#121 - *யோவான் ஸ்நானன் வெட்டுக்கிளியை சாப்பிட்டு எப்படி வாழ்ந்தார்?*
யோவான் ஸ்நானன் வெட்டுக்கிளியை சாப்பிட்டு வாழ்ந்தார் என்று மத். 3:4ல் பார்க்கிறோமே – விளக்கவும்.
மத்தேயு 3:4 இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக்
கட்டிக்கொண்டிருந்தான், வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும்
அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
*பதில்:*
யோவான் ஸ்நானனின் வாழ்க்கை முறையை குறித்த தகவல்கள் மிக மிக குறைந்த அளவே
நாம் வேதாகமத்தில் காணமுடிகிறது.
நியாயபிரமாண முறையில் பிறந்தது முதல் ஒரு நசரேயனாக வளர்ந்தவர் யோவான்
(ஸ்நானன்) லூக். 1:15, எண். 6:1-12
எருசலேமுக்கும் எரிகோ வழியில் இருக்கும் சவக்கடல் இடையில் உள்ள மலை
பகுதியில் யோவான் தன் ஆரம்ப நாட்களில் வாழ்ந்து ஜனங்களை முன்னறிவித்தார் (மத். 3:1-12)
மிகவும் ஏழ்மையான கிரேக்க மக்கள் – இப்படிபட்ட முரட்டு உணவை சாப்பிடும்
பழக்கம் இருந்ததாக வரலாற்று தகவல் பார்க்க முடிகிறது.
வெட்டுகிளிகளையும் காட்டு தேனையும் உண்டு வாழ்ந்த ஒரு மனுஷன் என்றால் – அது
அவருடைய அதீத ஏழ்மையையும் தாழ்மையையும் காண முடிகிறது. யோவான் பிறக்கும் போது
அவரது பெற்றோர் வயதானவர்கள் என்பது நமக்கு தெரிந்ததே. லூக். 1:80ல் சொல்லபடும் அவர்
தகப்பனார் சகரியாவை பின்பு எங்குமே சொல்லபடாததும் ஒரு குறிப்பு !!
ஆம் – அவர் வெட்டுகிளியை சாப்பிட்டு வாழ்ந்த தகவலை நாம் படிக்கும் போது
நமக்கு கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது – ஆனால் அது உண்மை தான். நியாயபிரமாணத்தின் படி
அது அனுமதிக்கப்பட்டிருக்கிறதையும் காண முடிகிறது !!
லேவி. 11:22 வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும்
கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு
என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக