வெள்ளி, 26 ஏப்ரல், 2019

#118 - சத்தியம் என்றால் என்ன?

#118 - *சத்தியம் என்றால் என்ன*?

*பதில்*: இரத்தின சுருக்கமாக சத்தியம் என்ற வடமொழி சொல்லிற்கு தமிழ் வார்த்தை *உண்மை*.

வேதாகம ரீதியில் சத்தியம்/உண்மை என்பது என்ன?
சத்தியம் என்பது மெய்யை ஊர்ஜீதப்படுத்துகிறதாயிருக்கிறது.

சத்தியம் என்பது மனிதனிடதிலிருந்து வருவதல்ல.. அது தேவனிடத்திலிருந்து வருகிறது.

தேவனே சத்தியத்தின் தேவன் (ஏசா. 65:16, 1 சாமு. 15:29)

தேவனுடைய வார்த்தையே சத்தியம் – சங். 119:142, 151, 160

இயேசு கிறிஸ்துவை விசாரித்தபோது ரோம் நகர அதிபர் பொந்தியு பிலாத்து இந்த கேள்வியைக் கேட்டார்.

இந்த கேள்வி நேர்மையாகவோ அல்லது கிண்டலாகவோ கேட்கப்பட்டிருந்தாலும், ஒரு விஷயம் நிச்சயம்: அது நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமான கேள்வி.

நாகரீகமும், கலாசாரமும், அதிபுத்தியும், எகத்தாளமும், எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கும், மற்றவர் சொல்வதை கேட்க மறுக்கும் எண்ணமும் அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் – இப்படிப்பட்ட கேள்வி மறுபடியும் பார்ப்பது மிக அவசியம் என்றே தோன்றுகிறது.

அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து போதகர் ஆகாதிருப்பீர்களாக என்று யாக்கோபு 3:1ல் பரிசுத்த ஆவியானவர் தெரிவித்திருக்கிறார்.

தனக்கு வந்த செய்தியானது தவறான போதனையா என்று வேதத்தோடு ஒப்பிட்டு கூட பார்க்க முடியாமல், அனுப்பியவர் மீது உள்ள நாட்டத்தாலும் நம்பிக்கையாலும் – வேதத்தின் சத்தியத்தை உணராமல் வந்த செய்தியை அப்படியே மற்றவர்களுக்கு Forward செய்பவர்களும் அனுப்பப்பட்ட தவறான உபதேசத்துக்கு தானும் கணக்கு சொல்ல வேண்டியவர்கள் என்பதை உணர வேண்டும்.

முக்கியமாக இந்த டிஜிட்டல் காலத்தில் மிக எளிதாக தவறான உபதேசங்கள் ஆயிரக்கணக்காண ஜனங்களை நொடிகளில் சேர்ந்து விடுகிறது.

சத்தியத்தின் பெயரால் ஊழியம் செய்பவர்களும் – இந்த கேள்வியை தாங்களே ஒரு முறை கேட்டு வேதத்தை ஆராய்ந்து ஒப்பிட்டு அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் நிச்சயமாய் உள்ளது.

சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வேதத்தில் இல்லை !!

சத்தியத்தை*யும்* அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32) என்றே உள்ளது. அவ்வாறே இயேசு சொன்னார்.

அதாவது பல காரியங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதோடு கூட சத்தியத்தை*யும்* அறிந்தீர்கள். நீங்கள் அறிந்த (இயேசு சொன்ன) *இந்த* சத்தியமே உங்களை விடுதலையாக்கும் என்றார். வேறு எதுவும் உங்களை மீட்காது என்பது திண்ணம்.

உண்மையே சரியான நிலவரத்தை ஊர்ஜீதப்படுத்தும்.

உதாரணமாக, தண்ணீர் 32 டிகிரியில் உறைந்து 212 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கொதிக்கிறது. இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது தான் உண்மை.

தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் நம்ப வேண்டியது அவசியம் (எபி. 11: 6).

ஏனென்றால் அவர் இருக்கிறார் என்ற சான்றுகள் நம்மைச் சுற்றிலும் எப்போதும் காணப்படுகின்றன (சங். 19:1; ரோமர் 1:20).
 
தேவனின் வார்த்தையே சத்தியம்.

சத்தியத்துடன் தொடர்புடைய பல கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டும்.

சத்தியம் என்ற சொல் உண்மையானதைக் குறிக்கிறது.

*முதலாவது*:
கள்ளத்தனமாகவோ போலியாகவோ உள்ளவை எதுவும் சத்தியம் என்ற தகுதியை பெற முடியாது.

*இரண்டாவதாக*:
சத்தியம் என்பது சீரானது, இணக்கமானது, அதாவது, சத்தியத்தில் எந்த முரண்பாடுகளும் இருக்க முடியாது.

*மூன்றாவதாக*:
சத்தியம் என்பது நிலைவரப்பட்ட தரத்திற்கு ஒத்துப்போகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உண்மை என்பது அளவீட்டின் அளவுகோலாகும்; அனைத்து சோதனைகளும் கருத்தரிக்கப்படும் விதி.  உண்மை என்பது நிறைவேற்றப்படும் முறை அல்லது அளவுகோல்.

தேவனே சத்தியம் (ஏசா. 65:16)

தேவன் எந்த காலத்திலும் எப்போதும் பொய் பேசமுடியாது (எபி. 6:18).

ஆகவே தான் இயேசு தம்முடைய சீஷர்களைப் பற்றி பிதாவிடம் ஜெபித்தார், உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் என்று. (யோவான் 17:17)

*சத்தியத்தை புரிந்துகொள்வது*:
தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று இயேசு உறுதிப்படுத்தினார் (யோவான் 17:17).
 
... கிருபையும் *சத்தியமும்* இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. யோ. 1:17

*கிறிஸ்துவுக்குள் சத்தியம்* இருக்கிறது. 1தீமோ. 2:7

...ஆவியினாலே *சத்தியத்திற்கு கீழ்படிந்தால்* ஆத்துமா சுத்தமாகிறது .. 1பேதுரு 1:22

*சத்தியத்தை* விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவீர்கள் .. 2தெச. 2:13

மோசம் போகிறவர்கள் *கிறிஸ்துவின் சத்தியத்தை* விட்டு விலகுவார்கள் 2தீமோ. 4:4
 
மோசம் போகிறவர்கள் *கிறிஸ்துவின் சத்தியத்திற்கு எதிர்த்து* நிற்பார்கள் 2தீமோ. 3:3

கெட்ட சிந்தையுள்ளவர்கள் *கிறிஸ்துவின் சத்தியம் இல்லாதவர்கள்* 1தீமோ. 6:5

*சத்தியம் இல்லாதவர்கள்* பிசாசினுடையவர்கள் யோ. 8:44

பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் – இயேசு கிறிஸ்துவின் போதனையில் / *சத்தியத்தில்* நிலைநிற்பார்கள். யோ. 16:13

*இயேசு கிறிஸ்துவே சத்தியம்*  யோ. 14:6

அவரே நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கி பரலோகம் கொண்டு செல்பவர். யோ. 8:31

சத்தியத்தை (இயேசு கிறிஸ்துவை) பற்றிக்கொள்வோம்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக