயேசுவை நியாயபிரமான முறைமையின் படி எருசலேம் தேவாலயத்தில் கொண்டு வந்து இவர் கையில் கொடுத்ததன் பேரில் (லூக். 2:28) - சனகெரிப் சங்கத்தில் முக்கியமான ஆசாரியன் என்பதாக வேத வல்லுனர்கள் சரித்திர ரீதியாக சொல்கிறார்கள் – ஆனால் அதற்கான நேரடியான ஆதாரம் வேதத்தில் இல்லை.

2)
அப். 13:1ல் வரும் சிமியோன் கருப்பர் என்று அழைக்கப்படுகிறார் – தோல் நிறம் கருப்போ அல்லது தலை முடியின் நிறம் கருப்போ – குறிப்பிடபடவில்லை. அதே வேளையில் இவரை குறித்து இந்த இடத்தை தவிர வேறு எந்த இடத்திலும் வேதத்தில் சொல்லப்படவில்லை.

ஏறத்தாழ பதிமூன்று சிமியோன்களை வேதாகமத்தில் காணமுடியும் – இஸ்ரவேலில் பரவலாக சிமியோன் என்கிற பெயர் உபயோகபடுத்தப்படுகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக