*பதில்*:
இரத்தின
சுருக்கமாக புரியாதவர்கள் புரிந்துகொள்ளும் படி எழுதுகிறேன்.
ஏகப்பட்ட
விளக்கங்களை கிருபை என்ற வார்த்தையை முன்னிட்டு பலரும் பலவகையாக சொல்ல வாய்ப்பு
உள்ளது.
அதன்
பொருளடக்கத்தை அல்லது அர்த்தத்தை கீழே கவனிக்கவும்.
இரக்கமும் - கிருபையையும்
இருவேறு வார்த்தைகள் – இருவேறு அர்த்தம் உள்ளது.
* செய்த
தவறுக்காக தண்டிக்காமல் விடுவது *இரக்கம்*.
தண்டனைகுறிய தன்
செயலை உணர்ந்து ஒப்புக்கொண்ட போது அதை மன்னித்தது மாத்திரம் அல்லாமல் மேன்மையான
தகுதியை அவருக்கு கொடுப்பது *கிருபை*.
Eph. 2:5 அக்கிரமங்களில்
மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;
எந்த
தகுதியுமேயில்லாமல் / வாங்க திராணியில்லாத போதும் விலைமதிக்கமுடியாத
விலையேறப்பெற்றதை- இலவசமாய் பெற்றுக்கொள்வது *கிருபை*.
உதாரணத்திற்கு:
வாழ்நாள் முழுதும் சம்பாதித்ததை சேர்த்துக்கொடுத்தாலும் பரலோகத்தில் ½ சென்ட் நிலம் கூட யாரும் வாங்க முடியாது.
ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் சித்தத்தின் படி வாழ்பவர்களுக்கு ஒரு
ஸ்தலத்தையே கொடுக்கிறேன் என்றது – *தேவனுடைய கிருபை* (யோ 14:2)
நரகத்தில்
தள்ளப்படவேண்டிய நம்மை - கிறிஸ்துவின் மூலமாக நம்மை மன்னித்து பரலோக பிள்ளைகளாய்
தேவன் நம்மை மாற்றியது அவர் நம்மீது காண்பித்த *கிருபை* !!
தேவனுடைய கிருபை இரட்சிப்பைக் கொண்டுவருகிறது - தீத்து 2: 11-12
இரட்சிப்பின் வழி குறுகியது - மத்தேயு 7: 13-14
இரட்சிப்பு தேவனுடைய வார்த்தையின் மூலம் வருகிறது - ரோமர் 1:16
தேவ கிருபையானது -
கிறிஸ்து நமக்காக மரித்தது.
நமக்கான கிறிஸ்துவின் சட்டம்
நித்திய ஜீவன் - ரோமர் 6:23
தேவ நீதி - ரோமர் 5:17
நாம் கீழ்ப்படியவில்லை என்றால், தேவனுடைய பரிசை
நிராகரித்து இழந்து விடுவோம் - II
தெசலோனிக்கேயர் 1:
8
இயேசு கிறிஸ்து ஜீவதண்ணீரை தருகிறவர் – நாம் கீழ்படிதலின் மூலம்
அதை பறுகுகிறோம் - யோவான் 4:14
அல்லேலூயா !!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :*
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய :*
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*வலைதளம் :*
http://www.kaniyakulamcoc.wordpress.com
*YouTube “வேதம் அறிவோம்” :*
https://www.youtube.com/joelsilsbee
-------------------------*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக