#120 - *புதிய உடன்படிக்கையை குறித்த விளக்கம் தேவை*
*பதில்*:
இந்த கேள்வி நிச்சயமாக அநேகர் உணராத ஒன்று. தாங்கள் எதில்
இருக்கிறோம் என்றே அறியாமல் ஒரு கலவையாக பலர் இருக்கும் நிலையில் இந்த கேள்விக்காக
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பழைய உடன்படிக்கை என்பது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது (யாத்.
34:27-28)
புதிய உடன்படிக்கை – எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. மோசேயின்
நியாயபிரமாணத்தை இஸ்ரவேலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களுக்கும் காலாவதியாகிவிட்டது
(எரே. 31:31-32)
பழைய பிரமாணம் – முடிவுற்றதால் – புதிய பிரமாணம்
நடைமுறையில் உள்ளது (கொலோ. 2:14)
புதிய உடன்படிக்கையின் நிமித்தம் : யுதர்கள் புறஜாதியினர்
என்று எந்த வேறுபாடும் பார்க்க யாருக்கும் இடமில்லை – அனைவரும் ஒன்றாயினர் (எபே.
2:14-16)
புதிய உடன்படிக்கை ஏற்பட்ட நாழிகையிலிருந்து – நியாயபிரமாணம்
முடிவுற்றது / நிறைவுபெற்றது / காலாவதியானது (எபி. 10:9)
புதிய உடன்படிக்கையானது – கிறிஸ்து மரித்த வேளையில்
துவங்கியது (எபி. 9:16-17)
நாம் அனைவரும் கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படியவேண்டும் (ரோ.
7:6)
Gal. 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
Rom. 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான
ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு
நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
Heb. 7:18-19 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும்
பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும்
பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ
பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
Gal. 3:10-11 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண
புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன்
எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே
ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில்
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
பழைய உடன்படிக்கையில் நாம் ஒருபோதும் கீழ்பட்டவர்கள் அல்ல –
புதிய கட்டளை / புதிய உடன்படிக்கை / புதிய ஏற்பாட்டு / கிறிஸ்துவின் உபதேசத்தில்
நாம் வாழ வேண்டும்.
இந்தியாவில் உள்ள சட்டம் இந்தியாவில் மாத்திரம் செல்லும்.
வெளிநாடு போனால் – அந்த நாட்டு சட்டத்தை தான் நாம் கடைபிடிக்க
வேண்டும்.
அது போல நாம் இப்போது இஸ்ரவேலர்கள் அல்ல – கிறிஸ்தவர்கள்.
ஆகவே கிறிஸ்துவின் சட்டத்தை மாத்திரம் கடைபிடிக்கவேண்டும்
இரண்டையும் சேர்த்து கடைபிடிக்கலாம் என்று நாம் இடது
புறமும் வலது புறமும் வாகனத்தை ஓட்டினால் நமக்கு விபத்தும் ஏற்படும் – காவல் துறையும்
நம்மை தண்டித்துவிடும் !!
இந்த அருமையான கேள்விக்காய் நன்றி பிரதர்
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக